Pages

Saturday, September 21, 2013

அதிரையில் லயன்ஸ் சங்கம் நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம் !

அதிரை லயன்ஸ் சங்கம், காதிர் முகைதீன் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட குழுவினர் மற்றும் தஞ்சை மீனாட்சி மருத்துவமனை ஆகியோர் இனைந்து நடத்திய மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் அதிரை சாரா திருமண மஹாலில் இன்று காலை 8 மணி முதல் நடைபெற்றது.

அதிரை மற்றும் இப்பகுதியை சுற்றி வசிக்கக்கூடிய பெரும்பாலான பொதுமக்கள் முகாமில் கலந்துகொண்டு இரத்தப் பரிசோதனை, ஈசிஜி, இரத்த அழுத்தம், உடலின் எடை ஆகிய பரிசோதனைகளோடு சிறப்பு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளையும் பெற்றுச்சென்றனர்.

நிகழ்ச்சிகுரிய அனைத்து ஏற்பாடுகளையும் அதிரை லயன்ஸ் சங்கத் தலைவர் அஹமது, செயலாளர் பேராசிரியர் செய்யது அஹமது கபீர், பொருளாளர் சாகுல் ஹமீது ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.

நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியை ஷஃபிரா பேகம், பேராசிரியர் கா. செய்யது அஹமது கபீர் ஆகியரோடு நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவியர் மற்றும் லியோ சங்க நிர்வாகிகள் நியாஸ் அஹமது, அதிரை மைதீன், இஸ்மாயில் ஆகியோர் வந்திருந்த நோயாளிகளுக்கு வேண்டிய உதவியை செய்தனர்.









2 comments:

  1. நல்லதோர் முயற்சி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நல்லதோர் முயற்சி வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...