Pages

Sunday, June 16, 2013

பாப்புலர் ப்ராண்ட் ஆஃப் இந்தியா அதிரை கிளையினர் நடத்திய கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வழிகாட்டி முகாம் !

பாப்புலர் ப்ராண்ட் ஆஃப் இந்தியா அதிரை கிளையினர் நடத்திய கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வழிகாட்டி முகாம் நடுத்தெரு செக்கடி மேடு அருகில் இன்று [ 16-06-2013 ] காலை முதல் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.

இதில் அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்காக ஆன்லைன் மூலம் பதிவு செய்து அதன் நகலையும் மாணவர்களுக்கு வழங்கி வருகின்றனர். இதில் ஏராளமான மாணவர்கள் தங்களின் பெற்றோருடன் முகாமில் கலந்து கொண்டு பயனுற்று வருகின்றனர்.

ஆர்வத்துடன் கலந்து கொள்ளும் மாணவர்களின் வசதிக்காக முகாமை நாளையும் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

பாப்புலர் ப்ராண்ட் ஆஃப் இந்தியாயின் நகர கிளை நிர்வாகிகள் பலர் மாணவர்களுக்கு வேண்டிய உதவியை செய்துவருகின்றனர்.நன்றி : தெளஃபிக்

9 comments:

 1. அரசின் கல்வி உதவித்தொகைக்கு ஏற்பாடு செய்யரதெல்லாம் சரிங்க...வரவேற்க வேண்டிய நற்செய்தி இம்முயற்சி செய்த PFI க்கு ஜசக்கல்லாஹ் ஹைர்

  இதே எப்படி (எந்த மாணவர்கள்) வாங்கலாம்?

  தகுதியான மாணவர்கள் யார்?

  என்னன்னா நகல் வேண்டும்?

  எந்த வகுப்பு மாணவர்கள் பெற வாய்ப்பிருக்கிறது?

  என்ற விவரங்களை தெரிவித்தால் பயனுள்ளதாக இருக்கும்

  ReplyDelete
 2. // இதே எப்படி (எந்த மாணவர்கள்) வாங்கலாம்?

  தகுதியான மாணவர்கள் யார்?

  என்னன்னா நகல் வேண்டும்?

  எந்த வகுப்பு மாணவர்கள் பெற வாய்ப்பிருக்கிறது?

  என்ற விவரங்களை தெரிவித்தால் பயனுள்ளதாக இருக்கும் //

  எட்டிப்பார்க்கும் தூரத்தில் முகாம் நடைபெறுவதால் நேரடியாகச்சென்று கேட்டுவைத்துவிட்டு வந்திடவேண்டியதுதான் :)

  ReplyDelete
 3. பதிவுக்கு நன்றி.

  தகவலுக்கும் நன்றி.

  இப்படிக்கு.

  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

  ReplyDelete
 4. \\எட்டிப்பார்க்கும் தூரத்தில் முகாம் நடைபெறுவதால் நேரடியாகச்சென்று கேட்டுவைத்துவிட்டு வந்திடவேண்டியதுதான் :)//

  சரியாக சொன்னீர் என்னைப்போன்று மக்கள் விபரம் தெரியாமல் நமக்கென்ன வந்தது என்றிருப்பர் ஆகவே தெரிந்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இந்த அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தேன்.

  தாங்கள் பதியும் முன் இந்த மாதிரியான கேள்விகளை கருத்துகளாக வந்துவிட கூடாது என்று எண்ணி விபரங்களை அளித்திருக்கலாம்.

  வெளிநாட்டில் வாழும் நம் சகோதர்கள் தன் வீட்டிற்கு இந்த தகவல்களை சரியாக சொல்லி அவர்களும் இந்த அரசின் கல்வி உதவித்தொகையை வாங்கிட வழிவகுக்கும்.

  ReplyDelete
 5. // வெளிநாட்டில் வாழும் நம் சகோதர்கள் தன் வீட்டிற்கு இந்த தகவல்களை சரியாக சொல்லி அவர்களும் இந்த அரசின் கல்வி உதவித்தொகையை வாங்கிட வழிவகுக்கும்.//

  நினைவூட்டியதற்கு மிக்க நன்றி அன்புச்சகோதரர் அதிரைத் தென்றல் இர்பான் அவர்கட்கு,

  கூடுதல் தகவல் பதிவில் இணைக்கப்பட்டுள்ளது.

  ReplyDelete
 6. இம்முயற்சி செய்த PFI க்கு ஜசக்கல்லாஹ் ஹைர்

  ReplyDelete
 7. \\கூடுதல் தகவல் பதிவில் இணைக்கப்பட்டுள்ளது.//

  அதிரை நியூஸ் குழுவிற்கு ஜசக்கல்லாஹ் ஹைர்

  ReplyDelete
 8. This comment has been removed by the author.

  ReplyDelete
 9. i std to 10th all students
  community certificate(சாதி சான்றிதழ்)
  income certificate(வருமான சான்றிதழ்)
  family card(குடும்ப அட்டை)
  birth certificate(பிறப்பு சான்றிதழ்)
  account book(கணக்கு புத்தகம்)
  photo 1(புகைப்படம் 1)  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...