Pages

Wednesday, March 13, 2013

அதிரையில் அதிசயம் ஒரு கிலோ கோழிக்கறி 90/- ரூபாய் !


அதிரையில் அதிசயமாக கடந்து சில நாட்களாகவே ஒரு கிலோ பிராய்லர் கோழி இறைச்சி ரூபாய் 90/- ராக விற்பனை செய்து வருகின்றனர் மேலத்தெருவில் அமைந்துள்ள நசுருதீன் கோழிக் கடையில் சல்லிசாக கிடைக்கும் கோழி இறைச்சியை வாங்குவதற்காக தினமும் கூட்டம் அலைமோதி வருகின்றன. 

இதுகுறித்து கடையின் உரிமையாளர் 'சின்னவன்' என்கிற சேக் நசுருதீன் அவர்களை அணுகி விசாரித்த வகையில்...

"அதிரையில் உள்ள மற்ற கடைகளில் ஒரு கிலோ கோழி இறைச்சி ரூபாய் 140/- முதல் ரூபாய் 180/- வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. எங்களின் வியாபாரத்தை விரிவாக்கம் செய்யும் நோக்கில் குறைந்த லாபம் அதிக விற்பனை என்ற திட்டத்தின் கீழ் முயற்சித்து வருகின்றோம் மேலும் நாங்கள் கோழிப்பண்ணைகளில் நேரடியாக சென்று கொள்முதல் செய்து வருவதால் பொதுமக்களுக்கு பயனுறும் வகையில் எங்களால் குறைந்த விலையில் விற்பனை செய்ய  முடிகின்றது. கடந்த சில நாட்களாகவே நமதூர் பொதுமக்கள் பல்வேறு தெருக்களிளிருந்து வருகை தந்து கோழி இறைச்சியை வாங்கிச் செல்கின்றனர். மேலும் ஆரோக்கியமான கோழிகளை கொள்முதல் செய்து அவற்றை பாதுகாத்து ஹலாலான முறையில் சுத்தப்படுத்தி விற்பனை செய்கின்றோம்." என்கிறார்.

டெலிபோன் செய்து ஆர்டர் செய்தால் இலவச டோர் டெலிவரி வசதியும் செய்து கொடுக்கின்றனர். நாமும் நமது பங்குக்கு ஒரு கிலோ கோழி இறைச்சி ஆர்டர் செய்துவிட்டு, அந்த இளைஞரின் தொழில் ஆர்வத்தை பாராட்டிவிட்டு அங்கிருந்து விடைபெற்றோம்.

தொடர்புக்கு : 9965240616







புகைப்படம் உதவி : அப்துல் ரஹ்மான்

7 comments:

  1. பயனுள்ள தகவலுக்கு நன்றி

    அதிரையில் துவங்கியது தர்பூசணி வியாபாரம், அதிரையர்கள் கலந்துகொண்ட திருமணம், அதிரையர்கள் பங்கேற்ற அ தி மு க பொதுக்கூட்டம், என்று பக்கங்களை நிறப்பும் இணைய தளங்களுக்கு மத்தியில் பொது மக்களுக்கு பயனுள்ள தகவல்களை தருவதில் அதிரை நீயுஸ் இணைய தளம் முதன்மையில் உள்ளது.

    ReplyDelete
  2. செய்தி அறியத்தந்தமைக்கு நன்றி.

    இந்த விலையில் எப்போதுமே கிடைக்குமா..?

    அல்லது குறிப்பிட்ட நாள் வரை மட்டுமா..?

    எப்படியோ நல்ல கோழிக்கறி நியாயமான விலையில் கிடைக்கிறதே.!

    கிடைக்கும் வரை லாபம் தானே..!

    ReplyDelete
  3. நல்லதோர் தகவல் நடுத்தரமக்களுக்கு பயன்படும்.

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  5. விலை எற்றம் என்று தான் நியூஸ் வரும் அதிசியமாக விலைகுறைவு என்பது 8வது அதிசயம்.................

    ReplyDelete
  6. மச்சான் சின்னவன்' சூப்பர்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...