Pages

Friday, June 28, 2013

சவூதி ரியாத்தில் நடைபெற்ற அதிரை பைத்துல்மாலின் இரண்டாவதுக் கூட்டம் !

அதிரை பைத்துல்மால் பல்வேறு நாடுகளில் பல கிளைகளைக் கொண்டிருந்தாலும் சவூதி ரியாத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய கிளையொன்று தொடங்கியது. அன்றைய முதல் கூட்டத்தில் புதிய நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதன் தொடர்ச்சியாக கடந்த [ 14-06-2013 ] அன்று சவூதி ரியாத்தில் கிளைத்தலைவர் சகோதரர் சரபுதீன் அவர்களின் தலைமையில் இரண்டாவதுக் கூட்டம் கூட்டப்பட்டது.

நிகழ்ச்சியின் நிரலாக...

1. கிராத் : சகோதரர் முஹம்மது கமாலுதீன்

2. கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் :

[ a ] கிளை உறுப்பினர்கள் ரமலான் மாத ஜக்காத்தின் குறிப்பிட்ட சதவீதத்தை அதிரை பைத்துல்மாலுக்கு வழங்குவது என முடிவுசெய்யப்பட்டது. 

[ b ]  பித்ரா தொகை நபர் ஒருவருக்கு தலா 15 ரியால் என நிர்ணயம் செய்து அவற்றை வசூல் செய்து தலைமையகத்துக்கு ரமலான் பிறை 20 க்குள் அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது.

[ c ] லாரல் பள்ளியில் கல்வி பயிலும் சமுதாய மாணவர்கள், தாய்மார்கள், அவ்வழியேச் செல்லும் பொதுமக்கள் ஆகியோர் நலன் கருதி அப்பகுதியில் சமுதாயக்கூடமொன்றை ஏற்படுத்துவதன் அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டது. இம்முயற்சியை தலைமையகம் மூலம் முன்னெடுத்து செல்வது என முடிவு செய்யப்பட்டது.

[ d ] ஜனாஸா குளிப்பட்டுவதற்குரிய உலோகத்தட்டு வாங்குவதற்குரிய பற்றாக்குறை செலவீனங்களை தெரியப்படுத்தினால் கிளையினர் பகிர்ந்துகொள்வது என முடிவு செய்யப்பட்டது.

[ e ] கிளை சார்பாக மே மாதம் வசூலிக்கப்பட்ட தொகை 590 ரியால்

[ f ] கிளை சார்பாக ஜூன் மாதம் வசூலிக்கப்பட்ட தொகை 600 ரியால்

[ g ]  அடுத்த மாதாந்திரக் கூட்டம் வருகின்ற  [ 12-07-2013 ] வெள்ளிக்கிழமை அன்று மாலை 5 மணிக்கு கூட்டுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் ரியாத் வாழ் அதிரையர்கள் அனைவரும் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது.

இறுதியாக கிளைத்தலைவர் சகோதரர் சரபுதீன் அவர்களால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டு கூட்டம் இனிதே நிறைவுற்றன.

1 comment:

 1. பதிவுக்கு நன்றி.

  தகவலுக்கும் நன்றி.
  சந்தோஷமான செய்தி.

  இப்படிக்கு.

  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...