.

Pages

Thursday, February 28, 2013

வாகன விபத்தில் அதிரை வாலிபன் பலத்த காயம் !

அதிரை கீழத்தெரு – புதுக்குடி நெசவுத்தெருவைச் சார்ந்தவர் ஜெஹபர் அலி. இவர் டீக்கடை யூனுஸ் [ கடைத்தெரு ] அவர்களின் மருமகனார் ஆவார்.

இன்று [ 28-02-2013 ] மாலை 5.45 மணியளவில் பிலால் நகர் அருகே சேதுபெருவழிச்சாலையில் [ ECR  ] இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த டிராக்டர் மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக த.மு.மு.க ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தகவலறிந்த அதிரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து டிராக்டர் டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்துக்குள்ளான வாகனங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.ஏ.எல்.மெட்ரிக். பள்ளி : ஆண்டு விளையாட்டு விழா !

அதிரை ஏ.எல்.மெட்ரிக். பள்ளியில் இன்று [  28-02-2013 ] காலை மணியளவில் நடைபெற்ற ஆண்டுவிளையாட்டு விழாவில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்கள், ஆசிரியை ஆசிரியர்கள், மாணவ மாணவியர், பெற்றோர்கள் என பெரும்திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் 58 ஆம் ஆண்டு விளையாட்டு விழா !

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் இன்று [ 28-02-2013 ] காலை 9 மணியளவில் 58 ஆம் ஆண்டு விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் கல்லூரியின் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வர் முனைவர் ஏ. ஜலால் அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.
கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் முனைவர் முருகானந்தன் அவர்களால் விளையாட்டுத்துறையில் காதிர் முகைதீன் கல்லூரியின் சாதனைகள் குறித்து விரிவாக தனது உரையில் எடுத்துரைத்தார்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சிய அலுவலர் H. ரஹ்மத்துல்லாஹ் கான் அவர்கள் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கி கெளரவித்தார்.


பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர் வீராங்கனைகள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள், பேராசிரியப் பெருமக்கள், ஆய்வாக அலுவலர்கள், பொதுமக்கள் என பெரும்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Wednesday, February 27, 2013

அதிரையில் பழுதடைந்த டிரான்ஸ்பார்மர் மாற்றியமைக்கப்பட்டது !

அதிரை முத்தம்மாள் தெரு, MSM நகர், ஷப்னம் லேன், KSA லேன் உள்ளடக்கிய ஆதம் நகர் ஆகிய பகுதிகளோடு காதிர் முகைதீன் கல்லூரி, காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ரைஸ் மில் மற்றும் சேது பெருவழிச்சாலையில் அமைந்துள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு, முத்தம்மாள் தெரு எதிரே இருக்கின்ற டிரான்ஸ்பார்மர் மூலம் மின் விநியோகம் செய்யப்பட்டு வந்தன.

இந்த டிரான்ஸ்பார்மரில் கூடுதல் இணைப்பின் காரணமாக அடிக்கடி பழுதடைந்தது விடுகிறது. மின்சார ஊழியர்கள் டிரான்ஸ்பார்மரில் எற்பட்ட பழுதை சரி செய்த சில மணி நேரங்களிலேயே மீண்டும் பழுதடைந்தது விடுகிறது. இதனால் இந்தப்பகுதியில் வாழும் பொதுமக்கள் வர்த்தகர்கள், மாணவ மாணவிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தப் பிரச்சனை தொடர்பாக 'மனித உரிமைக்காவலர்' KMA ஜமால் முஹம்மது அவர்களின் கவனத்துக்கு எடுத்துச்சென்ற உடன் சம்பந்தப்பட்ட மின்சார ஊழியர்களை வரவழைத்து பழுதை சரி செய்வதற்குரிய முயற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

நிரந்தர நடவடிக்கையாக இந்த டிரான்ஸ்பார்மரில் உள்ள கூடுதல் இணைப்புகளை பிரித்து புதிதாக மற்றுமொரு டிரான்ஸ்பார்மர் அதே பகுதியில் பொறுத்த வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் கோரிக்கையாக இருந்தாலும் தற்காலிக நடவடிக்கையாக இன்று மாற்று டிரான்ஸ்பார்மர் அதில் பொறுத்திருப்பது இந்தப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு சற்று மகிழ்ச்சியளிப்பதாக இருக்கின்றது.

இந்தப்பணிகள் முழுமையடைவதற்காக இன்று பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை பிலால் நகர், முத்தம்மாள் தெரு, MSM நகர், ஷப்னம் லேன், KSA லேன் உள்ளடக்கிய ஆதம் நகர் ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் தடை செய்யப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் பல மணி நேர மின்வெட்டால் அதிரை மக்கள் அவதி :
அதிரையில் நாள் ஒன்றுக்கு பத்து மணி நேர மின்வெட்டு அமலில் உள்ளது. காலை 6 மணி முதல் 9 மணி வரை மீண்டும் மதியம் 12 மணி முதல் 4 மணி வரை, இரவு 6 மணி முதல் 7 மணி வரை, இரவு 9 மணி முதல் 10 மணி வரை, இரவு 12 மணி முதல் 1 மணி வரை மின் துண்டிப்பு அமலில் உள்ளது. இதனால் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் துவங்க உள்ளதையொட்டி மாணவர்கள் இரவு நேரத்தில் ஏற்படும் மின்வெட்டு காரணமாக படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் குடிநீர் விநியோகத்திலும் தடங்கள் ஏற்பட்டுள்ளது.

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் மாற்றுத் திறனாளிகளை ஊக்குவிக்கும் கருத்தரங்கு !

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் மாற்றுத் திறனாளிகளை ஊக்குவிக்கும் கருத்தரங்கு நேற்று [ 26-02-2013 ] வேதியியல்துறை ஆய்வு அரங்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வேதியியல் துறை இணைப்பேராசிரியர் முனைவர் ஏ.எம். உதுமான் முகைதீன் வரவேற்புரையாற்ற, கல்லூரி முதல்வர் முனைவர் ஏ. ஜலால் அவர்கள் தலைமையுரையாற்ற, பட்டுக்கோட்டை மருத்துவர் டாக்டர் எஸ். பாலகிருஷ்ணன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் சாதனை மனிதர் மாற்றுத்திறனாளி, ஓய்வு பெற்ற இந்தியன் வங்கி தலைமை காசளார் 'கலைமாமணி' எஸ். மாசிலாமணி அவர்கள் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டு மாணவர்களை ஊக்கமூட்டும் மாணவர்கள், ஏனைய மாணவ மாணவிகள், பேராசிரியப் பெருமக்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். கல்லூரிக் கண்காணிப்பாளர் எஸ். இரவிச்சந்திரன் நன்றியுரை வழங்கினார்.

அதிரை பிலால் நகரில் ADT நடத்தும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் !

அதிரை பிலால் நகரில் முதன் முதலாக அதிரை தாருத் தவ்ஹீத் நடத்தும் மாபெரும் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

காலம் :  01.03.2013 வெள்ளி மாலை 05:30 மணி

இடம் : இஸ்லாமிய பயிற்சி மையம் [ ITC ] எதிரில், பிலால் நகர்

தலைமை : அதிரை அஹமத் B.A.  அவர்கள் [ தலைவர் – ADT ]

முதன்மை உரை : மவ்லவி அப்துல் காதிர் மன்பயீ அவர்கள்
[ தலைப்பு : மருமைச் சிந்தனை ] 

சிறப்புரை : சகோ. கோவை அய்யூப் அவர்கள் [ மாநிலத் துணைத் தலைவர் – JAQH ]
[ தலைப்பு :  படைத்தவனின் சட்டங்களே படைப்பினங்களுக்குத் தேவை ]

நன்றியுரை : B. ஜமாலுத்தீன் அவர்கள்
[ துணைத்தலைவர் – ADT ] 

இறைவன் நாடினால் பெண்களுக்குப் போகவர வாகன வசதிகளும் தனி
இடமும் ஏற்பாடு செய்யப்படும்.

அனைவரும் வருக ! அறிவமுதம் பெருக !!

தொடர்புக்கு : 0091 9543577794

அன்புடன் அழைக்கும்,
அதிரை தாருத் தவ்ஹீத் [ ADT ]


Tuesday, February 26, 2013

பொறுத்திருந்து பாப்போமே ! என்னதான் ஆவுதுன்னு !?

ரயில்வே பட்ஜெட் – ஓர் அலசல் !
நாட்டை ஒருங்கிணைப்பதில் ரயில்வேயின் பணி மகத்தானது. நாட்டின் வளர்ச்சியில் ரயில்வே முக்கிய பங்காற்றுகிறது  என்ற உரையுடன் இன்று மக்களவையில் ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் மத்திய ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள ரயில்வே பட்ஜெட்டில்…
1. ரயில்வே தொடர்பாக புகார் தெரிவிக்கவும், பாதுகாப்பை அதிகரிக்கவும், ரயில்வே பற்றிய விவரங்களை கேட்டறிந்து கொள்ளவும் இலவச எண் 1800111321 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

2. இன்டர்நெட் மற்றும் மொபைல் போன் மூலம் 24 மணிநேரமும் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் வசதி ஏற்படுத்தப்படுவது. இணையம் மூலம் நிமிடத்திற்கு 7200 டிக்கெட்டுகள் பதிவு செய்யும் வகையில் மாற்றம் கொண்டு வருவது உள்ளிட்டவை. 

3. இந்திய ரயில்வேயில் புதிதாக 1.45 லட்சம் பேர் வேலைக்கு சேர்க்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது நிச்சயமாக பொதுமக்களுக்கு மகிழ்ச்சி தரும்.

4. மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் வகையில், ரயில் நிலையங்களில் சக்கர நாற்காலிகள், எஸ்க்லேட்டர்கள் ஏற்படுத்துவது.

5. ரயில்களில் வழங்கப்படும் உணவு சோதனைகூடங்களில் பரிசோதனை செய்து, ரயில்வே நிலைய சமையலறைகள் ஐ.எஸ்.ஓ. தரத்திற்கு உயர்த்தப்படுவது.

6. ரயில் குடிநீர் விஜயவாடா, நாக்பூர், பிலாஸ்பூர், அகமதாபாத்தில் ஆகிய இடங்களில் ஏற்படுத்த இருப்பது. நடப்பு ஆண்டில் 1040 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

7. ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் தூய்மையை பராமரிக்க புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ள இருப்பது.

8. பெரிய ரயில் நிலையங்களில் ஊனமுற்றோருக்கு புதிய வசதிகள் ஏற்படுத்த இருப்பது.

உள்ளிட்ட புதிய திட்டங்கள் பொதுமக்களுக்கு பயனுள்ளவையாக இருக்கும் என்று கருதினாலும்...

ரயில் கட்டணம் உயராது என அறிவித்துவிட்டு ரயில்வே முன்பதிவு கட்டணம், தட்கல், சூப்பர் பாஸ்ட் ரயில் கட்டணம் மட்டும் உயர்த்தப்படும் என்றும் மேலும் சேவை கட்டண உயர்வு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்பதும், சரக்கு கட்டணம் 5 சதவீதம் உயர்த்த இருப்பதும் பொதுமக்களுக்கு அதிர்ச்சி தரும் என்பதை மறுக்க இயலாது. 

தஞ்சை மாவட்டத்தினருக்கு சற்று மகிழ்ச்சி தரக்கூடியதாக உள்ளது கீழ் கண்ட புதிய அறிவிப்புகள்...
1. தஞ்சை - பட்டுக்கோட்டை புதிய ரயில் பாதை 

2. கோவையிலிருந்து திருச்சி, தஞ்சை வழியாக மன்னார்குடிக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்

3. சென்னை - தஞ்சை இடையே தினசரி ரயில்

திருவாரூர் – காரைக்குடி அகல ரயில் பாதை திட்டம் !?
கடந்த 30-12-2006 முதல் காரைக்குடி - திருவாரூர் வழியாக சென்னை வரை சென்று கொண்டிருந்த 'கம்பன் எக்ஸ்பிரஸ்' ரயிலை நிறுத்தியதையடுத்து திருவாரூர் - காரைக்குடி அகல இரயில் பாதைப் பணிகளை விரைவாக முடித்துதர வேண்டும் என்பது அதிரை, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் வாழும் சமூக ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தாலும் சமிபகாலமாக சில மாற்றங்கள் நடந்து வந்தன. குறிப்பாக கடந்த  [ 19-10-2012 ] அன்று முதல் மீட்டர்கேஜ் பாதையில் சென்று வந்த ரயில் போக்குவரத்து அடியோடு நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு மீட்டர் கேஜ் ரயில் பாதையில் உள்ள தண்டவாளங்களை பெயர்த்து எடுக்கும் பணிகளில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டும் வந்தது இந்தப்பகுதிகளில் வாழும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை தந்தது.

இதன்பிறகு இந்தப் பகுதிகளில் அகல ரயில் பாதைக்கான எந்தவொரு பணிகளும் தொடர்ந்து நடைபெறுவதற்குரிய எந்தவித அறிகுறியும் தென்படவில்லை என்பது பொதுமக்களை சற்று கவலையில் ஆழ்த்தி உள்ளது.

மேலும் நீண்ட ஆண்டுகளுக்கு முன்பே திருவாரூர் – காரைக்குடி அகல ரயில் பாதை திட்டத்தை பட்ஜெட்டில் அறிவித்தும், இதற்கு பின்பு அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் செயல்படுதப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியும், இந்தப் பணிகளை துரிதமாக செயல்படுத்தக் கோரியும் வருகின்ற [ 08-03-2013 ] அன்று வேலூர் பாராளுமன்ற தொகுதியின் உறுப்பினர் சகோ. அப்துல் ரஹ்மான் MP அவர்களின் தலைமையில், முஸ்லீம் லீக் - முத்துப்பேட்டை கிளையின் முக்கிய நிர்வாகிகளோடு பாராளுமன்றம் சென்று இந்திய ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் அவர்களை சந்திக்க உள்ளனர்.

பொறுத்திருந்து பாப்போமே ! என்னதான் ஆவுதுன்னு !?

சேக்கனா M. நிஜாம்

Monday, February 25, 2013

சென்னையில் மாபெரும் இஜ்திமா மாநாடு [ புகைப்படங்கள் ] !

சென்னை புறநகர் பகுதியான செங்குன்றம் பகுதியில் உள்ளது அலமாதி எனும் கிராமம். இங்கு கடந்த 2 நாட்களாக நடைபெற்ற இஸ்லாமிய இஜ்திமா மாநாட்டில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்றனர். இதற்காக பிரம்மாண்டமான முறையில் பல விஷேச ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள மைதானத்தில் பிரம்மாண்ட ராட்சத பந்தல்கள் போடப்பட்டு அதில் சக்தி வாய்ந்த சோடியம் விளக்குகள் மற்றும்  ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டிருந்தன. மைதானத்தின் உள்ளே உளு செய்வதற்காக கிரேன் மூலம் பள்ளங்கள் வெட்டப்பட்டு 4 இடங்களில் மிக நீளமான அஹல்கள் அமைக்கப்பட்டிருந்தன. உளு செய்வதற்காக மிக நீளமான பிளாஸ்டிக் பைப்புகள் பொருத்திய தண்ணீர் வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. சிறுநீர் கழிப்பதற்கு வசதியாகவும், மலம் கழிப்பதற்கு வசதியாகவும் தனித்தனியே பிளாஸ்டிக்கிலான ரெடிமேடு பாத்ரூம்கள் அமைக்கப்பட்டிருந்தன.

10 க்கும் மேற்பட்ட உணவகங்கள் அமைக்கப்பட்டு அதில் ஊர்வாரியாக  பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தது .உணவு டோகண் வாங்குவதற்காக நீண்ட வரிசையில் ஒன்றன்பின் ஒன்றாக உணவை வாங்கிச்சென்று ,சாப்பிடுவதர்காக அமைகப்படிருந்த  விஷேச பந்தலில் அமர்ந்து உணவருந்தினார்கள்.

இது தவிர பல சிற்றுண்டிக் கடைகளும் நீண்ட வரிசையில் அமைக்கப்படிருந்தன. இதற்காக தமிழக அரசின் சார்பில் 500 க்கும் மேற்பட்ட அரசு  பேருந்துகள் இயக்கப்பட்டிருந்தன  ,பேருந்துகள் அனைத்தும் மைதானத்தின் உள்ளே அணிவகுத்து  நின்றன . .ஒவ்வொரு பிரிவிற்கும் பொருப்புதாரிகள்  நியமிக்கப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன .இந்த இஜ்திமா மாநாட்டில்  சிறப்பு பயான் செய்வதற்காக டெல்லி பேஷ் இமாம் ,மற்றும் ஹைதராபாத் ,பெங்களுரு  ,போன்ற பகுதிகளிலிருந்து இமாம்கள் ,மௌலவிகள் ,உலமாக்கள் ,ஆலிம்கள்  வந்திருந்தனர்.

மாநாட்டு திடலை மத்திய உளவுத்துறையின் ஹெலிகாப்டர் வட்டமிட்ட வண்ணம்  இருந்தது. ஒரு சிறிய விளம்பரம் கூட இல்லாமல் அதுவும் சென்னை, காஞ்சிபுரம்  ,திருவள்ளூர் ,செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் மட்டுமே கலந்துகொண்ட  இந்த இஜ்திமா மாநாட்டில் எப்படி இத்தனை லட்சம் பேர் கலந்துகொண்டதை பார்த்த  அனைவரும் ஆச்சிரியத்தில் ஆழ்ந்துபோனார்கள். குறிப்பாக தமிழக மற்றும் அகில இந்திய அரசியல் வாதிகளின் புருவத்தை உயர்த்தசெய்துள்ளது.

அல்லாஹு அக்பர்... அல்லாஹு அக்பர்... அல்லாஹு அக்பர்...

நேரடி களத்தொகுப்பு : ஜே. ஷேக்பரீத் 
நன்றி : முத்துபேட்டை எக்ஸ்பிரஸ்

‘அம்மா’ திட்டம் : மக்களைத்தேடி வருவாய்த்துறை...

தாசில்தார் அலுவலகங்களுக்கு, பொதுமக்கள் அலைவதை குறைக்கும் வகையில், மக்கள் வசிக்கும் இடத்திற்கே, வருவாய்த் துறையினர் சென்று பணியாற்றும், 'அம்மா' திட்டம் [ AMMA : Assured Maximum Service to Marginal People in All Villages ] தமிழகத்தில் துவக்கப்படுகிறது.

முதியோர், விதவை பென்ஷன் பெறுவோர், பட்டா மாறுதல் வேண்டுவோர், பிறப்பு, இறப்பு, ஜாதி சான்று என, தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய, தாசில்தார் அலுவலகத்தை பொதுமக்கள் அணுக வேண்டி உள்ளது. எல்லா தாலுகா அலுவலகங்களிலும் தினமும், பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிவதை காணலாம்.

அங்குள்ள வருவாய்த் துறை அதிகாரிகளிடம் விண்ணப்பங்களை அளித்தால், விண்ணப்பம் மீண்டும் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் என, அதிகாரிகளுக்கு சென்று அவர்கள் பரிசீலித்து ஆய்வு செய்து சான்று, பட்டா உள்ளிட்டவற்றை வழங்க பரிந்துரைப்பர். இதற்கு நாள் கணக்கில் அலைய வேண்டியுள்ளது. அதிக அளவு லஞ்சம், ஊழலும் தலைவிரித்தாடுகிறது.

இந்நிலையில் வருவாய்த் துறை சார்பில், கிராமந்தோறும், வருவாய்த் துறை அதிகாரிகளே நேரடியாகச் சென்று, மக்களின் குறைகளைத் தீர்க்கும் புது திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அனைத்து கிராமங்களிலும் வாழும், கடை கோடி மக்களுக்கும் மிகையான சேவையை உறுதிப்படுத்துதல் - 'அம்மா திட்டம்' என, இந்த திட்டத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

வயதானோர், ஏழைகள், பணம், நேரம் செலவழித்து, தாசில்தார் அலுவலகங்களுக்கு சென்று, காத்திருப்பதை தவிர்க்கும் வகையில், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின்படி வாரத்தில் ஒரு நாள் ஒரு ஊராட்சியில் வருவாய்த் துறை சார்பில், அதிகாரிகள் சென்று முகாமிடுவர். அங்கு, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட, சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, வீட்டுமனை பட்டா, உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு, இறப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் ஆகியவற்றை, ஊராட்சியிலேயே ஆய்வு செய்து, அங்கேயே உடனடியாக வழங்கப்படும்.

இது தவிர குடும்ப அட்டை, குடிநீர் பிரச்னை, நிலம் சம்பந்தமான பிரச்னைகளை நேரில் ஆய்வு செய்து தீர்வு காணப்படுகிறது. மேலும் இதன் மூலம் வருவாய்த் துறையின் சேவை துரிதப்படுத்தப்படும். இது தவிர கலெக்டர் மற்றும் தாசில்தார் அலுவலகங்களில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் திங்கள் கிழமையில் நடத்தப்படுகிறது. இதிலும், பொதுமக்கள் மனுக்கள் அளிக்கலாம்.

மாவட்டத்தின் குறிப்பிட்ட கிராமத்தில், மாதத்தின் இரண்டாவது புதன் கிழமை, 'மக்கள் தொடர்பு முகாம்' நடத்தப்படுகிறது. இதில், கலெக்டர் தலைமையில், அந்த கிராமத்திற்கு அதிகாரிகள் சென்று பொதுமக்கள் குறைகளைக் கேட்பர்.

அதிரையில் ஓர் இனிய உதயம் : மதீனா நெட்வொர்க்ஸ்

இன்று [ 25-02-2013 ] முதல் அதிரையில் புதிய உதயமாக மதினா நெட்வொர்க்ஸ் நிறுவனம் செயல்பட துவங்கியது.
அப்போலோ சிறப்பு மருத்துவர் அதிரைக்கு வருகை !

சென்னை அப்போலோ மருத்துவனையின் சிறப்பு மருத்துவர் வருகை பற்றிய அறிவிப்பு !

Sunday, February 24, 2013

அதிரை காதிர் முகைதீன் கல்லூரி சார்பாக போலியோ விழிப்புணர்வு பேரணி !

இன்று [ 24-02-2013 ] தமிழகம் முழுவதும் இரண்டாம் கட்டமாக போலியோ சொட்டு மருந்து முகாம் காலை 7 மணி முதல் துவங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது. இதில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் சொட்டு மருந்துகள் வழங்கப்பட வேண்டும். இவற்றின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அதிரை நகரில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று பிரச்சாரத்தை மேற்கொண்டனர் காதிர் முகைதீன் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ மாணவிகள். முன்னதாக பேரணியை துவக்கி வைத்தார் கல்லூரி முதல்வர் முனைவர் ஏ. ஜலால் அவர்கள்.

நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியை ஷஃபிரா பேகம், பேராசிரியர் கா. செய்யது அஹமது கபீர், முனைவர் O. சாதிக், பேராசிரியர் மு. பிரேம் நவாஸ் ஆகியோர் சிறப்பாக பேரணியை வழிநடத்தி சென்றனர். இந்த பேரணியில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவியர் பெறும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

காதிர் முகைதீன் கல்லூரியில் புதிய தலைமுறை தொழில் முனைவோருக்கான பயிற்சி முகாம் !

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் [ 24-02-2013 ] ஞாயிறு அன்று புதிய தலைமுறை தொழில் முனைவோருக்கான ஊக்கப் பயிற்சி முகாம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முகாம் இயக்குனர் முனைவர் P. சிலார் முஹம்மது வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் முனைவர் A. ஜலால் அவர்கள் தலைமையுரையாற்றினார். வணிகவியல் துறை தலைவர் முனைவர் M. சீனி கமால் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். 

இதில் சிறப்பு பேச்சாளர்களாக முனைவர் R. விஜயலெட்சுமி, வணிகவியல் துறை இணைப் பேராசிரியர் சீதாலெட்சுமி [ ராமசாமி கல்லூரி,  திருச்சி ] மற்றும் முனைவர் E. முபாரக் அலி இணைப்பேராசிரியர் வணிகவியல் துறை, [ ஜமால் முஹம்மது கல்லூரி, திருச்சி ] ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை தொழில் முனைவோராக்க ஆலோசனை வழங்கினர்.

இறுதியில் இக்கல்லூரியின் வணிகவியல் துறை இணைப்பேராசிரியர் முனைவர் A. பீர் முகைதீன் நன்றியுரை நிகழ்த்தினார். இம்முகாம் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என கலந்து கொண்ட மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.மரண அறிவிப்பு [ பிலால் நகர் ] !

அதிரை பிலால் நகரைச் சார்ந்த சரபுதீன் அவர்களின் மகன் தெளபீக் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கத்தார் நாட்டில் வாகன விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி . இன்று [ 24-02-2013 ] காலமாகிவிட்டார்.

[ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ]

அன்னாரின் ஜனாஸா குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.

Saturday, February 23, 2013

டெங்கு விழிப்புணர்வு - குறும்படம் [ காணொளி ] !

டெங்கு விழிப்புணர்வு  - குறும்படம் !

பஞ்சனைகள் சுகம்
தன்னில்
பங்கு கேட்கும்
பாவிக் கொசு
பாயினில் படுக்கையிலே
பதுங்கி வந்த
பாவிக் கொசு
பாயோடு கிடத்திவிடும்
பாடையிலும் ஏற்றிவிடும்
பல்இழந்த
பாட்டியென்ன
பல் இல்லா
பாலகரென்ன
பல்லில்லாக்
கொசுக்கூட்டம்
பாடாய்
படுத்திவிடும்
சினம் கொண்ட
சிங்கமுண்டு
பயம் கொண்ட
சிங்கமுண்டா
கொசுவிடம்
கேட்டால்
கதை கதை யாய்
அது சொல்லும்
காலரா பேதி டெங்கு
கொசு இருக்கும் அங்கு
அலட்சியம் வேண்டாம்
இங்கு
ஊதிடுவான் சங்கு


நன்றி :
கவிதை - மு.செ.மு. சபீர் அஹமது
குறும்படம் - பொது சுகாதாரப்பிரிவு சேலம் மாநகராட்சி

TNTJ அதிரை கிளையின் சார்பாக குடும்ப நல மற்றும் மருத்துவ உதவிகள் !

தமிழக தவ்ஹீத் ஜமாத் - அதிரை கிளையின் சார்பாக வழங்கப்பட்ட குடும்ப நல மற்றும் மருத்துவ உதவிகள் விவரம்