Pages

Monday, October 27, 2014

வெள்ளத்தில் மூழ்கிய அதிரை பேருந்து நிலையம் ! [ படங்கள் இணைப்பு ]

அதிரையில் இன்று காலை 11 மணியளவில் கொட்டி தீர்த்த கன மழையால் பேருந்து நிலையப்பகுதி வெள்ளத்தால் மூழ்கி காணப்படுகிறது.

அதிரையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் பேருந்து நிலைய பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது. முன்னதாக இதுகுறித்து உள்ளூர் நிருபர்கள் நெடுஞ்சாலை துறையின் கவனத்திற்கு எடுத்து சென்றனர். இன்று அல்லது நாளை சீரமைத்து தருவதாக வாக்குறுதி அளித்து இருக்கின்றனர். அதன்படி இன்று பழுதடைந்த பகுதியை நேரடியாக பார்வையிட்டனர்.

இந்நிலையில் இன்று காலை மீண்டும் திடீரென பெய்த கன மழையால் பேருந்து நிலைய பகுதி வெள்ளத்தால் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த பகுதியின் சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. இந்த குழிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் பள்ளம் எது மேடு எது என்று தெரியாமல் பயணிகள் விழுந்து எழுந்து செல்கின்றனர். இந்த பகுதியின் வர்த்தகர்களும், மாணவ மாணவிகளும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

மழை நீர் தேங்கி காணப்படுவதால் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே பயணிகள் மற்றும் பொதுமக்கள் நலன்கருதி பேருந்து நிலையத்தில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றி, குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் பேருந்து நிலைய பகுதியை சீரமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் பயணிகள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி மற்றும் படங்கள் : 
எம் எம் அசாருதீன் 


3 comments:

 1. அரசு நல்ல ரோடு போடுதோ இல்லையோ தற்போதைக்கு அதிரைக்கு ஸ்டீம் போட்டு கொடுத்தால் நல்லாயிருக்கும்.

  ReplyDelete
 2. அடிப்படை கட்டமைப்பு இல்லாததாலும் சாலையோர ஆகிரமப்பால் தண்ணீர் எல்லா இடங்களிலும் தேங்கி நிற்கும் இதனால் டெங்கு காய்ச்சல் பரவும் இதிலிளுருந்து விடுபட சில டிப்ஸ்

  -தண்ணீரை நன்கு காய்ச்சி, ஆற வைத்து குடிக்க வேண்டும்.

  -சூடான உணவையே சாப்பிட வேண்டும்; பழைய உணவுகள் வேண்டாம்.

  -வேக வைக்காத உணவுகள் வேண்டாம்

  -தடித்த தோல் உடைய பழங்களை சாப்பிடலாம்

  -கையேந்தி பவனில் சாப்பிடுதல் கூடாது; கடையில் சாப்பிட நேர்ந்தால் சுடு தண்ணீர் கேட்டு வாங்கி குடியுங்கள்.

  -வீடுகளைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் பிளாஸ்டிக் பை, மட்டை இவைகளை அகற்றினால் தண்ணீர் வெளியேறும்.

  ReplyDelete
 3. முக்கிய வீதி, இப்படி அலங்கோலமாக இருக்குதே! இதுக்காவது ‎வெட்கப்பட்டார்களா? பேரூர் ஆட்சி நிர்வாகிகள். இதை பாருக்கும்போது ‎அவர்கள் ஏதோமாத்ரி காட்சி தருகின்றார்கள் போல் இருக்கின்றது.‎

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...