Pages

Monday, June 17, 2013

தக்வாப் பள்ளி மீன் மார்க்கெட்டில் புதிய கட்டிடப் பணிக்காக அடிக்கல் நாட்டு விழா !

அதிரையின் மிகப்பழமைவாய்ந்த பாரம்பரியமிக்க மிகப்பெரிய மார்க்கெட் தக்வாப் பள்ளி நிர்வாகத்தின் பராமரிப்பில் உள்ள மீன் மார்க்கெட் ஆகும். இந்த மார்க்கெட்டிற்கு வருகை தரும் பல்வேறு தரப்பினர் இங்கு விற்பனையாகும் பொருட்களை மொத்தமாகவும், சில்லறையாகவும் வாங்கிச் செல்வதுண்டு. இதனால் தினமும் இந்தப்பகுதி முழுவதும் பரப்பரப்புடன் காணப்படும்.

இங்கு அமைந்துள்ள ஒரு சில கடைகள் சுகாதாரமற்று காணப்படுவதை அவ்வப்போது சிலர் குறைபட்டுக்கூறினாலும், நீண்ட காலமாக பராமரிப்பின்றி காணப்படும் கடைகளின் சில பகுதிகள் இடிந்து விழும் நிலையிலேயே இருந்து வந்தன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட தக்வாப் பள்ளியின் புதிய நிர்வாகிகள் பழமைவாய்ந்த மீன் மார்க்கெட் பகுதியை புதுப்பித்து விரிவாக்கம் செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். இதற்காக அதிரைவாழ் சமூக ஆர்வலர் பலரை அவ்வப்போது அணுகி அவர்களின் ஆக்கப்பூர்வமான ஆலோசனை மற்றும் ஒத்துழைப்புகளை பெற தவறியதில்லை.

அதன் தொடர்ச்சியாக தக்வாப் பள்ளியின் பல்வேறு பராமரிப்புகள், மீன் மார்க்கெட் ஏலம் ஆகியவற்றை வெற்றிகரமாக செயல்படுத்தியதோடு மட்டுமல்லாமல் எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள் பலவற்றை தீட்டி வந்தனர். அந்த திட்டங்களில் ஒன்றுதான் மீன் மார்க்கெட்டை விரிவாக்கம் செய்து அதில் புதிய கட்டிடம் ஒன்றை கட்டி எழுப்புவதாகும். இதற்காக மிகப்பிரமாண்டமாய் ரூபாய் 85 இலட்சம் பொருட்ச்செலவில் 120 கடைகளைக் கொண்ட வளாகம் கட்டுவதற்காக இன்று [ 17-06-2013 ] காலை 7 மணியளவில் அடிக்கல் நாட்டப்பட்டது.

இவ்விழாவில் ரஹ்மானியா அரபிக் கல்லூரியின் முதல்வர் முஹம்மது குட்டி ஆலிம், ஜாவியா கமிட்டித்தலைவர் இக்பால் ஹாஜியார், அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், தர்ஹா பேரவைத் தலைவர் நிஜாம் முஹம்மது, தக்வாப் பள்ளியின் முன்னாள் செயலாளர் உமர் தம்பி, அதிரை பேரூராட்சி உறுப்பினர்கள் ஆகியரோடு தக்வாப் பள்ளியின் நிர்வாகிகள் மற்றும் அதன் உறுப்பினர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

வந்திருந்த அனைவரையும் தக்வாப் பள்ளியின் நிர்வாகம் சார்பாக அன்புடன் வரவேற்பு அளிக்கப்பட்டன.
9 comments:

 1. பதிவுக்கு நன்றி.

  தகவலுக்கும் நன்றி.
  சந்தோஷமான செய்தி.

  இப்படிக்கு.

  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

  ReplyDelete
 2. தக்வா பள்ளி மார்கெட் பகுதியில் புதிய வணிக‌ வளாக கட்டிடத்திற்கு வந்திருந்த அனைவரையும் இந்த தளத்தின் வாய்லாக பார்த்ததில் மகிழ்ச்சி !!!

  ReplyDelete
 3. பதிவுக்கு நன்றி.!

  எப்படியோ இந்த பழம்பெரும் மார்கெட்டிற்கு நல்ல விடிவுகாலம் பிறந்து விட்டது.

  இதற்க்கு உறுதுணையாய் முயற்சித்த அனைவர்களுக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. பூமி பூஜை இஸ்லாத்தில்? அதுவும் மார்க்க? அறிஞர் ??? என்ன இஸ்லாம்??
  இவர்களின் இறைத்தூதர் சங்கரா சாரியாரா இல்லை சாயிபாவவா?
  இவர்கள் பாடம் நடத்தும் மதரசாவில் என்ன கற்றுக் கொடுக் கின்றனர் ?
  இதுபோன்ற இணைவைப்பவர்களுக்கு தொழுதால், தாடிவைத்தால் நரக நெருப்பு தீண்டாமல் விடாது, இன்னும் வாழும் கொஞ்ச நாட்களில் அல்லாஹ்விடம் இறையஞ்சி பவ மன்னிப்பு கேட்டுக் கொள்ளுங்கள்

  அல்லாஹ் மிக்க கருனையோன்.. மன்னிக்கக் கூடியவன்.

  ReplyDelete
 5. பூமி பூஜை இஸ்லாத்தில்? அதுவும் மார்க்க? அறிஞர் ??? என்ன இஸ்லாம்??
  இவர்களின் இறைத்தூதர் சங்கரா சாரியாரா இல்லை சாயிபாவவா?
  இவர்கள் பாடம் நடத்தும் மதரசாவில் என்ன கற்றுக் கொடுக் கின்றனர் ?
  இதுபோன்ற இணைவைப்பவர்களுக்கு தொழுதால், தாடிவைத்தால் நரக நெருப்பு தீண்டாமல் விடாது, இன்னும் வாழும் கொஞ்ச நாட்களில் அல்லாஹ்விடம் இறையஞ்சி பவ மன்னிப்பு கேட்டுக் கொள்ளுங்கள்

  அல்லாஹ் மிக்க கருனையோன்.. மன்னிக்கக் கூடியவன்.

  ReplyDelete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. எந்த பள்ளியில் இது நடந்ததோ அதே பள்ளியில் மௌலவி ஹைதர் அலி ஆலிம் அவர்கள் பயான் செய்கிறார்கள் அவருக்கு என்று ஒரு கூட்டமும் உள்ளது அவர்தான் தயவு தாசனையின்றி சத்தியத்தை சொல்லுகிறார் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளுகிறார்கள். அவர் மக்களை வைத்து அரசியல் செய்யவில்லை என்றால் இந்த இனை வைப்பு தீமையை வரும் வாரம் ஜூம்ஆ பயானிலும் தக்வா பள்ளியிலும் பயானிலும் இதை கண்டிப்பார்களோ

  ReplyDelete
 8. நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
  அல்லாஹ் தன் அடியார்களை மரணிக்கச் செய்வதின் மூலமாக ஓரேயடியாக மார்க்க அறிவை இல்லாமல் ஆக்கிவிடமாட்டான்.ஆனால் மார்க்கம் தெரிந்தவர்களை மரணிக்கச் செய்வதின் மூலமாக எந்த மார்க்க அறிஞரும் இல்லாத அளவுக்கு மார்க்கறிவை இல்லாமல் ஆக்குகிறான். இறுதியில் மக்கள் மடையர்களை தலைவர்களாக ஆக்குவார்கள். அவர்களிடத்தில் மார்க்கத் தீர்ப்பு கேட்கப்படும்போது மார்க்கத்தில் இல்லாததைத் தீர்ப்பாக வழங்கி தாங்களும் வழி கெட்டு மக்களையும் வழிகெடுப்பார்கள்.
  அறிவிப்பவர் ; அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல் ஆஸ்
  நூல்: புகாரி 100

  ReplyDelete
 9. Mohamed ashraf
  please visit
  about this article vivaatha medai in adirai nirupar

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...