Pages

Saturday, May 25, 2013

நடு இரவிலும் சமூகப்பணி செய்யும் அதிரை பேரூராட்சித் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் !

அதிரைப் பகுதியின் முக்கியப் பகுதிகளுக்கு அதிரை அருகேயுள்ள விவசாய கிரமமான விலாரிக்காடு பகுதியிலிருந்து அதிக திறன் கொண்ட நீர் மூழ்கி மோட்டார் பம்ப் மூலம் தண்ணீர் எடுத்து அதிரையில் இருக்கிற நீர் தேக்கத் தொட்டிகளில் சேமித்து வைத்து வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 17.5 HP திறன் கொண்ட இரண்டு நீர் மூழ்கி மோட்டார் பம்ப்கள் பழுதடைந்து விட்டன. இதனால் அதிரையின் முக்கியப் பகுதிகளுக்கு குறிப்பாக நடுத்தெரு, மேலத்தெரு, கீழத்தெரு, கடற்கரைத்தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிப்பதில் தடங்கள் ஏற்பட்டன.

பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைவதைக் கருத்தில் கொண்டு கடந்த இரண்டு நாட்களாகவே பழுதடைந்த மோட்டார் பம்புகளை சரி செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்ற வந்தன.

இந்தப் பணிகளில் தொய்வு ஏற்படாமல் இருக்க அதிரை பேரூராட்சித் தலைவர் SH. அஸ்லம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் முஹம்மது யூசுப், முஹம்மது ஷெரிப் ஆகியோர் உடனிருந்து இராப்பகலாக கவனித்து வந்தனர். நேற்று இரவுடன் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு பழுதடைந்த இரு மோட்டார் பம்புகளும் இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகிப்பதில் தடங்கள் ஏற்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.

10 comments:

 1. தற்போது மீடியாக்கள் உள்ளன நிஜாம் சாகுல் போன்ற பத்திரிக்கையாளர்கள் உள்ளனர் படம் பிடித்து வலைதளங்களில் போடுவதற்கு ஆனால் 1986 ஆம் ஆண்டு எங்கள் சுல்தாப்பா( மர்ஹும் ஹாஜி எம்,எம்.எஸ்.சுல்தான் அப்துல் காதர்) அவர்கள் சேர்மனாக இருந்த சமயம் இந்த மிளரிக்காடு பம்ப் நீரேற்று
  மையத்தின் நான்கு மோட்டர்ஹலுமே ஒரே நேரத்தில் பழுதடைந்துவிட்டது
  செய்தியை காதில் வாங்கியதும்மே சேர்மன் அவர்கள் நாளை எப்படி அதிரை
  மக்களுக்கு தண்ணீர் விநியோஹம் செய்ய போறோம் என்ற கவலையில்
  மயக்கமடைந்து கீழே விழுந்து விட்டார்கள் சிறிது நேரத்தில் சுதாரித்து எழுந்து இரவோடு இரவாஹா தங்கள் சொந்த மகிந்திரா வேனில் நான்கு மோட்டர்ஹளையும் கலட்டி கோயம்பத்தூருக்கு அனுப்பி ஒரே இரவில் சரி செய்துகொண்டு வரவேண்டும் என்று உத்தரவிட்டு இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து மிளரிகாடு நீரேற்று நிலையத்திலேயே தங்கி இருந்து மோட்டார் வந்தவுடன் அதை பொருத்தி தண்ணீர் தொட்டிக்கு தண்ணீர் எரியவுடந்தான் வீட்டிற்க்கே சென்றார்கள் அதுவரை அவர்களும் தூங்கவில்லை எங்கள் குடும்பமும் தூங்கவில்லை எங்கள் குடும்ப ஆண் உறுப்பினர்கள் அன்று இரவு முழுவதும் மிளரிக்கட்டில் தான் இருந்தோம் அதான் எம்.எம்.எஸ்.குடும்பம் வேலை முடியாமல் வீடு திரும்பமாட்டோம்
  இதேபோல் எங்கள் வஹாபப்பா ( மர்ஹும் ஹாஜி எம்.எம்,எஸ் அப்துல் வஹாப் ) சேர்மனாக இருந்தபோது இரண்டுமுறை பழுதடைந்துவிட்டது இரண்டுமுறையும் எங்கள் குடும்பமே தூங்காமல் அங்கிருந்து சரிசெய்து தண்ணீர் எற்றபட்டவுடந்தான் வீடு திரும்பியுள்ளனர் இந்த தண்ணீர்தொட்டி
  அதிரையில் வருவதற்கு காலஞ்சென்ற எங்கள் ஷேக் தாவுது அப்பா தனது முடியாதகாலத்திலும மணமாதிரியை எடுத்துகொண்டு
  தலைமைசெயலகதுக்கு நேரில் சென்று முதல்வர் எம்.ஜீ.ஆர் அவர்களை
  சந்தித்து அதிரை மக்கள் தண்ணீருக்கு படும் இன்னலை எடுத்துரைத்து போராடி பெற்று வந்ததுதான் இந்த தண்ணீர் தொட்டி அதனால்தான் முதல்வர் எம்.ஜி.ஆர்.அவர்கள் இந்த தண்ணீர் தொட்டியை திறந்துவைத்த விழா மேடையிலேயே இந்த தண்ணீர் தொட்டிக்கு எம்.எம்.எஸ்.ஷேக் தாவூது மறைக்காயார் நினைவு தண்ணீர் தொட்டி என்று பொருட்டு சென்றார்
  சும்மா பேசலாம் 40 ஆண்டுகாலம் என்ன செய்தார்கள் என்று செய்ததை சொல்ல 100 வலைத்தளங்கள் இருந்தாலும் பத்தாது இன்றைய இளைங்கர்கள் தெரிந்துகொள்ளட்டும் என்பதர்காஹ தொடர்புடைய சில சம்பவங்களை மட்டும் பஹிர்ந்துகொண்டேன்
  ReplyDelete
  Replies
  1. ம.மீ.செ. குடும்பத்தின் பல்லாண்டு கால ஆட்சி சாதனைகள் சேவைகள் பற்றி நீங்களும் எழுதி அனுப்புங்கள். நிச்சயம் அதிரை நியூசில் வெளியிடுவார்கள். நல்லவை நாளை வரலாற்றில் சேரட்டும். இப்போதையை சேர்மன் அவர்களுக்கும் வழிகாட்டுதலாக இருக்கட்டும். அன்று வலைதளம் இல்லாக் குறையை இன்று தொடராக எழுதி நினைவுபடுத்துவதன் மூலம் காங்கிரசும் புத்துயிர் பெற வழி கிடைக்கும்.

   Delete
 2. உண்மை உண்மையைக் கூறியதற்கு நன்றி !

  அதிரை நகரின் வளர்ச்சிக்காக மர்ஹூம் ஹாஜி MMS பிரதர்ஸ் அவர்கள் செய்த பணிகளை மறுக்கத்தான் முடியுமா ? அல்லது மறைக்க இயலுமா ?

  அன்னார்களுக்கு அதிரை மக்கள் என்றென்றும் நன்றி கடன் பட்டுள்ளோம்.

  செய்த பணிகளை பாராட்டுவதிலும், செய்த தவறுகளை தட்டிக் கேட்பதிலும் 'அதிரை நியூஸ்' என்றும் தயங்கியதில்லை.

  இறைவன் நாடினால் இவைகள் தொடரும்...

  ReplyDelete
 3. தற்போது மீடியாக்கள் உள்ளன நிஜாம் சாகுல் போன்ற பத்திரிக்கையாளர்கள் உள்ளனர் படம் பிடித்து வலைதளங்களில் போடுவதற்கு ஆனால் 1986 ஆம் ஆண்டு எங்கள் சுல்தாப்பா( மர்ஹும் ஹாஜி எம்,எம்.எஸ்.சுல்தான் அப்துல் காதர்) அவர்கள் சேர்மனாக இருந்த சமயம் இந்த மிளரிக்காடு பம்ப் நீரேற்று
  மையத்தின் நான்கு மோட்டர்ஹலுமே ஒரே நேரத்தில் பழுதடைந்துவிட்டது
  செய்தியை காதில் வாங்கியதும்மே சேர்மன் அவர்கள் நாளை எப்படி அதிரை
  மக்களுக்கு தண்ணீர் விநியோஹம் செய்ய போறோம் என்ற கவலையில்
  மயக்கமடைந்து கீழே விழுந்து விட்டார்கள் சிறிது நேரத்தில் சுதாரித்து எழுந்து இரவோடு இரவாஹா தங்கள் சொந்த மகிந்திரா வேனில் நான்கு மோட்டர்ஹளையும் கலட்டி கோயம்பத்தூருக்கு அனுப்பி ஒரே இரவில் சரி செய்துகொண்டு வரவேண்டும் என்று உத்தரவிட்டு இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து மிளரிகாடு நீரேற்று நிலையத்திலேயே தங்கி இருந்து மோட்டார் வந்தவுடன் அதை பொருத்தி தண்ணீர் தொட்டிக்கு தண்ணீர் எரியவுடந்தான் வீட்டிற்க்கே சென்றார்கள். சும்மா பேசலாம் 40 ஆண்டுகாலம் என்ன செய்தார்கள் என்று செய்ததை சொல்ல 100 வலைத்தளங்கள் இருந்தாலும் பத்தாது இன்றைய இளைங்கர்கள் தெரிந்துகொள்ளட்டும் என்பதர்காஹ. சிறிய திருத்தும் அப்துல் வஹாப் என்று கூர்வதை வீட அதிரை சிங்கம் எல்லோரின் அன்பின் சாட்சா என்று சொல்ல நான் பெருமை படுகிறேன்.

  ReplyDelete
 4. பதிவுக்கு நன்றி.

  UNMAI அவர்கள் சொல்வது அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மை, அதை யாரும் மறுக்கவோ அல்லது மறக்கவோ முடியாது. அவர்கள் அத்தனை பேரும் நல்ல சிந்ததனையாளர்கள் மட்டுமல்ல சாதனையாளர்களும்கூட, ஆனால் இன்று நம்மிடையே அவர்கள் இல்லாதது பெருங்குறையே.

  சாதனைகள் என்று வரும்போது பல பேர்கள் பாராட்டுவார்கள், சில பேர்கள் தூற்றுவார்கள் இது உலகமுழுக்க அல்ல ஒன்லி இந்தியாவில் மட்டும்தான்.

  நாம் எதையும் காதில் வாங்கவே கூடாது, நம் வேலையை பார்த்துக்கொண்டு நேரா போய்க்கொண்டே இருக்கணும்.

  எல்லோருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

  இப்படிக்கு.

  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

  ReplyDelete
 5. //உண்மைசொன்னது:
  1986 ஆம் ஆண்டு எங்கள் சுல்தாப்பா( மர்ஹும் ஹாஜி எம்,எம்.எஸ்.சுல்தான் அப்துல் காதர்) அவர்கள் சேர்மனாக இருந்த சமயம் இந்த மிளரிக்காடு பம்ப் நீரேற்று
  மையத்தின் நான்கு மோட்டர்ஹலுமே ஒரே நேரத்தில் பழுதடைந்துவிட்டது
  செய்தியை காதில் வாங்கியதும்மே சேர்மன் அவர்கள் நாளை எப்படி அதிரை
  மக்களுக்கு தண்ணீர் விநியோஹம் செய்ய போறோம் என்ற கவலையில்
  மயக்கமடைந்து கீழே விழுந்து விட்டார்கள் சிறிது நேரத்தில் சுதாரித்து எழுந்து இரவோடு இரவாஹா தங்கள் சொந்த மகிந்திரா வேனில் நான்கு மோட்டர்ஹளையும் கலட்டி கோயம்பத்தூருக்கு அனுப்பி ஒரே இரவில் சரி செய்துகொண்டு வரவேண்டும் என்று உத்தரவிட்டு இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து மிளரிகாடு நீரேற்று நிலையத்திலேயே தங்கி இருந்து மோட்டார் வந்தவுடன் அதை பொருத்தி தண்ணீர் தொட்டிக்கு தண்ணீர் எரியவுடந்தான் வீட்டிற்க்கே சென்றார்கள் அதுவரை அவர்களும் தூங்கவில்லை எங்கள் குடும்பமும் தூங்கவில்லை எங்கள் குடும்ப ஆண் உறுப்பினர்கள் அன்று இரவு முழுவதும் மிளரிக்கட்டில் தான் இருந்தோம் அதான் எம்.எம்.எஸ்.குடும்பம் வேலை முடியாமல் வீடு திரும்பமாட்டோம்//

  நம்மூரில் இருந்து கோயம்புத்துருக்கு தற்போது உள்ள தேசிய நெடுஞ்சாலை NH 67 வழியாக சென்றால் கிட்ட தட்ட ஆறு மணி நேரம் ஆகும் 1986 ல்என்றால் குறைந்தது 8லிருந்து 10மணிநேரம் ஆகும் குறைந்தது 8 மணி நேரம் என்றால் கூட போய் வர 16 மணி நேரம் பிடிக்கும் 4 மோட்டார் களை பழுது பார்க்க(தோரயம்மாக) 2 மணி நேரம் ஆகும் என்றால் கூட ஆகா மொத்தம் 18 மணி நேரம் பிடிக்கும்.அதன் பிறகு வந்து மோட்டார்களை மாற்ற வேண்டும் ஆது எப்படி ஒரே இரவில் சாத்தியம் ஆகும்.

  குறிப்பு :
  நான் கூறிய தொலைதூரத்தில் சந்தேகம் இருந்தால் இச்சுட்டியை சுடுக்கவும்:http://maps.google.ae/maps?hl=en&tab=wl

  இதில் தொட்டியில் தண்ணீர் அறிய கால அளவை குறிப்பிட வில்லை

  ReplyDelete
 6. தண்ணீர் தொட்டி மட்டும் அல்ல !!! ஏனைய ஊர் பேரூராட்சிகளை ஒப்பிடும் போது நமதூர் அதிரை பேரூராட்சிதான் முன் மாதிரியாக உள்ளது. நமதூரில் காலம் சென்ற எம்.எம்.எஸ் பிரதர்ஸ் செய்துவைத்து விட்ட பல பணிகள் மற்றும் பல விதமாக அதிரை மக்களுக்கு உதவுகிறது.

  பல திட்டங்களை அடுக்கிவைத்து கொண்டு போகாலாம்...ஆனால் தண்ணீர் தொட்டி இருந்தும் தண்ணீர் சரியாக வரவில்லை என்பதே உண்மை.

  காலம் கடந்தாலும் அவர்களின் சாதனைகள் அதிரை மக்களின் மனதில் என்றொன்றும் நிலைத்து இருக்கும்.

  ReplyDelete
 7. பதிவுக்கு நன்றி.
  எல்லோருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. M.M.S-பிரதர்ஸ் அவர்களுடைய சமுதாயப்பணியை முக்கியமாக வஹாப் சாச்சவை யாரும் மறக்க முடியாது. அது அதிரையின் பொற்காலம். இன்றைய சூழ்நிலையில் மக்களின் தேவைகளை சுயநலமில்லாமல் செய்து கொடுப்பவர்கள் யாராயினும் வரவேற்ப்போம்.

  ReplyDelete
 9. இப்பதவியில் இருப்பவர்களுக்கு இது ஒரு கடமை , இதை எல்லாம் இணையதளங்களில் இட்டால் தற்பெருமைகாகவே செய்கின்றனர் என்பது தெரிகின்றது . உண்மை அவர்கள் சொன்னது போல் எம்.எம் எஸ். குடும்பத்தினர் அவர்கள் இந்த ஊருக்கு செய்த தொண்டினை இணையதளங்களில் இட்டால் 100 இனையதளங்கள் பத்தாது

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...