Pages

Thursday, June 6, 2013

பிலால் நகர் சிறுவர்களின் குசும்பான விளையாட்டு !?

பள்ளித்தேர்வு முடிந்து அதன் முடிவுகளும் அறிவிக்கப்பட்டு விட்டன.  அனல் பறக்கும் வெயிலோடு கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து போன்ற போட்டிகளும், மார்க்க கல்வி பயிற்சி முகாம், சுற்றுலா, திருமண நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பங்குபெற்று கோடைகால விடுமுறையை கழித்துள்ள சிறுவர்களுக்காக பள்ளிக்கூடங்கள் மீண்டும் திறக்க உள்ள நிலையில் அதிரை பிலால் நகர் பகுதியில் வசிக்கும் சிறுவர்களின் குசும்பான விளையாட்டால் கந்தூரி எதிர்ப்பாளர்களுக்கு பெரும் சவாலாக அமையுமா !? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

கந்தூரி எதிர்ப்பாளர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் சமீபத்தில் காட்டுப்பள்ளி கந்துரி விழா நடைபெற்றது. இதன்பால் சிறுவர்கள் மிகுந்த ஈடுபாடு கொண்டார்களோ என்னவோ !? இதுபோல் நாமும் கந்துரி விழா எடுக்க வேண்டும் என்ற குசும்பான ஆசை அவர்களின் பிஞ்சு மனதில் துளிர்விட்டு இருக்க வேண்டும். இந்தப்பகுதியில் யாருடைய அடக்கஸ்தளமும் இல்லை என்ற போதிலும் இங்கு வசிக்கும் சிறுவர்கள் பொழுது போக்குக்காகவும், விளையாட்டாகவும் வருடந்தோறும் கந்துரி விழா !? எடுத்து வருவதுதான் வேடிக்கையாக அமைந்துள்ளது. 

இதன் தொடக்கமாக கொடிமரத்தை நட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக கந்துரி விழா எடுப்பதற்குரிய பணிகளிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அதிரையில் எதிர்காலத்தில் மற்றுமொரு சர்ச்சைக்குரிய பிரச்சனை உருவாகிவிடுமோ என்று எண்ணத் தோன்றினாலும் சிறுவர்கள் அதிகமதிகம் வசிக்கும் இந்தப் பகுதிகளில் கந்தூரி எதிர்ப்பாளர்கள் சற்றுக் கூடுதலாக கவனம் செலுத்துவது நலமாக அமையும்.

Abu YAZID


36 comments:

 1. பதிவுக்கு நன்றி.

  தகவலுக்கும் நன்றி.
  கவனிக்கப்பட வேண்டிய விஷயம், முளையிலேயே கில்லிடுத்துவிட்டால்...............!!!!!!??????

  இப்படிக்கு.

  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

  ReplyDelete
 2. அஸ்ஸலாமு அலைக்கும்

  தகவல் தந்தமைக்கு நன்றி

  இந்த புகைப்படம் எடுத்த கையுடன் நமது வேலை முடிந்தது என திரும்பிவிட்டிர்களா அல்லது அதை அப்புறப்படுத்திவிட்டிற்களா.

  ReplyDelete
 3. கந்தூரி. இதைப்பற்றி தவறான விளக்கங்களை வஹ்ஹாபி கொள்கையினர் தந்து பல சுன்னத்வல் ஜமாஅத் மக்களை தன் வஹ்ஹாபிய கொள்கையின்பால் ஈர்க்க முயற்சிக்கின்றனர். இதில் பாமரன் மட்டும் அல்லாது சிலரும் சிக்கியுள்ளது தெரிகிறது.

  இதுப்பற்றி
  Saturday, 11 May 2013
  தவ்ஹீத் அமைப்புகளின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் காட்டுப்பள்ளி கந்தூரி விழா ! என்ற செய்தியில் 35 கருத்துக்கள் வந்தது.

  அதில்.
  *********
  //கடந்த 525 வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகின்ற காட்டுப்பள்ளி கந்துரியை அதிரையில் வசிக்கும் மார்க்க அறிஞர்கள் பலர் விரும்பவில்லை என்றாலும் அவர்கள் தங்களின் எதிர்ப்பையோ / ஆதரவையோ பகிரங்கமாக தெரியப்படுத்தியதில்லை.//

  என்ற செய்தியைப் படிக்கும்பொழுது, சில சிந்தனைகள் வந்ததை பதிவு செய்கிறேன்.

  525 வருடங்கள் என்றால் ஆலிம்கள் அனுமதியுடன்தான் நடந்திருக்கவேண்டும்.

  இடையில் சில மாற்றங்கள் அதில் உள்ளேபுகுந்துவிட்டது. அதனைக் நீக்கவேண்டும்.

  காரணம் நடதவேண்டியவர்கள் ஒதிங்கியதால் இருக்கலாம்.

  அதற்காக கந்தூரியே தவறானது என்றமுடிவுக்கு வருதுல் நாம் நம் முன்னோர்களை தவறானவர்கள் என்று கருதியதர்க்கு சமம்.

  மறைந்து வாழும்(இது அவரவர் தெளிவைப்பொருத்தது)

  மகான்களின் சரித்திரங்கள், அவர்களின் வழிகாட்டல்கள் இதனை கவிதைகள்(மவ்லிது) மூலம் அவர்களின் நினைவுதினத்தில் நினைவுபடுத்தி நல்வாழ்வு வாழவேண்டும் என்னும் செயல்பாடுகளே கந்தூரி வைபவம் ஆகும்.

  இதனை எப்படி யாரும் தடுப்பார்கள்.

  ஆலிம்கள் தவறுகளைத்தான் கூடாது என்பார்கள். ஆனால் கந்தூரியே கூடாது என்று சொல்லமாட்டார்கள். அவ்வாறு தவறு என்பவர்கள் சுன்னத் ஜமாஅத் அல்லாத வஹ்ஹாபிகள் ஆவார்கள். இன்றும்கூட அதுபோன்ற கந்தூரிகள் நடக்கின்றது. கந்தூரி அதிரையில் மட்டும் அல்ல இந்தியா முழுவதும் நடக்கின்றது. இஸ்லாம் இந்தியாவில் வந்த காலத்திலிருந்து நடந்து வருகின்றது. இதனை எப்படி தவறு என்பது?

  அனாச்சாரங்கள் என்றால் என்ன? அறிவார்ந்த பதிலை தேடுகிறேன்.

  ......உண்மைகள் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை. ஆனாலும் சில தவறுகளை நீக்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.அதற்காக அதனை வேரோடு பிடுங்க வேண்டும் என்பதில்லை, அது முடியாது!
  ***********
  மற்றும்,
  ***********
  //அல்லாஹ்வை தவிர வேறு எவரையும் வணங்க கூடாதென்று//

  இதில் யாருக்கும் இருக்கருத்து இல்லை. இந்த குழப்பம் தீரத்தான் சில கேள்விகள் கேட்டேன். இன்னமும் பதில் இல்லை......

  மீண்டும் எழுதுகிறேன்......

  வழிபாடு என்றால் என்ன?
  வணக்கம் என்றால் என்ன?
  அனாச்சாரம் என்றால் என்ன?
  *********
  இவ்வாறாக அத்தொடர் அடுத்த பதில் இல்லாமல் நின்றுவிட்டது.

  .... தொடரும்....

  ReplyDelete
 4. ...தொடர்ந்து படிக்கவும்....

  //இதன் தொடக்கமாக கொடிமரத்தை நட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக கந்துரி விழா எடுப்பதற்குரிய பணிகளிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.//

  கந்தூரி விழா என்றால், ஊர்வலம் வருதல், கொடி ஏற்றுதல் என்று முத்திரை ஏன் தவறாக குத்தவேண்டும்?


  ஊர்வலம் இது இடையில் சேர்க்கப்பட்டது (ஊர்வலத்தில் தவறானைவைகள் நீக்கப்படவேண்டும். இதில் மாற்றுக்கருத்து இல்லை) அக்காலத்தில் செய்திகள் அவ்வாறுதான் பரவும்.

  இக்காலத்திலும் ஊர்வலத்தை யார் விட்டார்கள்? கந்தூரி ஊர்வலம் தவறு என்பார்கள். ஆனாலும் அவர்கள் கொள்கை வளர்க்க ஊர்வலம் நடத்துவார்கள். பின் வருடங்கள் பல செல்லச் செல்ல அதிலும் பல தேவையில்லாதது புகலாம், புகும். வளர்ந்த தலைமுடியை முடிவெட்டி அழகுபடுத்த வேண்டும் அதற்காக முடியே வளராமல் செய்வது எப்பாடி தீர்வாகும்!

  கந்தூரி எதிர்ப்பாளர்கள், கந்தூரி ஆதரவாளர்கள். இதுவே தவறு. வஹ்ஹாபிய மார்க்கம் வேறு, சுன்னத்துவல் ஜமாஅத் மார்க்கம் வேறு. இரண்டும் நேர் எதிரிடையானது. எனவே எதிர்ப்பாளர்கள் என்பதே தவறு. குர்ஆன் அதில் வரும் 'லக்கும் தீனுக்கும் வலியதீன்' என்பதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் வஹ்ஹாபிகள் என்பதை யாரும் மறந்துவிடவேண்டாம்.
  வஹ்ஹாபிகள் தன்னை வஹ்ஹாபி என்றோ சுன்னத் ஜமாஅத் என்றோ சொல்லமாட்டார்கள்.
  வெளிக் கோலத்தில் கொஞ்சம் இருப்பார்கள் ஆனால் உள்ளத்தில் கொள்கையில் முற்றிலும் வேறு. அதனால்தான் சுன்னத் ஜமாஅத் மக்களை குழப்புவது அவகளுக்கு இலகுவானதாக இருக்கிறது.

  ReplyDelete
 5. இது போன்ற சின்ன விசயங்கள் கவனிக்கபடவேண்டும்.இதுவே பெரிய பாவத்திரிக்கு துணையாகும்.

  ReplyDelete
 6. வஹ்ஹாபிகள் வணக்கமும், வணக்கவழிமுறைகளும், சுன்னத் ஜமாஅத்துக்கள் வணக்கமும், வணக்கவழிமுறைகளும் முற்றிலும் வேறு.
  சுன்னத் ஜமாஅத் மக்கள் வலிமார்களின் கபுரை முத்தமிடும் போன்ற மரியாதைகளை வணக்கம் என்பார் வஹ்ஹபிகள்.அதாவது கபுர்வணங்கி என்பார்.
  அப்படியானால் வஹ்ஹாபி மார்க்கத்தினர் அல்லாஹ்வை அப்படித்தான் வணன்குகின்றனரோ!
  சுன்னத் ஜமாஅத்தினர்களின் மரியாதைச் செயல்கள் வஹ்ஹாபிகள் வணக்கும் முறைகளோ!
  ஆக அவர்களின் வணக்கம் முறையே வேறு.
  சொல்லவே வேண்டாம் அவர்கள் வணக்கவழிமுறைகள் முற்றிலும் வேறுபட்டது. அது எல்லோருக்கும் தெரியும். எனவே அவர்கள் மார்க்கம் வேறு. இவர்கள் மார்க்கம் வேறு. இதை புரிந்து ஒதுங்கினால் நிம்மதி நிலவும். பிளக்ஸ் செலவுகள்,போஸ்டர் செலவுகள், நோட்டிஸ் செலவுகள், லட்டர் பேடு செலவுகள் அவர்களுக்கு குறையும். அவர்கள் வஹ்ஹாபி மக்களுக்கு சொல்லவேண்டியத்தை ஏன் சுன்னத் ஜமாஅத் மக்களுக்கு சொல்லவேண்டும்?

  ReplyDelete
 7. தானும் நிம்மதியாக, அடுத்தவரும் மற்றும் ஊர் மக்களும் நிம்மதியாக வாழ்பவரே முஸ்லிம். அதைவிடுத்து அடுத்தவர், ஊர் மக்கள் நிம்மதியை குழப்புபவர் எப்படி முஸ்லிமாக இருக்கமுடியும்?

  ReplyDelete
 8. பிளாஸ்டிக் அல்லது டூப்ளிகேட் சமாதி உருவாகாமல் கண்காணிப்பது அதிரை நியூஸ் கேமராவின் நன்மை தரும் பணியாக இருக்கட்டும்.

  ReplyDelete
 9. \\கடந்த 525 வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகின்ற காட்டுப்பள்ளி கந்துரியை அதிரையில் வசிக்கும் மார்க்க அறிஞர்கள் பலர் விரும்பவில்லை என்றாலும் அவர்கள் தங்களின் எதிர்ப்பையோ ஆதரவையோ பகிரங்கமாக தெரியப்படுத்தியதில்லை\\
  இதனால் தான் இன்றைக்கு இந்த சீரழிவு என்பதை கந்துரிக்கு நண்பண் உணர வேண்டும்.
  படித்த அறிவுள்ள சிந்திக்க தகுந்த காலத்தில் இருந்து கொண்டு கந்துரியை ஆதரிப்பது வெக்கி தலைகுனிய வேண்டியுள்ளது.

  ReplyDelete
 10. வெக்கி தலைகுனிய வேண்டியுள்ளது.
  அமாம்!
  ஏற்கனவே unkalukku nanban என்று கருத்து ஒருவரிடமிருந்து வரும்பொழுது,படிப்பவர்களை குழப்புவதற்காக கம்பியுட்டர் வைரஸ்போல் படிப்பவர்களை குழப்ப 'உங்களுக்கு நண்பன்'( கந்துரிக்கு எதிரி)என்ற பெயரில் எதிர் கருத்துக்கள் எழுதுவதற்கு, அதிராம்பட்டினத்தார் வெக்கி தலைகுனிய வேண்டியுள்ளது.

  நோக்கமே குழப்பவேண்டும் என்பதுதான் தெரிகிறது.

  அன்றைய காலத்தில் எழுதப்பட்ட அறிவுகள்தான் இன்றும் வழிகாட்டுகிறது.மொழியே அன்றைய காலத்தில் வந்ததுதான். அன்றைய காலத்தில் வந்தவர்கள்தான் பெருமானார்கள், அவர்கள் என்றும் உலக பழ்களைக்கலகம்.
  இன்றயகாலத்தில் படித்தவர்கள் அதாவது நீங்கள் எழுதிய அறிவுள்ள சிந்திக்க தகுந்தவர்கள் வந்துதான் சுன்னத் ஜமாஅத்தினர் தொழுகையே இடையிடையே நின்று கையாட்டி, விரல் ஆட்டி, உடம்பு ஆட்டி
  இவ்வாறு அமைதியில் அல்லாஹ்வை தொழவிடாமல்
  அவர்கள் அவர்களது தொழுகை முறையை அமைத்துள்ளார்கள்.

  தொழுகை பாங்கு, இகாமத் நேரங்களை தன்வசதிக்கு தகுந்தாற்போல் மாற்றிவைத்துள்ளார்கள்.

  பாங்குபோல் இகாமத் சொல்கிறார்கள்.

  நோம்பில் சஹர் நேரங்களில் குழப்ப ஒரு பாங்கு.

  கந்தூரிக்கு பெண்கள் போனால் அனாச்சாரம்,ஆனால் அவர்கள் போடும் எல்லாவூர் மீட்டிங்குகளுக்கும் பெண்கள் அவசியம் போகவேண்டும். குறிப்பாக அரசாங்கத்திடம் உரிமைகளை கேட்க நாடு ரோட்டில், வெயிலில் பெண்கள் கைதூக்கி அது வேண்டும் இது வேண்டும் என்ற பெண்கள் பர்தாமுறை.
  இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

  இதற்கெல்லாம் வெட்கி தலைகுனிய வேண்டாமா?

  விளக்கமாக எழுதினாலும் எதிர்கவேண்டும் என்ற நிலைப்பாட்டால் எதயையும் மேலோட்டமாகவே படிக்கும் தன்மை எப்பொழுது மாறுமோ!....? விடைதெரியாத கேள்விகளில் இதுவும் ஒன்று.

  ReplyDelete
  Replies
  1. அஸ்ஸலாமு அழைக்கும்

   //நோம்பில் சஹர் நேரங்களில் குழப்ப ஒரு பாங்கு. //


   ஸஹர் பாங்கு

   நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஸஹர் பாங்கை அறிமுகம் செய்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (ரமளானில்) பிலால், (ஃபஜ்ர் நேரத்திற்கு முன்) இரவிலேயே பாங்கு சொல்வார்கள். எனவே, இப்னு உம்மி மக்தூம் அவர்கள் (ஃபஜ்ருக்கு) பாங்கு சொல்லும் வரை (சஹர் உணவு) உண்ணுங்கள்; பருகுங்கள் என்று கூறினார்கள்: அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல்: புகாரி 617

   பிலால் (ரலி) அவர்கள், (ஃபஜ்ர் நேரத்திற்கு முன்) இரவிலேயே பாங்கு சொல்வார்கள்; அப்போது நபி (ஸல்) அவர்கள், இப்னு உம்மி மக்தூம் பாங்கு சொல்லும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்! ஏனெனில், அவர் தாம் ஃபஜ்ர் (வைகறை) நேரம் வந்ததும் பாங்கு சொல்கிறார்! என்று குறிப்பிட்டார்கள். அறிவிப்போர்: ஆயிஷா (ரலி), இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1919

   இங்கே குழப்புவது யார் ?

   Delete
 11. கந்தூரிக்கு, இணை வைக்க துணை போகும் நண்பன் கவனிக்க!

  யார் குழப்புகிறார்கள் என்பது முக்கியமல்ல.

  நாம் குழம்பாமல் அறிவை பயன்படுத்தி மார்க்கத்தை விளங்கி நடப்பதே நல்ல நண்பனின் நாணயமாக இருக்க வேண்டும்.

  பின்னூட்டம் இடத்தெரிந்த நீங்கள் இன்னமும் பிற்போக்குத்தனமாக இருக்கலாமா?


  கந்தூரியில் நடக்கும் கூத்துகளை பார்த்து பாவம் சம்பாதிப்பது அவமானமா?

  அல்லது

  அரசாங்கத்திடம் உரிமையை நாடி தேவைகளை கேட்டுப் பெறுவது அவமானமா?

  மொழியைப் பற்றி பேசும் நீங்கள் ஒரு
  //பழ்களைக்கலகம்.//
  என்ற வார்த்தையை கூட சரியாக எழுத தெரியாதது பெரிய அவமானம். கோமாளித்தனம்,

  கண்ணை மூடி இணை வைப்பை ஆதரிப்பதை விட்டு விட்டு கம்ப்யூட்டர் காலத்தில் அல்லாஹ் தந்த அறிவை பயன்படுத்தி குர்ஆன் ஹதீஸை வைத்து தீர்மானம் செய்ய வேண்டும்.

  திருந்தி நல்ல நண்பனாக வேண்டும் என்பதே இந்த நண்பனின் வேண்டுகோள்.

  ReplyDelete
  Replies
  1. ///தானும் நிம்மதியாக, அடுத்தவரும் மற்றும் ஊர் மக்களும் நிம்மதியாக வாழ்பவரே முஸ்லிம். அதைவிடுத்து அடுத்தவர், ஊர் மக்கள் நிம்மதியை குழப்புபவர் எப்படி முஸ்லிமாக இருக்கமுடியும்?///

   கவனமாக இதனைப் படித்துவரும் நடுநிலை நேர்மையானவர்களே, மேகண்ட கருத்துக்கள் எல்லாம் உள்வாங்கியபின்,

   அவர்கள் எழுதுகிறார்கள்....

   //யார் குழப்புகிறார்கள் என்பது முக்கியமல்ல.//
   இதிலிருந்து அவர்கள் யார் என்பதை அவர்களே ஒப்புக்கொண்டார்கள்.

   அவர்கள் வஹ்ஹாபி என்பதையும் மறுப்பில்லாமல் ஒப்புக்கொண்டார்கள்.

   //குர்ஆன் ஹதீஸை வைத்து தீர்மானம் செய்ய வேண்டும்.//
   இப்பாடி எழுதுவார்கள், ஆனால்...
   ///குர்ஆன் அதில் வரும் 'லக்கும் தீனுக்கும் வலியதீன்' என்பதை ஏற்றுக்கொள்ளாதவர்கள்/// என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டவர்கள்.

   பெண்கள் உச்சிவெயிலில், நாடு ரோட்டில் அரசாங்கத்திடம் உரிமையை நாடி தேவைகளை கேட்டுப் பெறுவது அவமானமா? என்று கேட்பார்கள். இப்படி பெண்கள் பர்தாமுரைக்கு ஏற்ற ஹதீஸ்களை எங்கு கண்டார்கள் என்பது அவர்களின் புரியாததுகளில் ஒன்று. ஹதீஸ்களை பின்பற்றுகிறேன் என்று சொல்லும் அவர்களுக்கு மௌலவி
   ஷேக் அப்துல்லா ஜமாலி சொல்லும் ஹதீஸ்கள் ஏற்புடையது அன்று. ஆன்னல் அவரை கோமாளி என்பார்கள்.இவ்வாறு ஹதீஸ்களை ஒப்புக்கொண்டார்கள்.

   இணைவைத்தல் என்பார்கள்
   ///வழிபாடு என்றால் என்ன?
   வணக்கம் என்றால் என்ன?
   அனாச்சாரம் என்றால் என்ன?/// என்பன போன்ற கேள்விகளுக்கு கண்டுகொள்ளமாட்டார்கள்.
   ஏனென்றால்...
   ///விளக்கமாக எழுதினாலும் எதிர்கவேண்டும் என்ற நிலைப்பாட்டால் எதயையும் மேலோட்டமாகவே படிக்கும் தன்மை எப்பொழுது மாறுமோ!....? விடைதெரியாத கேள்விகளில் இதுவும் ஒன்று.///அப்படித்தானே!?


   புரிகின்றவர்கள் புரிந்தால் போதும். அவர்கள் புரியப்போவதில்லை!

   பாமரர்களை அவர்கள் வஹ்ஹாபியாக மற்ற எந்தமாதரிஎல்லாம் முயிச்சிக்கிரார்கள்.

   Delete
 12. அஸ்ஸலாமு அலைக்கும்

  தர்கா, கந்தூரி, இணைவைப்பு நண்பன் கவனிக்க!

  //தானும் நிம்மதியாக, அடுத்தவரும் மற்றும் ஊர் மக்களும் நிம்மதியாக வாழ்பவரே//
  இவ்வாறு ஊர் மக்கள், கபுரை வணங்கிக் கொண்டு அருகில் கூத்து நடனம் ரதம் எடுத்து மார்க்க விரோதங்களை பார்த்துக் கொண்டிருக்க இஸ்லாம் சொல்ல வில்லை. அறிந்ததை எத்தி வைக்க வேண்டியது கட்டாயம்.

  உங்கள் மார்க்கம் உங்களுக்கு என்று தெரிந்தும் இணைவைப்பு கூட்டத்தாரை தடுக்க வேண்டியது நமது பொறுப்பல்லவா?
  தன் பிள்ளை தனக்கு அறிந்ததை செய்யட்டும் என்று தப்பை எடுத்து சொல்லாமல் இருப்பீர்களா?
  பெண்கள் ரேசன் கடையில் பொருள் வாங்க செல்வது மார்க்கமல்ல, தன் தேவையை பெற போகிறார்கள். அது போல அரசிடமிருந்து கிடைக்க வேண்டியதை கோரிப் பெற போவதில் என்ன தப்பு கண்டீர்கள்.

  // வழிபாடு என்றால் என்ன? வணக்கம் என்றால் என்ன? அனாச்சாரம் என்றால் என்ன?// என்பதை நீங்கள் தான் மிகத் தெளிவாக ஆராய வேண்டும்.

  எதிர்க்க வேண்டிய நிலைப்பாட்டில் யார் என்பதை சற்று சிந்திப்பீராக! நன்கு ஆராய்ந்தால் நீங்களும் சேக் அப்துல்லா ஜமாலி அவர்களையும் நாளை எதிர்க்க ஆரம்பித்து விடுவீர்கள். அவருக்கும் உங்களுக்கும் உண்மையை விளங்க அல்லாஹ் அறிவை கொடுத்தருள்வானாக! ஆமீன்.

  ReplyDelete
 13. //இவ்வாறு ஊர் மக்கள், கபுரை வணங்கிக் கொண்டு//

  மகான்களின் அடக்க ஸ்தலத்தை உகப்பின் பேரில் மரியாதை செய்தால் கபுர் வணக்கம் என்று யார் சொன்னது?

  நீங்கள் உங்கள் குடும்பத்தாரை முத்தமிட்டது இலையா? அப்ப அது என்னவென்று சொல்வது.

  மரியாதைக்கும் வணக்கத்துக்கும் வித்தியாசம் தெரியவில்லை.அதற்குத்தான் நீங்கள் எப்படி வணங்குகிறீர்கள் என்பதை தெரிந்துகொள்ள 'வணக்கம் என்றால் என்ன?' என்று கேட்டதற்கு மழுப்புகிறீர்கள்.

  கபுரை முத்தமிடுதலை வணக்கம் என்றால்! வணக்கமுறை என்றால்!
  உங்கள் இறைவனை எந்த கபுரில் வைத்து வணக்குகிரீர்கள்?
  நீங்கள்தான் இறைவனுக்கு உருவம் உண்டு என்று சொன்னவர்கள்தானே! உங்களுக்கு உங்கள் இறைவன் கபுரில் இருக்கலாம்!

  எங்களுக்கு, எங்கள் இறைவனுக்கு உருவம் இல்லை. அதனால் அரூபமுறையில் நாங்கள் வணக்குகிறோம். எங்களது மரியாதைச் செயலே உங்களது வணக்கம் போலும்!
  எங்கள் கொள்கைப்படி இவ்வாறான உங்களது வணக்கம் 'சிர்க்'

  ரதம் எப்படி மார்க்க விரோதச் செயல்?... உங்களை புரிந்துகொள்ளவே முடியவில்லையே! ஓகோ! உங்கள் வஹ்ஹபிய மார்க்கப்படியா?

  ReplyDelete
 14. //உங்கள் மார்க்கம் உங்களுக்கு என்று தெரிந்தும் இணைவைப்பு கூட்டத்தாரை தடுக்க வேண்டியது நமது பொறுப்பல்லவா?//

  'லக்கும் தீனுக்கும் வலியதீன்' என்ற வேதவரிகளை சொன்னால்.....யாருக்கு புத்திமதி சொல்கிறீர்கள்! எல்லாம் வல்ல எங்கும் நிறைந்தவனுக்கா!

  இப்படித்தான் அல்லாஹ்வின் கட்டளையை எதிர்த்து உன்னை வணக்குகிறேன் (அதாவது அவனுக்கே புத்திமதி) மண்ணால் படைக்கப்பட்ட ஆதமுக்கு நான் தலை சாய்ப்பதா? என்று கேட்டதால் சபிக்கப்பட்டானே அவன் யார் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

  //பெண்கள் ரேசன் கடையில் பொருள் வாங்க செல்வது மார்க்கமல்ல, தன் தேவையை பெற போகிறார்கள். அது போல அரசிடமிருந்து கிடைக்க வேண்டியதை கோரிப் பெற போவதில் என்ன தப்பு கண்டீர்கள்.//

  இதெல்லாம் உங்களுக்கு பழகிப்போச்சு. சொன்னால் உங்களால் புரிந்துகொள்ளமுடியாது!

  சுன்னத் ஜமாஅத் மார்க்க சட்டம், அதனை மதிப்பவர்களுக்குத்தான் புரியும். அவரவர் செயலுக்கு அதன் பலன் கிடைத்தே தீரும்.

  உங்கள் மார்க்கத்தால் தானும் அமைதியுடன் மற்றவர்களும் அமைதியுடன் வாழும் இஸ்லாமிய வாழ்க்கையை அமைதியுடன் இவ்வுலகத்திற்கு வாழ்ந்து காட்டுங்கள்.

  ஏன் உங்கள் மனசாட்சியை கேட்டுப்பாருங்கள், அது உண்மையைச் சொல்லும்.

  ReplyDelete
 15. // அவருக்கும் உங்களுக்கும் உண்மையை விளங்க அல்லாஹ் அறிவை கொடுத்தருள்வானாக! ஆமீன்.//

  வஹ்ஹாபிகளுக்குத்தான் 'துவா' கிடையாதே!

  தனக்கே 'துவா'கேட்கமாட்டீர்கள், பிறருக்கும் கேட்கமாட்டீர்கள்.

  வஹ்ஹாபிகள் குடும்பத்தார் இறந்துபோனாலும் அவர்களுக்காக 'துவா' கேட்கமாட்டார்கள்.

  அப்படியிருக்க!..... எதுவும் புதிதா...இப்ப...'துவா' கேட்கலாம் என்று உங்கள் மேலிடம் உத்தரவு போட்டுள்ளதோ!?

  ReplyDelete
  Replies
  1. இதற்கு எதிர்பதிலாக கீழே வரும் கருத்துக்கள் குழப்பம் செய்யவே மாற்று கொள்கையினர் "உங்களுக்கு நண்பன்" என்ற புனைப்பெயரில் எழுதியுள்ளார்கள். கவனிக்கவும்.

   தமிழக இஸ்லாமியர்களே அவர்களின் குழப்ப செயலை புரிந்துகொள்ளுங்கள்.

   Delete
 16. //.யாருக்கு புத்திமதி சொல்கிறீர்கள்! எல்லாம் வல்ல எங்கும் நிறைந்தவனுக்கா!//

  இந்த மாதிரி கேள்வியை கூட விளங்காமல் கேட்க வேண்டாம். அல்லாஹ் மன்னிப்பானாக!

  //அமைதியுடன் மற்றவர்களும் அமைதியுடன் வாழும் இஸ்லாமிய வாழ்க்கையை அமைதியுடன் இவ்வுலகத்திற்கு வாழ்ந்து காட்டுங்கள்.//

  அமைதி என்பதற்க்காக நீங்க பண்ணும் அட்டூழியங்கள் தொடர்வதை ஏற்றுக் கொள்ளமுடியாது.
  மாற்று கலாச்சாரத்தை இஸ்லாம் அனுமதிக்கவில்லை,
  இம்மாதிரி தர்கா சமாச்சாரம் அரபு மண்ணில் ஏன் இல்லை என்பத அறிவீராக!

  //மகான்களின் அடக்க ஸ்தலத்தை உகப்பின் பேரில் மரியாதை செய்தால் கபுர் வணக்கம் என்று யார் சொன்னது? //
  மரியாதை மனதில் இருக்கட்டும். அங்கு ரதம் எடுக்க வக்காலத்து வாங்க வேண்டாம்.


  //நீங்கள் உங்கள் குடும்பத்தாரை முத்தமிட்டது இலையா? அப்ப அது என்னவென்று சொல்வது.//
  சம்பந்தமில்லாத கேள்வி கேட்பதை விடுத்து இஸ்லாத்தின் உண்மையை உள்ளபடி விளங்குவதே இது போன்ற தர்கா வாதிகளுக்கு தீர்வு கிடைக்கும்.

  அல்லாஹ் உங்களுக்கு நேர்வழியை காட்டுவானாக!
  இணைவைப்பு, மாற்று கலாச்சார பழக்கம், நபி காட்டித்தராத வழிமுறையை விட்டும் உங்களை விடுவிப்பானாக!

  ReplyDelete
 17. இஸ்லாமிய சுன்னத் ஜமாஅத் மார்க்கத்தில் இருந்து வில்-அம்பு வேகத்தில் வெளியேறி வஹ்ஹாபி மார்க்கம் சென்றவர்கள் அப்பொழுதும் தனக்கென்று தனித்துவம் முழுமையாக வைத்துக்கொள்ளாமல் சுன்னத் ஜமாஅத் போர்வையில் இருப்பது வேட்ககக்கேடு என்று சொன்னால் மிகையாகாது!

  1 தன்னை வஹ்ஹாபி என்று பகிரங்கமாக அறிவிக்கமாட்டார்கள்.
  2 வஹ்ஹாபி கொள்கை விளக்கம் என்று மீட்டிங் நடத்தமாட்டார்கள்.
  3 தங்களது வஹ்ஹாபி கொள்கைகளை பட்டியலிடமாட்டார்கள்.
  4 பாமரனையும், படித்தவனையும் வழிகெடுக்க சுன்னத் ஜமாஅத்காரர் பெயர்களிலே நோட்டீஸ் விடுவார்கள்.
  5 பாமரனையும், படித்தவனையும் வழிகெடுக்க சுன்னத் ஜமாஅத்காரர் கருத்திடும் பெயர்களைப் போல் அதே பெயரில் கருத்திடுவார்கள்.
  உதாரணம்:unkalukku nanban பெயரில் கருத்திட்டால் வஹ்ஹாபிகள் "உங்களுக்கு நண்பன்" என்ற பெயரில்
  கருத்திடுவார்கள்.
  6 அவர்கள் நோக்கம் மக்களை குழப்பம் செய்யவேண்டும்.
  7 தனக்கென்று வேறுபடுத்திக்காட்டும் தனித்துவம் மறைப்பார்கள்.
  8 அவர்களுக்கு விருப்பம் சுன்னத் ஜமாஅத் போர்வையில் ஒளிந்து குழப்பம் செய்தல்.
  9 கேள்விகளுக்கு பதில் தெரியாவிட்டால் //சம்பந்தமில்லாத கேள்வி// என்று அவர்களின்-இஸ்லாம் பேசுவார்கள்.
  10 ஆயிரம் தடவை "உங்கள் மார்க்கம் வேறு எங்கள் மார்க்கம் வேறு" என்று சொன்னாலும் அதை புரியத் தெரியாதவர்கள்.
  11 வஹ்ஹாபியத்தை சுன்னத் ஜமாஅத் மக்களிடம் தான் விளக்குவார்கள்.
  13 விசாலமாக சிந்தித்தலை புரியாதவர்கள்.
  14 சுன்னத் ஜமாஅத் மக்களை குழப்பம் செய்வது எப்படி என்பதில் முதுகலை பட்டம் பெற்றவர்கள்.
  15 அடிக்கடி அவர்கள் வஹ்ஹாபி சட்டம் மாறிக்கொண்டே இருக்கும்.
  16 "லக்கும் தீனுக்கும் வலியத்தீன்" என்ற வேதவரிகளை புரிந்துகொள்ளமாட்டார்கள், ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள்.

  அல்லாஹ் இவ்வூர் மற்றும் தமிழ் நாடு முஸ்லிம்கள் அமைதியுடன் வாழ அருள் புரிவானாக! ஆமீன்!

  ReplyDelete
  Replies
  1. இதற்கு எதிர்பதிலாக கீழே வரும் கருத்துக்கள் குழப்பம் செய்யவே மாற்று கொள்கையினர் "உங்களுக்கு நண்பன்" என்ற புனைப்பெயரில் எழுதியுள்ளார்கள். கவனிக்கவும்.

   தமிழக இஸ்லாமியர்களே அவர்களின் குழப்ப செயலை புரிந்துகொள்ளுங்கள்.

   Delete
  2. //இறை விரும்பும் வாழ்நெறிகளில் வாழ்ந்து இறைநேசர்கள் என்ற தன்மையை அடைந்த மகான்கள//

   இன்னும் எத்தனை மகான்கள் எதிர்காலத்தில் வரப்போகிறார்களோ!
   அப்ப நீங்கள் அவர்களுக்கு தான் நேசர்களா?


   // சொரிவுள்ள கவிதைகளில் நினைவுகூறுவதும், ஒன்றுகூடிய மக்களுக்கு உணவு தருவதும்தான்.//

   ஆக நீங்கள் இணைவைப்பு அர்த்தமுடைய மொவ்லிது ஓதுவதும் அதன் பேரால் உண்டு வாழ்வதும் தான் உங்கள் போக்கு!


   //மற்றது அதனை நினைவுப்படுத்த அந்நாளில் ஏற்ப்படுத்தப்பட்ட ஊர்வலம்.//
   நபிகள் நாயம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் பிறந்த நாளே நினைவுபடுத்த வழிமுறை சொல்லித்தராதபோது பின்னால் வந்தவர்களை நேசர்கள் என்று சொல்லி சமாதி அடைந்த நாளை (மொவ்த்தான நாளை)ரதம் ஊர்வலம் என்று கொண்டாடிகிறீர்களா?
   அந்த ஊர்வலத்தில் எதுவும் இஸ்லாமிய எத்திவைப்பு நிகழ்ச்சி துளிஅளவும் உண்டா?

   மாறாக கூத்து, கும்மாளம், நடந்து, நன்மையான தொழுகை மிஸ்ஸாக்கப்படுகிறது.

   //இதில் எந்த தவறும் இல்லை//

   தப்பு செய்பவர்களுக்கு தப்பு என்று தெரியாது. விளங்கியவர்களூக்குத் தான் தெரியும்.

   // கந்தூரி (இதனை என்றும் தடுக்கமுடியாது. இது) சுன்னத் ஜமாஅத் கொள்கை.//
   ரொம்ப முக்கியமான பாய்ன்ட்.
   ஆட்டம், பாட்டம், கச்சேரி, இணைவைப்பு, ரதம் ,ஊர்வலம் இதுகள் உங்கள் கொள்கையில்

   ரொம்ப பிரமாதம்.!

   Delete
  3. இதற்கு எதிர்பதிலாக கீழே வரும் கருத்துக்கள் குழப்பம் செய்யவே மாற்று கொள்கையினர் "உங்களுக்கு நண்பன்" என்ற புனைப்பெயரில் எழுதியுள்ளார்கள். கவனிக்கவும்.

   தமிழக இஸ்லாமியர்களே அவர்களின் குழப்ப செயலை புரிந்துகொள்ளுங்கள்.

   அடுத்தவர் பெயரில் தன் கருத்தை வெளியிடுவது 'முனாபிக்' என்று இஸ்லாம் வழிகாட்டுகிறது.

   Delete
 18. இப்படி பாய்ன்ட் பாய்ன்ட்டாக விவரிக்க தெரிந்த PHD க்கு தகுதியான நீங்கள் இன்னமும் இந்தியாவில் மட்டும் காணப்படும் மாற்று கலாச்சார சமாதி திருவிழாவை ஆதரிப்பதை நினைத்து வேதனைப்பட வேண்டி இருக்கிறது.

  வஹ்ஹாபி, சுன்னத் ஜமாத், இன்னும் வேறு ஜமாத், தவ்ஹீத் என பிரித்துக் கொண்டிருக்காமல் உண்மையை விளங்க வேண்டும், இந்தியாவில் மட்டும் இடையில் தோன்றிய அனாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும்.

  அல்லாஹ் உங்களுக்கு நேர்வழியை விரைவில் விளங்கி நீங்களும் ஒரு முன்மாதிரி இஸ்லாமிய பிரச்சாரகராக வேண்டும் என்பதே எங்களின் உங்களுக்கான துஆ.

  ReplyDelete
 19. // இடையில் தோன்றிய அனாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும்.//

  அனாச்சாரம் என்று எதையெல்லாம் சொல்கிறீர்கள்?

  சில வருடங்களுக்கு முன்பு நீங்கள் சுன்னத் ஜமாஅத் இஸ்லாமியராக இருக்க காரணமாக இருந்த, இறைபோதனைகளை உங்கள் முன்னோர்களுக்கு தந்து இஸ்லாமிய நன் மக்களாக வாழ காரணமாக இருந்த,இறை விரும்பும் வாழ்நெறிகளில்வாழ்ந்து இறைநேசர்கள் என்ற தன்மையை அடைந்த மகான்களின் வாழ்க்கையினைப் பற்றியும், அவர்களின் வழிகாட்டல்களையும் சமம்+ஆதி= சமாதி அடைந்த நன் நாளில் நினைவு கூறுவதுதான் கந்தூரி. அந்த விளக்கங்களை கருத்துச் சொரிவுள்ள கவிதைகளில் நினைவுகூறுவதும், ஒன்றுகூடிய மக்களுக்கு உணவு தருவதும்தான். மற்றது அதனை நினைவுப்படுத்த அந்நாளில் ஏற்ப்படுத்தப்பட்ட ஊர்வலம். இதில் எந்த தவறும் இல்லை. சிலவைகள் தடுக்கப்படவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. கந்தூரி இதனை என்றும் தடுக்கமுடியாது. இது சுன்னத் ஜமாஅத் கொள்கை. இன்னும் சிலருக்கு இது புரியாது. அவர்களுக்காக எழுதவில்லை பெரும்பான்மை இஸ்லாமியர்கள் படிப்பார்கள் என்ற எண்ணத்தில் எழுதுகிறேன்.

  எனவே நீங்கள் வேதனைப்படவேண்டியதில்லை. அமைதியாக உங்கள் வேலையை பார்க்கலாமே!

  ReplyDelete
  Replies
  1. //இறை விரும்பும் வாழ்நெறிகளில் வாழ்ந்து இறைநேசர்கள் என்ற தன்மையை அடைந்த மகான்கள//

   இன்னும் எத்தனை மகான்கள் எதிர்காலத்தில் வரப்போகிறார்களோ!
   அப்ப நீங்கள் அவர்களுக்கு தான் நேசர்களா?


   // சொரிவுள்ள கவிதைகளில் நினைவுகூறுவதும், ஒன்றுகூடிய மக்களுக்கு உணவு தருவதும்தான்.//

   ஆக நீங்கள் இணைவைப்பு அர்த்தமுடைய மொவ்லிது ஓதுவதும் அதன் பேரால் உண்டு வாழ்வதும் தான் உங்கள் போக்கு!


   //மற்றது அதனை நினைவுப்படுத்த அந்நாளில் ஏற்ப்படுத்தப்பட்ட ஊர்வலம்.//
   நபிகள் நாயம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் பிறந்த நாளே நினைவுபடுத்த வழிமுறை சொல்லித்தராதபோது பின்னால் வந்தவர்களை நேசர்கள் என்று சொல்லி சமாதி அடைந்த நாளை (மொவ்த்தான நாளை)ரதம் ஊர்வலம் என்று கொண்டாடிகிறீர்களா?
   அந்த ஊர்வலத்தில் எதுவும் இஸ்லாமிய எத்திவைப்பு நிகழ்ச்சி துளிஅளவும் உண்டா?

   மாறாக கூத்து, கும்மாளம், நடந்து, நன்மையான தொழுகை மிஸ்ஸாக்கப்படுகிறது.

   //இதில் எந்த தவறும் இல்லை//

   தப்பு செய்பவர்களுக்கு தப்பு என்று தெரியாது. விளங்கியவர்களூக்குத் தான் தெரியும்.

   // கந்தூரி (இதனை என்றும் தடுக்கமுடியாது. இது) சுன்னத் ஜமாஅத் கொள்கை.//
   ரொம்ப முக்கியமான பாய்ன்ட்.
   ஆட்டம், பாட்டம், கச்சேரி, இணைவைப்பு, ரதம் ,ஊர்வலம் இதுகள் உங்கள் கொள்கையில்

   ரொம்ப பிரமாதம்.!

   Delete
  2. இதற்கு எதிர்பதிலாக கீழே வரும் கருத்துக்கள் குழப்பம் செய்யவே மாற்று கொள்கையினர் "உங்களுக்கு நண்பன்" என்ற புனைப்பெயரில் எழுதியுள்ளார்கள். கவனிக்கவும்.

   தமிழக இஸ்லாமியர்களே அவர்களின் குழப்ப செயலை புரிந்துகொள்ளுங்கள்.

   அடுத்தவர் பெயரில் தன் கருத்தை வெளியிடுவது 'முனாபிக்' என்று இஸ்லாம் வழிகாட்டுகிறது.

   Delete
  3. கீழே குழப்பவாதியின் பதில்.

   Delete
 20. //இறை விரும்பும் வாழ்நெறிகளில் வாழ்ந்து இறைநேசர்கள் என்ற தன்மையை அடைந்த மகான்கள//

  இன்னும் எத்தனை மகான்கள் எதிர்காலத்தில் வரப்போகிறார்களோ!
  அப்ப நீங்கள் அவர்களுக்கு தான் நேசர்களா?


  // சொரிவுள்ள கவிதைகளில் நினைவுகூறுவதும், ஒன்றுகூடிய மக்களுக்கு உணவு தருவதும்தான்.//

  ஆக நீங்கள் இணைவைப்பு அர்த்தமுடைய மொவ்லிது ஓதுவதும் அதன் பேரால் உண்டு வாழ்வதும் தான் உங்கள் போக்கு!


  //மற்றது அதனை நினைவுப்படுத்த அந்நாளில் ஏற்ப்படுத்தப்பட்ட ஊர்வலம்.//
  நபிகள் நாயம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் பிறந்த நாளே நினைவுபடுத்த வழிமுறை சொல்லித்தராதபோது பின்னால் வந்தவர்களை நேசர்கள் என்று சொல்லி சமாதி அடைந்த நாளை (மொவ்த்தான நாளை)ரதம் ஊர்வலம் என்று கொண்டாடிகிறீர்களா?

  அந்த ஊர்வலத்தில் எதுவும் இஸ்லாமிய எத்திவைப்பு நிகழ்ச்சி துளிஅளவும் உண்டா?

  மாறாக கூத்து, கும்மாளம், நடந்து, நன்மையான தொழுகை மிஸ்ஸாக்கப்படுகிறது.

  //இதில் எந்த தவறும் இல்லை//

  தப்பு செய்பவர்களுக்கு தப்பு என்று தெரியாது. விளங்கியவர்களூக்குத் தான் தெரியும்.

  // கந்தூரி (இதனை என்றும் தடுக்கமுடியாது. இது) சுன்னத் ஜமாஅத் கொள்கை.//
  ரொம்ப முக்கியமான பாய்ன்ட்.
  ஆட்டம், பாட்டம், கச்சேரி, இணைவைப்பு, ரதம் ,ஊர்வலம் இதுகள் உங்கள் கொள்கையில்

  ரொம்ப பிரமாதம்.!

  ReplyDelete
 21. //இன்னும் எத்தனை மகான்கள் எதிர்காலத்தில் வரப்போகிறார்களோ!
  அப்ப நீங்கள் அவர்களுக்கு தான் நேசர்களா?//

  வஹ்ஹாபிய மார்க்கத்தில் மக்ஹான்கள் வரமாட்டார்கள். நிம்மதியை கெடுக்கும் குழப்பவாதிகள்தான் வருவார்கள்.

  அனைத்து வஹ்ஹாபிகளே! நீங்கள் அடிக்கடி சொல்வது //இணைவைப்பு//
  இப்பொழுது ஒரு கேள்வி.

  இணைவைப்பு என்றால் என்ன?

  சரியான அறிவுப் பூர்வமான விளக்கம் வேண்டும். மழுப்பல் வேண்டாம்.

  ReplyDelete
 22. //கந்தூரியில் நடக்கும் கூத்துகளை பார்த்து பாவம் சம்பாதிப்பது அவமானமா?//

  கூத்துகளை நாங்கள் ஆதரிக்கவில்லை என்று எத்தனைதடவை எழுதினாலும் அவர்களுக்கு புரிந்துகொள்ளத் தெரியவில்லை. இப்படித்தான் அவர்கள் புரிந்துகொள்கிறார்கள்!

  1 நீங்கள் டிவி பார்ப்பது இல்லை!
  2 அதில் டான்ஸ் பார்ப்பதில்லை!
  3 உங்கள் வீட்டில் சீரியல் பார்ப்பதில்லை!
  4 குடும்பத்தோட வெளியூரில் நடக்கும் பொருட்காட்சிகளுக்கு சென்றதில்லை!
  5 உங்கள் குடும்பத்தினர்கள் உங்கள் மீட்டிங்,போராட்டம் தவிர வேறு எங்கும் பட்டுக்கோட்டை போன்ற ஊர்களுக்கு போனதில்லை!
  6 குற்றாலம்,ஊட்டி போன்ற சுற்றுலா தலத்திற்கு சென்றதில்லை!
  7 சிங்கப்பூர், மலேசியா,துபாய் குடும்பத்தாருடன் சென்று சுற்றிபார்த்ததில்லை!
  8 இப்படி மனசாட்சிக்கு மாற்றமா நடந்ததில்லை!
  9 தவறு என்று சொல்லிக்கொண்டுதான் இருக்கிறீர்கள்!

  அதனால்தான் ஊரில் நடக்கும் பொருட்காட்சிகளை அதில்*** தாங்கள் வியாபாரம் மட்டும் செய்துகொண்டு*** தவறு, அனாச்சாரம் என்றீர்கள்!

  சென்ற கந்தூரி ஊர்வலத்தில் வெறும் அன்னாச்சாரம்தான் சென்றது!
  பாவம்! அனாச்சாரங்களை ஒழிக்க மிகவும் கஷ்டப்படுகிறீர்கள்!

  ஆனால்! அனாச்சாரம் என்றால் என்ன?
  என்று கேட்டால்...மழுப்புகிறீர்கள்!

  இதுவரை பலகேள்விகளுக்கு பதில் இல்லை!
  இப்படித்தான் உங்கள் வஹ்ஹாபி மார்க்கம் இருக்குமோ?

  ReplyDelete
 23. //மாற்று கலாச்சாரத்தை இஸ்லாம் அனுமதிக்கவில்லை//

  நீங்களே மாற்று கலாச்சாரம் தான்... எங்களுக்கு!

  உங்கள் இஸ்லாம் எங்களுக்கு வேண்டாம் என்று எத்தனைதடவை சொன்னாலும் உங்களுக்கு புரியாது!

  எங்களிடம்தான் வந்து உங்கள் வஹ்ஹாபி மார்கத்தை சொல்வீர்கள்!

  நீங்கள் வேறு! நாங்கள் வேறு!

  எங்கள் சுன்னத் ஜமாஅத் கலாச்சாரத்தில் இருந்துகொண்டு எங்கள் மக்களை குழப்புகிரீகள்!

  இதைவிட என்ன அநியாயம் இருக்கு!?

  சாருண்ணிகள் என்றால் என்ன?

  ReplyDelete
 24. //அந்த ஊர்வலத்தில் எதுவும் இஸ்லாமிய எத்திவைப்பு நிகழ்ச்சி துளிஅளவும் உண்டா? //

  இல்லை! உங்கள் வஹ்ஹாபிய எத்திவைப்பு நிகழ்ச்சி துளிஅளவும் இல்லை!

  பரந்த சிந்தனை வேண்டும். அப்பொழுதுதான் அடுத்தவர்கள் செயலிலும் நல்லதை காணமுடியும். பாவம்! அவர்கள் சிந்தனை திசையையே மாற்றிவிட்டர்கள்!
  இனி என்ன சொன்னாலும் அவர்களுக்கு விளங்காது!

  தமிழக முஸ்லிம்களே! குழப்பங்கள் எந்தமாதரி எல்லாம் வருகிறது நீங்களே சாட்சி.

  ReplyDelete
 25. இதற்கு எதிர்பதிலாக கீழே இனிவரும் கருத்துக்கள் குழப்பம் செய்யவே மாற்று கொள்கையினர் "உங்களுக்கு நண்பன்" என்ற புனைப்பெயரில் எழுதுவார்கள். கவனிக்கவும்.

  தமிழக இஸ்லாமியர்களே அவர்களின் குழப்ப செயலை புரிந்துகொள்ளுங்கள்.

  அடுத்தவர் பெயரில் தன் கருத்தை வெளியிடுவது 'முனாபிக்' என்று இஸ்லாம் வழிகாட்டுகிறது.

  ReplyDelete
 26. இதுவரை அவர்களிடம் இருந்து பதில் கருத்துக்கள் இல்லை!

  வழிபாடு என்றால் என்ன?
  வணக்கம் என்றால் என்ன?
  அனாச்சாரம் என்றால் என்ன?
  இணைவைப்பு என்றால் என்ன?


  மேற்கண்ட கேள்விகளுக்கு இதுவரை சரியான, அறிவுபூர்வமான விளக்கங்கள் இதுவரை இல்லை.

  பதிகள் எழுதமாட்டார்கள். விசாலமாக,ஆழமாக சிந்திப்பது கடினம். ஆனால் ஆதாரம் கேட்டால் உடனே எழுதிவிடுவார்கள். இவர்கள்மேல் தவறில்லை. இந்தமாதரி பழக்கப்படுதப்பட்டுள்ளார்கள்.

  இவர்களைப்பற்றி தெரிந்துகொள்ள மேலே உள்ள கருத்துக்கள் போதுமானது. எனவே,தமிழக இஸ்லாமியர்கள் குழப்பகாரர்கள் யார்? எப்படி? என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...