Pages

Sunday, November 30, 2014

மண் வளத்தை பாதுகாக்க - நீர் ஆதாரத்தை பெருக்க அதிரையில் 30 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி ! [ படங்கள் இணைப்பு ]

தமிழக முதல்வர் மண் வளத்தைப் பாதுகாக்கவும், நீர் ஆதாரத்தைப் பெருக்கவும் சிறப்பான முறையில் திட்டங்கள் செயல்படுத்த உத்தரவிட்டதன் அடிப்படையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் இயற்கை வளத்தினை பெருக்கும் நோக்கில் 30 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் இன்று மாவட்டம் முழுவதும் மரம் நடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 30 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

மரம் நடும் திட்டத்தை இன்று காலை அதிரை காவல்துறை ஆய்வாளர் திரு. ரவிச்சந்திரன், பேரூராட்சி தலைவர் அஸ்லம், துணை தலைவர் பிச்சை, பேரூராட்சி செயல் அலுவலர் முனியசாமி, அரசு மருத்துவனையின் மருத்துவர்கள், வார்டு உறுப்பினர்கள் சேனா மூனா ஹாஜா முகைதீன், அப்துல் லத்திப், சிவக்குமார், அபூதாஹிர், முத்துக்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டார்கள். அதிரை பேரூராட்சி அலுவலகம், காவல் நிலையங்கள், அரசு மருத்துவமனை, பள்ளிகள், கல்லூரி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மரங்கள் நடப்பட்டு வருகிறது.

4 comments:

 1. மரம்நாடும்திட்டம்நல்லதிட்டமே!அதற்க்குதண்ணீர்ஊற்றிவளர்துக்காப்பதுயார்?இப்போதுமரம்நடும்போதுபோட்டோவுக்கு போஸ் கொடுப்பவர்கள் தண்ணீர் ஊற்றவருவார்களா? மரம்வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்ற மூதோர் மொழி மெய்படுமா? சுமார்அறுபதுஆண்டுகளுக்குமுன்புகாங்கிரஸ்அரசுஇந்த திட்டத்தை கொண்டு வந்தது. காதிர்மொஹிதீன் உயர் நிலைப்பள்ளி மாணவர்களாகிய நாங்கள் இப்பொழுது கல்லூரி இருக்கும் இடத்தில் மரங்கள் நட்டோம். அதன் பிறகு அதை திரும்பி பார்க்ககூட யாருமேயில்லை! வச்சமரம் எல்லாம் பச்ச தண்ணி காணாமல் மூச்சடைத்து பட்டுப்போச்சு! அந்தமரங்களை நீருட்டிகாத்திருதால்இப்போது மரம்நடும் அவசியம் வந்திருக்காது.. பின்புசுமார்இருபதுஆண்டுகளுக்குமுன்பு''வீட்டுக்கொருமரம் வளர்ப்போம்''என்றகோஷத்தைஅரசுஅறிவித்தது.''மரம்வளர்க்கிறோம்.வீடுகொடுப்பீர்களா?''என்றுஎதிரொலிவந்தது.ஊரெங்கும் பறவிகிடக்கும்குப்பைகளைஅள்ளஊராட்சிமுன்வராதநிலையில்நட்டமரத்துக்குநீர்வார்ப்பதுயார்?இதெல்லாம்மக்களைதூண்டி அவர்கள்கவனத்தைதிருப்பும்அரசியல்ஸ்டண்ட்!

  ReplyDelete
 2. மரங்களையும், இயற்க்கை வளங்களையும் அழித்து வரும் இந்த கால கட்டத்தில் இது போல் மரங்களை நடுவது மிகவும் பாராட்டத்தக்கது, முந்தைய காலங்களில் எப்படி மரங்கள் நீர் பெற்று வளர்ந்ததோ அது போல் இதுவும் தனக்கு தேவையான நீர் பெற்று வளரும், விதை விதித்தவன் வினை அறுப்பான், மரத்தை நட்டவன் மனிதன் தண்ணீர் கொடுப்பவன் (மழையை) அல்லாஹ்!

  ReplyDelete
 3. அம்மா உணவகத்தில் தயாராகும் உணவுகள் நேரடியாக ஹோட்டலுக்கு சப்ளை பண்ணுவதாக மக்கள் கருதுகிறார்கள் காரணம் உணவகத்தில் உணவு இல்லை. மரங்களை இப்போ வெட்டுவது சமூக விரோதிகள் கிடையாது அரசியல்வாதிகள் ஆசிவுடன் செயல்படும் பினாமிகள்.

  மரம் நட்ட வேண்டும் என்று கோரிக்கை மக்கள் வைக்கல, துப்புரவு சுகாதாரம் தேவை அப்படி பார்த்தால் " Clean India " திட்டத்தை பின்பற்றி அதிகாரிகள் துடப்பத்தை எடுத்து தெருவை சுத்தம் செய்ய வேண்டும் , செய்யா மாட்டார்கள் ;)

  மரம் நட்டா காசுபார்க்கலாம் நாமல்ல அரசியல்வாதிகள்!

  ReplyDelete
 4. புங்கை மர நண்பர்கள் (சிஎம்பி லைன் இளைஞர்) அவர்களால் ஒவ்வொரு நாளும் சுபுஹ் தொழுகைக்கு பிறகு கடந்த 10 வருடத்திற்க்கு முன்பாவே சிஎம்பி லைன் இருபுறமும் மரக்கன்று வைத்து மிக செழிப்பாக பலருக்கு நிழல் மற்றும் சுகாதார காற்றை தந்துக்கொண்டுதான் உள்ளது என்பது நிதர்சனமான உண்மை.

  தற்பொழுது கூட அவர்கள் இந்த அரும்பணியை எந்தவொரு விளம்பரமின்றி செயல்பட்டு வருகின்றனர், அல்ஹம்துலில்லாஹ்...மறுமையில் நற்க்கூலியை வல்லவன் ரஹ்மான் வழங்கிட செய்வானாக...ஆமீன்

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...