Pages

Wednesday, June 12, 2013

கனரா வங்கியின் துரித நடவடிக்கை.

கடந்த 5 ஜூன் 2013 அன்று “அதிரையில் தாண்டவமாடும் கனரா வங்கி என்ற தலைப்பில் கனரா வங்கியில் நடந்து வரும் குறைகளை சுட்டிக் காட்டி புகைப்படத்துடன் கூடிய ஒரு பதிவை நமது வலை தளத்தில் செய்தியாக பதிவு செய்து இருந்தோம்.

இன்று அழைப்பின் பேரில் நான் அங்கு சென்றேன், வங்கி கிளை மேலாளரை சந்தித்து பேசினேன், முதல் கட்டமாக உடனடியாக வாடிக்கையாளர்களுக்கு குடி தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது.

கூடிய விரைவில்:-

.. டோக்கன் முறைகள்.

.. வங்கி உள்கட்டமைப்பை சரிசெய்து ஆண்கள் பெண்கள் தனித்தனியான இருக்கைகள்.

..  கூடுதல் தங்கநகை பெட்டக வசதிகள்.

இன்னும் அதிகமாக நாங்கள் வாடிக்கையாளர்கள் திருப்பதி அடையும் வகையில் எங்கள் கனரா வங்கி உங்களுக்கு எல்லா வசதிகளையும் செய்து தரும் என்று அவர் தெரிவித்தார்.

எங்கள் குறைகளை ஏற்று உடனடி நடவடிக்கை எடுக்கத் துவங்கிய அதிரை கனரா வங்கிக்கும், அதன் தலைமை மேலாளர், அதிரை கிளை மேலாளர் மற்றும் ஊழியர்கள் அனைவர்களுக்கும் பொது மக்கள் சார்பாக நன்றி கலந்த பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.  

இப்படிக்கு.
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.Mohamed Aliyar (Late)

6 comments:

 1. ஜமால் காக்காவா கொக்கா உங்களின் சமுக பணி தொடரட்டும்.எதையுமே மக்கள் முன் முன்வைதால்தான் முடிவுக்கு வருக்கிறது. மீடியாவும் உங்கள் போல் சமுக ஆர்வலர்கள் இருக்கும் வரை நிச்சயம் மக்களுக்கு நியாயம் கிடைக்கும்.

  ReplyDelete
 2. சபாஷ் கனரா வங்கியின் துரித நடவடிக்கையால் குடிநீர் வைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி...மேலும் சில நற்செயல்கள் விரைவில் அமலுக்கு வருமென்று எதிர்ப்பார்க்கிறோம்.

  அதிரை வலைத்தலத்தால் முடியாதது எதுவுமே இல்லை...

  ஒவ்வொரு காரியமும் புகைபடமிட்டுதான் சில வசதிகளை பெற வேண்டும் என்றாகி விட்டதால்...

  ஒவ்வொரு வலைதள நண்பர்களும் மூன்றாம் கண்ணுடன் (கேமரா) தான் நடமாட வேண்டி வரும் போல....வாழ்த்துக்கள் ஜமால் காக்கா

  ReplyDelete
 3. ஜமால் காக்காவின் முயற்சிக்கு கிடைத்த வெற்றிக்கு வாழ்த்துக்கள் .எனக்கு இன்று இரு சந்தோஷமான செய்திகள் முதல் செய்தி அருமை சகோதரர் நிஜாம் அவர்களுக்கு ஆண் குழைந்தை பிறந்த தகவல் மற்றொன்று ஜமால் காக்காவின் முயற்சிக்கு கனரா வங்கியின் துரித நடவடிக்கை .அருமை சகோதரர் சமுக ஆர்வலர் ஜமால் காக்கா மற்றும் தம்பி நிஜாமின் பனி தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. அன்பு சகோதரர் நிஜாம் அவர்களின் குழந்தை பிறந்த அன்றே மூன்று வெற்றி செய்திகளை தாங்கி வந்திருக்கிறார் சமுக ஆர்வலரின் குழந்தை அல்லவா முதலில் அவரது பகுதியான பிலால்நகர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தார் சாலை போடும் பணி தொடக்கம், .கனரா வங்கியின் துரித நடவடிக்கை, 10 வார்டு மக்களின் போராட்டம் வாபஸ் பேரூராட்சி உறுதி .மூன்றுமே வெற்றி செய்திகள் இன்ஷா அல்லாஹ் மென்மேலும் அவர் வளர வளர வெற்றி செய்திகளாக கொண்டு வந்து சேர்க்க வல்ல அல்லாஹுவிடம் துவா செய்வோம்மாக ஆமீன்

  ReplyDelete
 5. கத்தி முனையை வீட பேன்னா முனை மிக கூர்மையானது என நிருபித்து காண்பித்த காக்கா ஜமால் அவர்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்..........உங்கள் சமுதாய பனி சிறக்க எல்லாம் வல்ல அல்லாஹ் துணை புரிவானாக ஆமின்.

  ReplyDelete
 6. இப்பணிக்காக முழு மூச்சாய் முயற்சி செய்த K.M.A. ஜமால் முஹம்மது அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...