Pages

Tuesday, October 28, 2014

அதிரை நண்பர்கள் தயாரித்து வெளியிட்ட 'முகங்கள்' குறும்படம் ! [ காணொளி ]

அதிரை நண்பர்கள் இணைந்து சமூக சீர்திருத்தம் தொடர்பான குறிப்பாக புகை - போதை பாதையில் வழிதவறி செல்லும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் 'முகங்கள்' என்ற தலைப்பில் குறும்படம் ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளனர். கிடைத்த பொன்னான நேரத்தை இதுபோன்ற புதிய முயற்சியாக சுமார் 3 நிமிடங்கள் விறுவிறுப்பாக ஓடக்கூடிய குறும்படத்தை தயாரித்து பொதுநல நோக்கில் வெளியிட்டுள்ள ஏஆர் ஹிதாயத்துல்லாஹ், ஷாஃ பி அஹ்மது, ரஃபீக் ஆகியோரை பலரும் பாராட்டினர்.தகவல் : ஏஆர் ஹிதாயத்துல்லாஹ் 

5 comments:

 1. புதிய முயற்சி வாழ்த்துக்கள் இதற்காக உழைத்த அனைவருக்கும்

  ReplyDelete
 2. 'முகங்கள்' பார்த்தேன் அருமையாக இருந்தது இன்றைய இளைஞர்கள் மத்தியில் அதிகமாக இருக்கும் போதை பழக்கவழக்கங்கள் அதை குறும்படம்மாக எடுத்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்திய 'முகங்கள்' அனைவருக்கும் எனது நன்றிகள்......

  இது குறும்படம் அல்ல ......?குற்றாத்தை கூறும் பாடம்.

  மேலும் இது போன்ற விழிப்புணர்வு குறும்படங்கள் எடுக்க வேண்டும் என்பது என்னுடைய அவா.
  என்றும் அன்புடன்:-
  "அஹமது சாஜித்"

  ReplyDelete
 3. Excellent...Go ahead with new topic...

  ReplyDelete
 4. பதிவுக்கு நன்றி.‎
  தகவலுக்கும் நன்றி.‎

  நமதூரில் ஒரு சிலர், சமூக நலனில் அக்கறை உள்ளவர்கள், தங்களால் ‎இயன்ற அளவு விழிப்புணர்வுகளை பல கோணங்களில் தூண்டி மக்கள் ‎மத்தியில் எப்படியாவது ஒரு வீரிய நல்ல பாதையை அமைக்க வேண்டும் ‎என்று அரும்பாடு படுகின்றனர்.‎

  மேலும், அரும்பாடு பட்டு, இதுமாதிரி விளக்கங்களை குடும்படம் ‎வாயிலாகவும் விளக்குகின்றனர். இவர்களுடைய நேர்மறையான ‎சிந்தனையை பாராட்டாமல் இருக்க முடியாது.‎

  ஆனால், இதையும் பொருட் படுத்தாது எதிர்மறையான சிந்தனையில் ‎இருக்கும் பலரை நினைக்கும் போது, எப்படி விவரிப்பது என்றே ‎புரியவில்லை.‎

  இருந்தாலும், ஒரு நேரம் வரும், அந்த நேரம் முட்டி மோதி ‎அலைக்களுக்கப் பட்டு ஒரு தெளிவுக்கு வரும்போது எதிர்மறையான ‎சிந்தனைகள் அனைத்தும் பறந்து மறைந்து போகும்.‎

  ஆனாலும், அதுவரைக்கும் பொறுமையுடன் இருப்பது ஆகாதது, மாறாக ‎விழிப்புணர்வுகளை தூண்டிக்கொண்டே இருக்க வேண்டும். ‎
  ‎ ‎
  இப்படிக்கு.‎
  கோ.மு.அ. ஜமால் முஹம்மது.‎
  த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
  Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
  Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

  ReplyDelete
 5. நல்லதொரு முயற்சி. இத்தகைய விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் மெசேஜ்கள் பற்றி குறும்படமாகவும் கட்டுரையாகவும் பதிந்து அடிக்கடி நினைவூட்டுவது அவசியமே. வாழ்த்துக்கள்.

  இன்னும் எண்ணிலடங்கா எத்தனையோ அவலங்கள் உள்ளன. அவைகளை இப்படித்தான் வெளிக்கொண்டு வர வேண்டும்.

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...