Pages

Saturday, May 17, 2014

பாரத பிரதமருக்கு !

நடந்து முடிந்த தேர்தல் மூலம் இந்திய மக்கள் பா ஜ க வை அதிகளவில் வெற்றி பெற செய்து,நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.பொதுவாக பா ஜ க அதன் தலைமை அமைப்பான RSS என்ன சொல்கிறதோ அதன் படிதான் எதுவும் செய்யும். அதன்படி அவர்களுக்கு கிடைத்த இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் போன்ற மத சிறுபான்மை சமுதாயங்களுக்கு பல வகைகளிலும் இடையூறுகள் விளைவிக்க கூடும்.பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்ட இடத்தில் ராமன் கோயிலும், Civil Code சட்டமும் இயற்றக்கூடும். இன்னும் என்ன என்ன அவர்களின் அஜெண்டாவில் இருக்கிறதோ அவைகளை நடைமுறைப் படுத்தக் கூடும்.

இது உண்மையில் முஸ்லிம்களுக்கு மிக மிக சோதனையான கால கட்டம் என்பதில் சந்தேகம் இல்லை.எனவே,நாம் அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்தி துவா செய்து,நாம் நம் ஈமானை காப்பாற்றிக் கொள்ள,நமக்கிடையே பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.ஒவ்வொரு முஸ்லிமும் மற்ற முஸ்லிம்களிடம் நல்ல உறவைப் பேணி,ஒற்றுமை பேண வேண்டும்.இந்து மற்றும் கிறிஸ்தவ சகோதரர்களோடும் நல்ல உறவை பேணி,நம் மார்க்கத்தை இனிய முறையில் சொல்ல வேண்டும்.ஊர் தோறும் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் நடத்தப் பட்டு,இதுதான் இஸ்லாம் என்று அவர்களுக்கு எடுத்து சொல்லி,இஸ்லாம் மூலமாக யாருக்கும் எவ்வித அழிவோ,துர்பாக்கியமோ கிடையாது, அமைதியும் வெற்றியும்தான் கிடைக்கும் என்பதை புரிய வைக்க வேண்டும்.

இப்படி,நம்மாள் இயன்ற அளவு - இனிய மார்க்கம் எடுத்து சொல்லி,அமைதி வழி புரட்சி ஏற்பட அடிகோலவேண்டும்.உலகெங்கும்,எங்கெல்லாம் முஸ்லிம்களுக்கு எதிரான செயல்கள் திட்டமிட்டு நடைபெறுகின்றனவோ, அங்கெல்லாம் இஸ்லாம் புத்துயிர் பெற்று வந்துள்ளது என்பதை நம் வரலாறு சொல்லும் செய்தி.எனவே,தோல்விக்குப் பின் வெற்றியும், அடக்கு முறைகளுக்குப் பின் ஆட்சிகளும் முஸ்லிம்களுக்கு கிடைத்துள்ளன. இதுதான் பிறவ்ன், நம்ரூத் முதற்கொண்டு,அபூ லஹப்,அபூ ஜஹல் வரையும் சேங்கிஸ்கான் முதற்கொண்டு இன்றைய நவீன உலகின் பூச்சாண்டிகள் வரை பார்த்து வந்து கொண்டு இருக்கிறோம்.அந்த அந்த கால கட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் விவரிக்க இயலா துயரங்கள் பட்டும் அவர்களை துடைத்தெறிய இயலவில்லை.இஸ்லாம் மேலோங்கியே வந்துள்ளது,கியாம நாள் வரை மேலோங்கியே இருக்கும்.

42:42. ஆனால் எவர்கள் மக்களுக்கு அநியாயம் செய்து நீதமின்றி பூமியில் அட்டூழியம் செய்கிறார்களோ, அவர்கள் மீது தான் (குற்றம் சுமத்த) வழியிருக்கிறது - இத்தகையோருக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு.

53:52. இவர்களுக்கு முன்னர் இருந்த நூஹுவுடைய சமூகத்தாரையும் (அவன் தான் அழித்தான்,) நிச்சயமாக அவர்கள் பெரும் அநியாயக் காரர்களாகவும், அட்டூழியம் செய்தவர்களாகவும் இருந்தனர்.

6620. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
அகழ்ப்போரின்போது நபி(ஸல்) அவர்கள் எங்களுடன் மண்ணைச் சுமந்து எடுத்துச் சென்று கொண்டிருப்பதை கண்டேன். அப்போது அவர்கள் (இவ்வாறு பாடிய வண்ணம்) கூறிக் கொண்டிருந்தார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் இல்லாவிட்டால் நாங்கள் நேர்வழி அடைந்திருக்கமாட்டோம். நோன்பு நோற்றிருக்கமாட்டோம். தொழுதிருக்கவுமாட்டோம்.

நாங்கள் பகைவர்களைச் சந்திக்கும்போது எங்களின் மீது அமைதியை இறக்கியருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! இணைவைப்போர் எங்களின் மீது அட்டூழியம் புரிந்துவிட்டார்கள். இவர்கள் எங்களைச் சோதனையில் ஆழ்த்த விரும்பினால் அதற்கு நாங்கள் இடம் தரமாட்டோம்.30

ஆகவே,முஸ்லிம்கள் மற்றும் பிற மத சிறுபான்மையோரை கருவருக்கலாம் என அவர்கள் கனா கண்டால்,அது இன்ஷா அல்லாஹ் பலிக்காது என்பது மட்டுமல்ல அது ஒரு பெரிய அழிவையே அவர்களுக்கு தேடித் தரும்,இதுவே வரலாறு சொல்லும் பாடமாகும்.

இந்திய மக்கள் இன்று தந்துள்ள இத் தீர்ப்பைக் கொண்டு ஆட்சிக் கட்டிலில் அமரவுள்ள நரேந்திர மோடி அவர்களே,உங்களுக்கு ஏக இறைவன் இப் பொறுப்பை தந்துள்ளான்.அந்தப் பொறுப்பை நீங்கள் சரியாக நிறைவேற்ற வேண்டும்.இக்கணம் முதல் முஸ்லிம்கள்,கிறிஸ்தவர்கள் உட்பட அனைவருக்கும் நீங்கள்தான் பிரதமர் என்பதை மறந்து விட வேண்டாம்.
எனவே, இந்துக்களுக்கு என்ன வேண்டுமோ அதை செய்து கொடுங்கள்.மனு தர்மப்படிதான் அவர்களுக்கு எல்லா சகல வித சடங்குகள்,செயல்கள் செய்ய வேண்டுமா? கல்யாணமா,மரணமா,இப்படி என்னவெல்லாம் உண்டோ அதை தாராளமாக செய்யுங்கள்.அவர்களுடன் எங்களையும், கிறிஸ்தவர்களையும், புத்த,ஜைன,சீக்கிய மக்களையும் இப்படிதான் செய்ய வேண்டும் என கட்டாயப் படுத்தாதீர்கள்.

முஸ்லிம்களுக்கென்று குரானும்,நபிகள் நாயகம் ஸல் அவர்களின் போதனைகளும் இருக்கின்றன.அந்த இரண்டின் படிதான் ஒரு முஸ்லிம் வாழ வேண்டும் என பணிக்கப்பட்டுள்ளோம்.எனவே,அந்த முறையில் வாழ எங்களுக்கு எல்லாவித சகல சவுகரியங்களும் செய்ய வேண்டியது இந்தியப் பிரதமராக பதவி ஏற்க இருக்கும் உங்கள் கடமையாகும்.அனைத்து தரப்பு மக்களும் - இந்திய மக்கள் என்ற உணர்வுடன் வாழ இது மிக அவசியமாகும்.

அதை எல்லாம் விட்டுவிட்டு,நீங்கள் பாபர் பள்ளிவாசல் இடத்தில் ராமர் கோயில் கட்டினாலோ,எல்லாருக்கும் பொதுவான முறையில் Civil Code கொண்டு வந்தாலோ,முஸ்லிம்கள் உட்பட்ட ஏனைய சிறுபானமை மத மக்களின் உரிமைகளை பறித்தாலோ,முதலில் நீங்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி ஆட்சி செய்ய தகுதியற்றவர் ஆகிவிடுவீர்கள். ஏனெனில் இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒரு Secular State என்று உருவாக்கப்பட்டதாகும். இரண்டாவது,இறைவன் உங்களுக்கு இந்த ஆட்சியை வழங்கியுள்ளதன் நோக்கம் எல்லா மக்களுக்கும் சரி சமமாக நடக்க வேண்டும் என்றுதான்,அதை மீறிய குற்றத்திற்கு உள்ளாவீர்கள். மூன்றாவது,யாரும் தொடர்ச்சியாக அநியாயம் செய்து கொண்டிருந்ததாக சரித்திரம் கிடையாது. அப்படி இருந்தவர்கள் இறுதியில் பெரும் தோல்வியையும் ,அவமானத்தையும் தான் கண்டார்கள்.கடைசியாக,வேறு வழியே இல்லை என்றால்,முஸ்லிம்கள் தங்களுக்கென கபுரை தோண்டிவிட்டு,கபன் உடை தரித்து,தயாராகவே இருப்பார்கள்,இன்ஷா அல்லாஹ்...

2:153. நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.

 2:155. நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!

 2:156. (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள்.

A.R. அப்துல் லத்திப் 

10 comments:

 1. பிஸ்மில்லா.......

  قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاءُ وَتَنزِعُ الْمُلْكَ مِمَّن تَشَاءُ وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ ۖ بِيَدِكَ الْخَيْرُ ۖ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ
  (நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.” 3:26

  Reply

  ReplyDelete
 2. பாரத பிரதமராக பொறுப்பேற்க தனித் திறமையுடன் திரு.நரேந்திர மோடி அவர்கள் தயாராகி வருகிறார்கள்.

  நேற்றைய தேதிவரை அவர் என்ன சொன்னார் என்று அதைப்பற்றி யாரும் கவலை கொள்ள வேண்டாம். அவர் பிரதமர் பதவி ஏற்று அவருடைய சீட்டில் உட்கார்ந்து விட்டால் அப்புறம் பாருங்கள், அதாவது நண்பன் கையில் பொறுப்பை கொடுப்பதை விட எதிரிகையில் கொடுத்துப் பாருங்கள்.

  அவர் துரோகமான முறையில் நடக்க மாட்டார். காரணம் அவருடைய தாயின் ஆசீர் வாதத்தால் அரியணை ஏறுகிறார்.

  ReplyDelete
 3. வட மாநிலங்களில் சிறுபான்மைனர்கள் பிஜேபி க்கு வாக்களித்தால் அதிக இடங்களில் வரமுடிந்தது இதை யாரும் மறுக்க முடியாது.

  அம்மக்கள் மேல சொன்ன அவர்களின் அஜண்டாவில் குறிப்பிட்டதை அவர்கள் பொருட்படுத்தவில்லை- போன பிஜேபி ஆட்சியில் கூட நாம் நினைததைபோல் செய்யவில்லை

  அதேபோல் இப்போவும் எந்த இடத்திலாவது மோடி அதை பற்றி பேசவில்லை.

  விலைவாசி கட்டுபடுத்துதல், ஊழல் இல்லா ஆட்சி, திறமையான நிர்வாகம், மாற்றம் வேண்டி தான் மக்கள் பிஜேபி க்கு வாக்களித்துள்ளார்கள்,

  10 ஆண்டுக்கு முன்பு மன்மோகன் சிங்கை மக்கள் எப்படியெல்லாம் புகழ்ந்து வர்ணித்தார்கள் இன்று நிலைமை வேறு.

  நல்லாட்சி மோடி தருவார் என்று வாக்களித்த மக்களுக்கு எதிர்மறையாக அவர் செயல்பட்டால் இதே மக்கள் அவரை அடுத்த தேர்தலில் தூக்கி வீசுவார்கள் என்பதில் ஐயம் இல்லை.

  நல்லது நடக்கும் என்பதை நாமும் நம்பிக்கை வைப்போம்!

  ReplyDelete
 4. எல்லாம் நல்லதற்கு துவா செய்வோம்

  ReplyDelete
 5. இவருக்கு கடிதம் ஒன்றும் தேவை இல்லை, ஒருவருடத்திற்கு முன்பே இந்த பிரதமர் பதவிக்கு வித்திட்டவர் இவர், இவரின் மனவலிமையை பாராட்ட வேண்டும், இவருக்கும் மனசாட்சி உண்டு. தேவை இல்லாததை உண்டுபண்ணி இவரை இன்னும் உச்சத்தில் கொண்டு போக வேண்டாம்.

  இனி இவர் யாருக்கும் துரோகியாக உருவெடுக்க மாட்டார், காரணம் பாரத பிரமராச்சே, இந்த ஐந்து வருடத்தில், இப்போது செலவு செய்ததை சம்பாதிக்க வேண்டாமா?

  ReplyDelete
 6. இஸ்லாமியர்களுக்கு தேர்தல் அறிக்கையில் கூறியதை செயல்படுத்த பாஜகவில் இருக்கும் இஸ்லாமியர்கள் பிரதமர்ரை நொருக்குதல் கூடுத்தால் நன்றாக இருக்கும்.

  ReplyDelete
 7. கட்டுரையின் கடைசி பத்தி மிக அருமை

  ReplyDelete
 8. All power of allah

  By-Ashraf kamal

  ReplyDelete
 9. 10 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் ஏற்பட்ட குறைகளை BJP தேர்தல் அறிக்கைகளாக வெளியிட்டது.ஆனால் அவைகள் நிறைவேறும் பட்சத்தில் இந்திய சிறுபான்மை மக்களுக்கு எதிரான ஆட்சி கொண்டுவரும் பட்சத்தில் இந்தியா உலகநாடுகளிடையே கடும் எதிர்ப்பையும் பொருளாதார நெருக்கடியையும் சந்திக்க நேரிடும் .
  முதலில் நாடு தழுவிய முஸ்லிம் அமைப்புகளின் தலைமைகள் மாற்றப்படவேண்டும் அவற்றின் பாகுபாடு கொள்கைகளும் மாறவேண்டும் .
  இனிமேல் தமிழ் நாடுபற்றி பார்ப்போம் ..........

  இந்தியாவில் முஸ்லிம் MP கள் அதிகம் வரவேண்டும் என்று கூறும் அமைப்புகள் மயிலாடு துறையில் ஹைதர் அலி யை ஆதரிக்க மாட்டோம் என்று அறிக்கை வெளியிட்டதும் கடைசி நேரத்தில் அ தி மு க வின் ஆதரவை TNTJ விளக்கி கொண்டதும் 'த மு மு க' செல்வி ஜெயாவுடம் கூட்டு வைத்து இரண்டு MLA களை பெற்றுவிட்டு ராஜ்ய சபைக்கு கனிமொழிக்கு வாக்களித்தது. காங்கரஸ் இல்லாத தி மு க வின் கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டு வைத்தது தேர்தல் நேரத்தில் மதுரை அழகிரியின் கட்சி பூசல் இப்படி அடுக்கி கொண்டே போகலாம் . இவர்களின் படுதோல்விக்கு காரணம் .தேர்தல் முடிந்த உடனே கலைஞர் தேர்தல் கமிசனை சாடும்போதே தெரியும் தி மு க வின் தோல்விகள் உறுதி என்று .

  ReplyDelete
 10. பிஸ்மில்லா.......

  قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاءُ وَتَنزِعُ الْمُلْكَ مِمَّن تَشَاءُ وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ ۖ بِيَدِكَ الْخَيْرُ ۖ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ
  (நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.” 3:26

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...