Pages

Saturday, June 29, 2013

நீண்ட இடைவெளிக்குப்பின் செய்னாங் குளத்தின் புனரமைப்பு பணிகள் மும்முரம் !

அதிரை பேரூராட்சியின் சார்பாக 2012-2013 ஆம் ஆண்டுக்கான நபார்டு நிதி உதவி திட்டத்தின் கீழ், கீழத்தெரு மஹல்லாவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள செய்னாங் குளம் – தடுப்பு சுவர் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்காக ரூபாய் 50 லட்சம் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டு, இந்த பணிகளுக்கான ஒப்பந்தமும் இறுதி செய்யப்பட்டும் கடந்த சில மாதங்களாக இதற்குரிய பணிகள் துவங்குவதற்குரிய எவ்வித முகாந்திரமும் தென்படாமலும், மேலும் இக்குளத்தில் கலக்கின்ற அசுத்தங்களாலும், குப்பைக்கழிவுகளாலும் சுகாதாரக்கேடு ஏற்பட்டு இந்தக்குளத்தை சுற்றி வசிக்கக்கூடிய பொதுமக்களுக்கு வைரஸ் தொற்று கிருமிகளால் நோய்கள் பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளதால், விரைவாகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்த இந்தப்பகுதி மக்களுக்கு சற்று ஆறுதலடைவது போல் உள்ளது கடந்த சில நாட்களாக செய்னாங் குளத்தின் புனரமைப்பு பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருவது.

இதற்காக இக்குளத்திலிருந்து அசுத்த நீர் வெளியேற்றப்பட்டு வருவதோடு மட்டுமல்லாமல் அக்குளத்தைச் சுற்றி தடுப்பு சுவர் அமைப்பதற்காக JCP இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு வருகின்றன.5 comments:

 1. பதிவுக்கு நன்றி.

  தகவலுக்கும் நன்றி.
  சந்தோஷமான செய்தி.

  இப்படிக்கு.

  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

  ReplyDelete
 2. நீண்ட காலத்திற்குப்பிறகு இக்குளத்திற்கு விடிவுகாலம் பிறந்துள்ளது மகிழ்ச்சிக்குரிய செய்தியே.!
  இக்குளத்தின் புரனமைப்புப் பணிகளுக்கு முயற்சித்த அனைவர்களுக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. மகிழ்ச்சியான செய்தி.நபார்டு வங்கி உதவியால் நல்ல விஷயம் நடக்கயுள்ளது.இவ்விசயதிர்க்கு பாடுபட்ட அனைவருக்கும் நன்றி.இப்பகுதி மக்கள் இனிமேலும் கழிவு நீரை குளத்துக்கு விடாமல் கழிவு நீர் வடிக்கால் மூலம் வெளியற்றவும்.நீர் நிலைகள் தான் நம் வாழ்வின் முதல் ஆதாரம்
  தி அதிரை நியூஸ்-க்கும் நன்றி
  -----------------------
  இம்ரான்.M.யூஸுப்
  துபாய்

  ReplyDelete
 4. இனிமேல் இக்குளத்தை அசுத்தப்படுத்தாமல் கழிவுநீர் குப்பை கூலங்களை கொட்டாமல் பாதுகாப்பது பொது மக்களின் கடமையாகும்.  ReplyDelete
 5. நமதூரில் பல ஆட்சி காலத்திற்குப்பிறகு பல திட்டங்கள் செயல்பட்டுவருகிறது மகிழ்ச்சிக்குரிய செய்தியே.! தம்பி S.H அஸ்லம் அவர்களின் துடிப்பான மக்கள் சேவைக்கும் அவர்களுடன் இணைந்து பணியாற்றும் மற்ற உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த
  நன்றியுடன் வாழ்த்துக்களும். தம்பி S.H அஸ்லம் அவர்களுக்கு அன்பான வேண்டுகோள் வருகிற நோன்பு நாட்களில் ஊர் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வுகளை ஒலிப்பெருக்கி, மற்றும் நோட்டிஸ் மூலமாகவும் செய்வதற்கு திட்டங்ககளை செய்தால் நன்றாக இருக்கும்.
  என்னுடைய கருத்துகளை தம்பி S.H அஸ்லம் அவர்களுக்கு தெரியப்படுத்தவும். நன்றி

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...