Pages

Sunday, July 7, 2013

அதிரை லயன்ஸ் சங்கம் நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம் !

அதிரை லயன்ஸ் சங்கம் மற்றும் திருச்சி ராயல் பேர்ல் மருத்துவமனை ஆகியோர் இனைந்து நடத்தும் மாபெரும் சைனஸ் [ காது, மூக்கு, தொண்டை ] இலவச மருத்துவ முகாம் அதிரை சேது பெருவழிச்சாலையில் அமைந்துள்ள சாரா திருமண மஹாலில் இன்று [ 07-07-2013 ] காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை சிறப்பாக நடைபெற்றது.

இதற்காக காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர் T.N. ஜானகிராமன் MS., D.L.O அவர்களின் மருத்துவக் குழுவினர் முகாமிற்கு வருகை தந்து பரிசோதித்தனர். இம்முகாமில் அதிரை மற்றும் இப்பகுதியை சுற்றி வசிக்கக்கூடிய பொதுமக்கள் பெரும் திரளாக கலந்துகொண்டு மருத்துவ ஆலோசனையை பெற்றுச்சென்றனர்.

நிகழ்ச்சிக்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் லயன்ஸ் சங்கத்தலைவர் M. அஹமது, செயலர் பேராசிரியர் செய்யது அஹமது கபீர், பொருளாளர் M. சாகுல்ஹமீது ஆகியோருடன் லியோ சங்கம் காதிர் முகைதீன் கல்லூரி, அதிரை லியோ சங்கம் மற்றும் லயன்ஸ் அங்கத்தினர் சிறப்பாக செய்து இருந்தனர்.

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.
    சந்தோஷமான செய்தி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...