Pages

Wednesday, July 24, 2013

அதிரையில் நடந்த சாலை விபத்தில் பள்ளி மாணவன் பலி !

அதிரை சேது பெருவழிச்சாலையில் இன்று [ 24-07-2013 ] மாலை 6 மணியளவில் நடந்த சாலை விபத்தில் பள்ளி மாணவன் பலியானான்.

கரையூர் தெருவைச் சார்ந்த மாணவன் திருமூர்த்தி. இவர் அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.

சம்பவத்தன்று சாலையின் அருகே விளையாடிக்கொண்டு இருந்த போது எதிரே வந்த வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தான். தகவலறிந்த அதிரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

5 comments:

 1. இந்த அகால மரணம் பெற்றோர்களுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. எத்தனையோ கனவுகளை சுமந்து கொண்டு படிக்கவைத்து இருப்பார்கள்.

  ஆறுதல் சொல்ல வார்த்தை இல்லை.

  இந்த இழப்பை தாங்கிக்கொள்ளும் சக்தியை
  இறைவன்தான் அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.l

  நமதூரில் இத்தகைய விபத்துக்கள் இப்போது அதிகமாக நடக்க ஆரம்பித்து விட்டன. காவல் துறையினர் விதிமுறையை சரியாக பேணாத வாகன ஓட்டிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  ReplyDelete
 2. பள்ளிக்கூடம் விட்டு போகும் மாணவ மாணவிகள் அந்த நேரத்தில் பாதுகாப்பாக வீடு போய்ச்சேர தக்க முயற்ச்சிகள் மேற்கொள்ளவேண்டும். செய்வார்களா.?

  ReplyDelete
 3. Deepest condolences from me.

  ReplyDelete
 4. நமதூரில் இத்தகைய விபத்துக்கள் இப்போது அதிகமாக நடக்க ஆரம்பித்து விட்டன. வாகன ஓட்டிகள் கவனமாகவும் .&ஆட்கள் நடமாடும் பகுதி யில் வேகங்களை குறைத்து ஓட்டிச்செல்லவும் பிள்ளைகள் ரோடுகளில் விளையாடுவதை தவிர்க்கவும்

  ReplyDelete
 5. இந்த அகால மரணம் பெற்றோர்களுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. எத்தனையோ கனவுகளை சுமந்து கொண்டு படிக்கவைத்து இருப்பார்கள்.

  ஆறுதல் சொல்ல வார்த்தை இல்லை.

  இந்த இழப்பை தாங்கிக்கொள்ளும் சக்தியை
  இறைவன்தான் அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.l

  நமதூரில் இத்தகைய விபத்துக்கள் இப்போது அதிகமாக நடக்க ஆரம்பித்து விட்டன. காவல் துறையினர் விதிமுறையை சரியாக பேணாத வாகன ஓட்டிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இப்படிக்கு.

  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...