Pages

Tuesday, July 9, 2013

ஐக்கிய அரபு அமீரகத்தில் ரமலான் நோன்பு நாளை முதல் ஆரம்பம் ! மகிழ்ச்சியில் மக்கள் !

க்கிய அரபு அமீரகத்தில் பிறை கமிட்டியினரிடமிருந்து நேற்று இரவு 10.10 மணியளவில் ரமலான் மாத நோன்பின் பிறைக்கான அறிவிப்பை அடுத்து 10/07/2013 புதன்கிழமை முதல் நோன்பு ஆரம்பமாகிறது.

செய்தி கேள்விப்பட்டதும்  மக்கள் மகிழ்ச்சி ததும்ப கூட்டமாக திரண்டு நண்பர்களையும் உறவினர்களையும் மற்றும் சக பணியாளர்களையும் சந்தித்து சலாம் கூறி ரமலான் வாழ்த்தினை மனம் மகிழ உள்ளம் குளிர பகிர்ந்து கொண்டனர். நேரில் சந்திக்க முடியாதவர்களிடம் அலைபேசியின் ஊடலாக செய்தியினை பகிர்ந்து கொண்டனர். 

தற்போது துபாயில் நிலவிவரும் கடும் சூட்டையும், வியர்வையையும் பொருட்படுத்தாது நோன்பிற்கான சஹர் உணவை தயாரிக்க தேவையான பொருட்களை வாங்குவதற்காக இங்குள்ள அனைத்து சூப்பர் மார்கெட் மற்றும் குரோசரி என அழைக்கப்படும் சிறு கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தன.

வளைகுடா நாடுகளில் பணிபுரியும் பெரும்பாலானோருக்கு ரமலான் மாதம் முழுவதும் பகுதி நேரத்தில் மாத்திரம் பணி புரியக்கூடிய வாய்ப்புகளை நிறுவனங்கள் வழங்கியுள்ளன. கட்டணம் செலுத்தி பார்க் செய்யக்கூடிய வாகனங்களுக்கு போக்குவரத்துதுறை சார்பாக சில சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அமீரக மக்களின் வசதிக்காக போக்குவரத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.


வளைகுடா நாடுகளில் குறிப்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவூதி, குவைத், ஓமன் ஆகிய நாடுகளோடு எகிப்து, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் புதன்கிழமை முதல் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது.

இப்புனித மிகு ரமலான் மாதத்தில் பாவச்செயல்களை விட்டு விலகி நோன்பு நோற்று,விபாதத்துக்கள் செய்து, ஜகாத் சதக்காக்கள் செய்து, நல் அமல்களால் நிரப்பி இறை பொருத்தத்தையும், இறையன்பையும்  நம் அனைவரும் பெற்றிட அதிரை நியூஸ் குழுமத்தின் சார்பாக ரமலான் நல் வாழ்த்துக்களை அன்புடன் தெரியப்படுத்திக்கொள்கிறோம். 

அமீரகத்திலிருந்து அதிரை மெய்சா

6 comments:

 1. பதிவுக்கு நன்றி.

  தகவலுக்கும் நன்றி.
  சந்தோஷமான செய்தி.

  இப்படிக்கு.

  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

  ReplyDelete
 2. மைசா காக்கா நல்ல தகவல் ரமளான் முபாரக்

  ReplyDelete
 3. மைசா காக்கா நல்ல தகவல் ரமளான் முபாரக்

  ReplyDelete
 4. //ஐக்கிய அரபு அமீரகத்தில் பிறை கமிட்டியினரிடமிருந்து நேற்று இரவு 10.10 மணியளவில் ரமலான் மாத நோன்பின் பிறைக்கான அறிவிப்பை அடுத்து 10/07/2013 புதன்கிழமை முதல் நோன்பு ஆரம்பமாகிறது.//

  நல்ல செய்தி. ஆனால்.........! அதிராம்பட்டினத்தில் சிலர் 09.07.2013 அன்றிலிருந்து அவர்களின் நோன்பை ஆரம்பித்துவிட்டனர்களாமே !

  ReplyDelete
 5. அனைவருக்கும் ரமலான் வாழ்த்துகள்...

  ReplyDelete
 6. இனிய ரமலான் வாழ்த்துக்கள்

  வல்ல இறைவன் அனைத்து நோன்புகளையும் நோற்கச்செய்து அதற்கான நன்மைகளை தருவானாகவும் ஆமீன்

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...