Pages

Friday, October 24, 2014

சிஎம்பி லேன் பகுதியில் கழிவு நீர் வாய்க்கால் - தார் சாலை அமைத்து தர பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை !

அதிரை பேரூராட்சியின் 21 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட சிஎம்பி லேன் பகுதியில் முறையான கழிவு நீர் வாய்க்கால் அமைக்கப்படாததால்.அந்த பகுதியின் வீடுகளில் புழங்கும் கழிவு நீர் அங்கு காணப்படும் சாலைகளிலும், அருகே உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சிஎம்பி வாய்க்காலிலும் கலந்து விடுகிறது. இதனால் கழிவு நீர் தேங்கி துர் நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

கடந்த சில நாட்களாக அதிரையின் பெய்த தொடர் மழையால் அப்பகுதியில் காணப்படும் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் வரும் அதிரை - மிலாரிக்காடு நடுவிக்காடு கிராம இணைப்பு சாலை பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளித்துக்கொண்டு இருக்கிறது. இதனால் இந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளும், மாணவ மாணவிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரம்மதுக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக மழை காலங்களில் வயோதிகர்கள் சாலையில் நடக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர்.

அப்பகுதியில் வாழும் சமூக ஆர்வலர்கள் - பொதுமக்கள் பலர் பல்வேறு காலகட்டங்களில் சம்பந்தபட்டோரிடம் தொடர் கோரிக்கை வைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் இவர்களிடமிருந்து எவ்வித பணியும் தொடரவில்லை. இந்நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் 21 வது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் - இளைஞர்கள் சார்பில் சிஎம்பி லேன் பகுதியில் கழிவு நீர் வாய்க்கால் - தார் சாலை அமைத்து தர கோரி அதிரை பேரூராட்சி நிர்வாகத்திடம்  மனு அளிக்க திரண்டனர். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது :


படங்கள் : நூவன்னா

2 comments:

 1. அல்ஹம்துலில்லாஹ்...வரவேற்க்ககூடிய விஷயம்..சிஎம்பி லைன்க்கு பெரியவர்கள் மற்றும் இளைஞர்களால் ஏற்படும் நற்செயல்களுக்கு பேரூர் இனியும் காலம் தாழ்த்தாமல் விரைந்து கலப்பணியாற்றிட நானும் இந்த மஹல்லாவாசி என்கின்ற முறையில் கேட்டுக்கொள்கிறேன்.

  பேரூர் தலைவர் இம்மனுவைதான் எதிர் நோக்கி காத்திருந்திருப்பார் என்று நாம் அறிவோம் ஆகவே துரிது நடவடிக்கை எடுக்கும் என்று காத்திருப்போம். இன்ஷா அல்லாஹ்.

  ReplyDelete
 2. பதிவுக்கு நன்றி.‎
  தகவலுக்கும் நன்றி.‎

  பதில் ஏதும் கிடைத்ததா?‎
  ‎ ‎
  இப்படிக்கு.‎
  கோ.மு.அ. ஜமால் முஹம்மது.‎
  த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
  Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
  Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...