Pages

Friday, October 24, 2014

வாட்ஸ்அப் / டெலிகிராம் இளைஞர்களே !?

ஒருவருக்கொருவர் விரைவில் தொடர்பு கொண்டு, தகவல்களைப் பரிமாறக் கிடைத்திருக்கும் மொபைல் மெசேஜ் சாதனங்களில், வாட்ஸ் அப் அப்ளிகேஷன் முதன்மைப் பெறுகிறது. அதே போல் டெலிகிராம் அப்ளிகேஷனும் முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றை தொடர்ந்து பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

வாட்ஸ் அப்பை இளைஞர்கள்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்ற தவறன கருத்தை நாம் கொண்டுள்ளோம். ஆனால் பெண்களும், முதியவர்களும் இதனை அதிகம் பயன்படுத்துகின்றனர் என்ற ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அதுவும் தற்போது குழந்தைகளும் அவர்களுடன் இணைந்துவிட்டனர்.

சராசரியாக, நாள் ஒன்றுக்கு 46 நிமிடங்கள் இத்தகைய அப்ளிகேஷன்கள் பெண்களால் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், ஆண்கள் நாளொன்றுக்குப் பயன்படுத்துவது 25 நிமிடங்களே.

உலக அளவில் இவ்வாறென்றால் அதிரை அளவில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகின்றன. அதிரையில் முதியவர் முதல் குழந்தைகள் வரை வாட்ஸ் அப் அசுர வேகத்தில் பரவி அவர்களை அடிமைப் படுத்தியுள்ளது.

சமீபத்தில் இதில் பகிரப்படும் தகவல்கள் அதிகாமனவை உண்மைக்குப் புறம்பாகதாக இருந்து வருவது வேதனையானது. மொபைலில் எஸ்.எம்.எஸ் வசதி இப்பதுபோல் இதில் கூடுதல் வசதி இருக்கின்றபோதிலும், இதை அதிகமானோர் தவறாகப் பயன்படுத்துவதை கவனத்தில் கொள்ள வேண்டும், குறிப்பாக விவரமறியாத பெண்கள், இளைஞர்கள், இதனை பயன்படுத்தும் போது பின் விளைவுகளை சரிவர உணராமல் இருக்கின்றனர்.

ஒரு சில பெண்கள் அதன் விபரீதம் புரியாமல் தங்களது குழந்தைகளிடம் தற்கால ஸ்மார்ட் போன்களை விளையாடக் கொடுக்கும் அளவுக்கு கொடூரம் நமதூரில் ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் தவறாக அதில் உள்ள வீட்டுப் பெண்களின் புகைப் படங்களை சிலருக்கு பகிர்ந்துவிடவும் நேரிட்டு விடுகிறது. இதன் விபரீதம் புரியாமல் செயல்படும் பெற்றோர்கள் புரிந்து செயல்பட வேண்டும். குறிப்பாக குழந்தைகள் கையில் போன் கொடுப்பதே தவறு அதிலும் நெட் உயயோகத்தில் உள்ள் ஸ்மார்ட் போன்களை கொடுப்பது மிகவும் தவறு.

முன்பு மஞ்சள் அல்லது ஆரஞ்ச் நிறத்தில் ஒரு நோட்டிஸ் அடித்து கொடுப்பார்கள். அதில் நடக்காத ஏதாவது ஒரு அதிசயத்தை எழுதி, அது யாரோ ஒரு அவுலியாவின் மகிமை என்று குறிப்பிட்டு இதே போல் நீங்கள் நூறு பேருக்கு நோட்டீஸ் அடித்து கொடுத்தால் அந்த அவுலியாவின் நல்லாசி கிடைக்கும். என்றும் அவ்வாறு நோட்டீஸ் அடித்துக் கொடுக்கபட வில்லையெனில் வேலை போய் விடும், கை, கால் ஊனமாகிவிடும், மாணவர்களாக இருந்தால் பரிட்சையில் தேரமாட்டீர்கள் என்று பகிரங்க மிரட்டல் விடுப்பார்கள். போதாக்குறைக்கு நமக்கு துளியும் அறிமுகமில்லாத வெளி மாநிலத்தைச் சேர்ந்தவரின் பெயரைக் குறிப்பிட்டு அவரின் வேலை போய்விட்டது, அந்த நோய் வந்துவிட்டது, இந்த நோய் வந்துவிட்டது என்று பொய்யான ஆதாரங்களைக் காட்டுவார்கள்.

ஆனால் இது சிறுக சிறுக அழிந்துவிட்டது என்று நினைத்தால். இல்லை தற்போது நவீன காலத்து மஞ்சள் நோட்டீஸாக வாட்ஸ் அப்பை நம் மக்கள் பயன்படுத்த ஆரம்பைத்துவிட்டார்கள்.

இன்னும் சிலர் செய்தியை உருவாக்குவார்கள். தங்கள் மனதுக்கு தோன்றியதை எல்லாம் எழுதி அந்த செய்தியை பரப்பிவிட்டு விடுவார்கள். அப்படித்தான் சமீபத்தில் ஏதோ ஒரு குளிர் பானத்தின் பெயரைக் குறிப்பிட்டு, அந்த குளிர் பானத்தில் எய்ட்ஸ் கிருமி கலந்திருப்பதாகவும் அதனை யாரும் குடிக்காதீர்கள் என்றும் ஒரு தகவல் வாட்ஸ் அப்பில் எய்ட்ஸ் கிருமியை விட படு வேகமாக பரவி வருகிறது.

இது போன்ற தகவல்களை  வாட்ஸ்அப் மூலமோ அல்லது மற்ற எந்த தகவல் தொழில்நுட்ப சாதனங்களின் மூலமோ மற்றவர்களுக்கு பார்வர்ட் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் தகவலை உருவாக்கியது நாமில்லை என்றாலும் ஆர்வக் கோளாறில் நாம் அனுப்பிவிட்டாலும், நாம் அனுப்பிய தகவலுக்கு நாம்தான் பொறுப்பு. இவ்வாறு தவறான தகவல்கள் பரப்பபடுவதால் உண்மையான தக்வல்கள் கூட சில நேரங்களில் பொய் என நம்பப்படும் நிலை ஏற்பட்டுவிடும்.

இந்த சோசியல் நெட் வொர்க் அப்ளிகேஷனை தவிர்க்க முடியாத நிலையில், ஓரளவுக்கு விழிப்புணர்வுடன், செயல்பட்டு, அவசர ஆக்கப்பூர்வமான செய்திகளுக்கு மட்டும் பகிர்ந்துகொண்டால் சரியானதாக இருக்கும். குறிப்பாக பள்ளி மாணாக்கர்களிடம் இது உலாவ விடாமல் தடுப்பது மிகவும் அவசியமானது. பள்ளி நண்பர்கள், கல்லூரி நண்பர்கள் என்று அனைவருடனும் ஒரு குரூப் ஆரம்பித்து. நேரம் காலம் தெரியாமல் இதில் மூழ்கியுள்ளனர். இது அவர்களின் கல்வி எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கிவிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

- ஜஃபருல்லாஹ்,  
ஜித்தா - சவூதி அரேபியா

3 comments:

 1. பதிவுக்கு நன்றி.‎
  தகவலுக்கும் நன்றி.‎

  iஇதுக்கு என்ன சொல்ல?‎

  இப்படிக்கு.‎
  கோ.மு.அ. ஜமால் முஹம்மது.‎
  த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
  Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
  Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

  ReplyDelete
 2. சிறந்த விழிப்புணர்வு !

  இவற்றை துண்டு பிரசுரம் மூலம் பெற்றவர்களுக்கும் - மற்றவர்களுக்கும் கொண்டு செல்லலாம்.

  ReplyDelete
 3. சமீபத்தில் கூட மதினா மஸ்ஜிதுன்நபவியில் மலக்கு உட்கார்ந்திருப்பதாக ஒரு ஜல்லி உலாவியது.

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...