Pages

Saturday, November 29, 2014

அமீரகத்தில் அதிரைக்கு பெருமை சேர்த்து தந்த இலியாஸ் ! [ படங்கள் இணைப்பு ]

எதிர்வரும் அமீரகத்தின் 43வது தேசிய தின கொண்டாட்டங்களில் ஒன்றாக அதிரை சகோதரர் ஒருவர் நேர்மைக்காக பாராட்டப்பட்டுள்ளது அமீரக வரலாற்றில் ஒன்றாகிபோனது.

நமதூரை சேர்ந்த மர்ஹூம் சாகுல் ஹமீது அவர்களின் மகனும் ஜாகிர் ஹீசைன், அப்துல் காதர் ஆகியோரின் சகோதரருமான இலியாஸ் அவர்களின் நேர்மையான ஓரு செயல் நாங்களும் அதிராம்பட்டிணம் தான் என நம்மையும் உளம்மகிழ செய்துள்ளது.

அப்படி என்ன செய்தார்!!!!!
மிகச்சில இடங்களில் சில்லறைகளுக்காக கொலை வரை செல்லும் ஒரு தேசத்திலிருந்து வந்துள்ள நமக்கு, காசு பணத்தை சம்பாதிப்பதை மட்டும் இலட்சியமாக கொண்டு கடல் கடந்து வந்துள்ள நமக்கு திடீரென ஒர் பணப்பை கிடைத்தால் இயற்கையாய் என்ன செய்வோம், குறைந்தபட்சம் மனதளவிலாவது சலனப்படுவோம் ஆனால் சகோதரர் இலியாஸ் அவர்களுக்கு அப்படி ஒரு நிலை ஏற்பட்ட பொழுது தான் அல்லாஹ்வுக்கு பயந்தவன் என்பதை செயலில் நிரூபித்தார்.

கடந்த 2014 ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி துபை கிளாக் டவர் அருகேயுள்ள EMIRATES NBD பேங்க் வெளிப்புறத்தில் ஒரு பையை கண்டெடுக்கின்றார், உள்ளே திறந்து பார்த்தால் 1000 திர்ஹம் நோட்டு கட்டுக்களாக 50,000 திர்ஹம் அனாதையாக கிடக்கின்றது. (சுமார் 8 ½ லட்சம் இந்திய ரூபாய்) பையுடன் பணத்தை கண்டெடுத்தவரின் கால்கள் உடன் முரக்கபாத் போலீஸ் ஸ்டேசனை நோக்கி விரைந்தது, அங்கே போலீஸாரிடம் பணத்தை ஒப்படைத்த பின்பே நிம்மதியை உணர்ந்துள்ளார்.

2014 நவம்பர் 25 ஆம் தேதி திடீரென முரக்கபாத் போலீஸ் ஸ்டேசனிலிருந்து அழைப்பு வர முரக்கபாத் போலீஸ் ஸ்டேசன் சென்றவருக்கு 43 வது தேசிய தின கொண்டாட்ட நிகழ்வில் இலியாஸ் அவர்களுக்கு போலீஸ் தலைவர் (முதீர்) அவர்கள் கையால் பாராட்டு சான்றிதழும் மொபைல் போன் ஒன்றையும் பரிசாக வழங்கி கவுரவித்தனர். அன்றைய நிகழ்வில் கவுரவிக்கப்பட்ட ஒரே வெளிநாட்டினர் இவர் ஒருவரே.

இவரது நேர்மையை கொண்டாட இந்தியனாக, தமிழனாக, தஞ்சை தரணியனாக, அதிரை மைந்தனாக ஒவ்வொருவருக்கும் உரிமையிருக்கிறது. இஸ்லாம் கற்பித்த வழியில் பிறருக்கு முன் மாதிரியாய் அமைந்த இந்த அழகிய நிகழ்வை போற்றும் விதமாக நாமும் அவருக்காகவும் அவரது குடும்பத்தினருக்காகவும் ஏகன் அல்லாஹ்விடத்தில் பிரார்த்திப்போமாக!

அதிரை அமீன்

27 comments:

 1. Congratulation Mr. Ilyas. Allah will accept your Good Deeds

  ReplyDelete
 2. மாஷா அல்லாஹ் .. மப்ரூக் மப்ரூக் மப்ரூக்

  அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக ஆமீன்...

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள்.

  Honesty is the one main concept of Islam...... Mr.Eliyas your are honesty is most appreciating and Ideal for every one.

  ReplyDelete
 6. மாஷா அல்லாஹ்

  ReplyDelete
 7. அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக ஆமீன்.............

  ReplyDelete
 8. மாஷா அல்லாஹ்

  ReplyDelete
 9. இஸ்லாமியரின் கடமையை செய்து அல்லாஹுவின் நல் பொருத்தத்தை பெற்று உள்ளீர்கள், வாழ்த்துக்கள் நண்பன் இல்யாஸ்.

  ReplyDelete
 10. அதிரைக்குப் பெருமை சேர்த்துத் தந்த தாங்களது நேர்மையான நடத்தையும்,உயரிய எண்ணமும், பெருந்தன்மையும் பாராட்டப் படவேண்டியவை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. அதிரை இன்று பெருமைப்படுகிறது. அனைத்து மக்களின் உள்ளார்ந்த வாழ்த்துக்கள் பலகோடிக்கு சமானது என்பதைவிடவும் மேலானது.

  ReplyDelete
 12. பதிவுக்கு நன்றி.‎
  தகவலுக்கும் நன்றி.‎

  அருமை, அருமை, இந்த நேர்மை இறுதிவரை உங்களோடு வர எல்லாம் ‎வல்ல நாயனின் துணை உங்களோடு இருப்பதாக ஆமீன்.‎

  வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.‎
  ‎ ‎
  இப்படிக்கு.‎
  கோ.மு.அ. ஜமால் முஹம்மது.‎
  த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
  Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
  Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

  ReplyDelete
 13. சகோதர் இல்யாஸ் அவர்கள் செய்த நல்லறத்திற்க்காக கிடைத்த அமீரக தேசிய விருது இங்கு இந்தியா தேசிய விருதுக்கு சம மானதாக கருதுகின்றேன். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்

  ReplyDelete
 15. அட டா அருமை அருமை. என்ன ஒரு அருமையான செய்தி, கேட்பதற்கு அவ்வளவு சந்தோசமும், பெருமையாக இருக்கு தம்பி இலியாஸ் செய்த காரியம். இந்தியாவின் முதல் குடிமகன் ஜனாதிபதி போல ஊருக்கு நல்ல பெயரையும் புகழையும் தேடித்தந்த தம்பி இலியாஸ் "அதிரை மண்ணின் மைந்தன் இலியாஸ் " என்று புகழாரம் சூட்டி அழைப்போம்.

  அமீரகத்தில் வாழ்த்துக்கள் பெற்ற தம்பி இலியாஸ் நம்மவூர் மாணவர்கள் மத்தியில் பாராட்டி கொவ்ரவிப்பதன் மூலம் சிறந்த வருங்கால தலைவர்களை உருவாக்கலாம். தயவு செய்து அரசியல்வாதிகளை கூப்பிட்டு விழா வைத்துடாதீங்க அவங்க தான் பிறந்த நாள் விழாவுக்கு 50 லட்சம் மரக்கன்று நட்டோமுன்னு சொல்லி போஸ்டர் ஒட்டி காசு வாங்கும் கூட்டம்.

  தம்பி, அதிரை மண்ணின் மைந்தன் இலியாஷ்க்கு 50,001ம் கரவோசையுடன் வாழ்த்துக்கள், நன்றி!!

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...