Pages

Saturday, July 20, 2013

புதிதாக துவங்கிய அதிரை பைத்துல்மாலின் அபுதாபி கிளைக்கு நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு !

ஐக்கிய அரபு அமீரகம் தலைநகர் அபுதாபியில் அதிரை பைத்துல்மாலின் கிளை இனிதே ஜூலை-19,2013 (வெள்ளிக்கிழமை) அன்று  துவங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். 

அபுதாபிவாழ் அதிரையர்களுக்கான நோன்பு துறப்பு (இஃப்தார்) நிகழ்ச்சி அய்மான் அமைப்பின் தலைவர் சகோ.சாகுல் அவர்களது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அபுதாபி, முஸஃபா ஆகிய பகுதிகளிலிருந்து அதிரையர்கள் சுமார் 20 பேர் கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சி நிரல்:

7:15 - இஃப்தார்
7:30 - மஃரிப் தொழுகை
7:45 - விருந்தினர் சுயஅறிமுகம்
8:00 - பைத்துல்மாலின் அவசியம் மற்றும் அறிமுகம் - சகோ. S.M.A.ஷாகுல்
8:15 - அபுதாபி & முஸஃபா கிளை முதன்மை நிர்வாகிகள் தேர்வு
8:45 - நன்றியுரை - சகோ.சபீர் (ABM துபை கிளை - கெளரவ ஆலோசகர்)
நிகழ்ச்சிக்கு துபாய் மற்றும் அபுதாபி மற்றும் முஸஃபா பகுதியிலிருந்து அதிரையர்கள் சுமார் 20 பேர் கலந்து கொண்டனர். மேலும், திருவண்ணாமலை சமூக சேவகர் சகோ.அப்துல் ஜலீல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
கீழ்கண்ட முதன்மை நிர்வாகிகள் கலந்து கொண்டவர்களால் முன்மொழியப்பட்டு தேர்வு செய்யப்பட்டார்கள்.

கெளரவ ஆலோசகர் - சகோ.ஷாகுல் [ தலைவர், அய்மான் ] -(050-7824129)
தலைவர் - 'கவியன்பன்' அபுல் கலாம்  (056-7822844)
துணை தலைவர் - சகோ.அப்துல் மாலிக் [NPCC] - (050-7914780)
செயலர் (அபுதாபி) - சகோ.பைஸல் (050-9431868)
செயலர் (முஸஃபா) - சகோ.அப்துல் ஜலீல் (050-7940545)
பொருளர் - சகோ.மொய்தீன் (050-8488667)


அபுதாபி & முஸஃபா கிளை முதன்மை நிர்வாகிகள்

கலந்து கொண்டவர்களிடம் உறுப்பினர் படிவம் விநியோகிக்கப்பட்டது. துபாய் மற்றும் அபுதாபி பைத்துல்மால் கிளைகள் மூலம் ஃபித்ரா, ஜகாத் மற்றும் ஸதகா தர்மங்களை வசூலித்து அதிரை பைத்துல்மாலுக்கு அனுப்பி வைப்பது என்றும், ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமை அன்று உறுப்பினர்களின் மாதாந்திர அமர்வு நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இஃப்தார் ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்திருந்த சகோ.ஷாகுல் அவர்களுக்கு பைத்துல்மால் துபை கிளை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டு இரவு 9:00 மணிக்கு இனிதே நிறைவுற்றது.

தகவல் & புகைப்படம் : சகோ.N.ஜமாலுதீன் (ABM துபை கிளை செயலர்)

6 comments:

  1. நம்மவர்களை நல்லதொரு சிறப்பான நிகழ்ச்சியின் மூலம் காண்பது மகிழ்ச்சியளிக்கிறது.

    புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகலுக்கும் என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. பைத்துல்மால் அபுதாபி கிளைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் மற்றும் ஒத்துழைப்பு நல்கிய நல்லுள்ளங்களுக்கும் வாழ்த்துக்களும் துவாவும்.சமுதாய சேவைகளில் சிகரம் தொட்ட அதிரையர்களின் உழைப்பிலும் பங்களிப்பிலும் பொது நிதியகம் மென்மேலும் வளர்ந்து சிறப்பாக பணியாற்றிட வல்ல ரஹ்மான் நாடட்டும்
    ------------------
    இம்ரான்.M.யூஸுப்
    மக்கள் தொடர்பு செயலாளர்
    அமீரக சமூகநீதி அறக்கட்டளை

    ReplyDelete
  4. பைத்துல்மால் அபுதாபி கிளைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. பதிவுக்கு நன்றி.
    இனிய ரமலான் முபாரக்.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...