Pages

Saturday, December 20, 2014

நமக்கு நாமே திட்டத்தை கையிலெடுத்த குலாப்ஜான் அன்சாரி !

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டு பகுதியில் காணப்படும் குடியிருப்பு பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீர் அப்பகுதியின் சாலையோரத்தில் புதைக்கப்பட்ட குழாய் மூலம் வெளியேறி வந்தது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு குழாயில் ஏற்பட்ட உடைப்பால், இதிலிருந்து கழிவு நீர் வெளியேறி பழைய போஸ்ட் ஆபீஸ் பகுதியின் பிராதன சாலையில் ஓடிக்கொண்டிருந்த்தால் இப்பகுதியின் வர்த்தகர்கள் - குடியிருப்புவாசிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வந்தனர். வெளியேறி வரும் கழிவுநீர் துர் நாற்றம் வீசி வருவதாகவும் கூறப்பட்டது.

இதுதொடர்பாக அதிரை பேரூராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து இருந்தனர். இந்நிலையில் கடந்த 16-12-2014 அன்று அதிரை பேரூராட்சியின் சார்பில் துப்புரவு மேற்பார்வையாளர் நாடிமுத்துவின் மேற்பார்வையில் உடைந்த வடிகாலை சீர் செய்யும் பணிகளில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டும், மீண்டும் கழிவு நீர் கசிந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் குடியிருப்பு பகுதியிலிருந்து வெளியேறும் கழிவு நீரை பிராதன வடிகாலில் கொண்டு சேர்ப்பதற்காக இந்த பகுதியில் வசிக்கும் குலாப்ஜான் அன்சாரி தனது சொந்த செலவில் சுமார் 300 அடி தூரத்திற்கு குழாய்களை புதைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக சாலையோரத்தில் பள்ளம் தோண்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

3 comments:

 1. உங்களின் பொது நல சேவைக்கு வாழ்த்துக்கள். அலட்சியமாக செயல்படும் அரசு அதிகாரிகளின் செய்ய வேண்டிய வேலை நீங்கள் செய்வது வியப்பாக உள்ளது, இப்படி அடிப்படை விஷயத்தை கூட பேருரார்ச்சி செய்ய முன்வரவில்லை என்றால் வேரேதர்க்கு இவர்கள்? மக்களுக்கு அதிகாரிகளா? இல்ல அரசியல்வாதிக்கு கையாளுகளா?

  பல மனுக்கள் நீங்கள் கொடுத்தும் அது செவிடன் காதில் ஊதிய சங்கு போல ஆகிவிட்டது அப்படி என்றால் இனி அதிகாரிகளை நம்பி பலன் இல்லை இதே நிலை நீடித்தால் ஊரின் சுகாதாரம் என்னாவது?

  தேர்தல் நேரத்தில் செயல்படும் நபரை தேர்ந்தெடுக்க தவறிவிடுகிறோம் அதன் பலன் தான் இது என தோன்றுகிறது.

  நமக்கு நாம திட்டத்தை செயல்படுத்த வீட்டு வரி வசூல் செய்து நாம் நிறைவேற்றினால் அதிகாரிகள் என்ன செய்வார்கள்?

  ReplyDelete
 2. அரசை எதிர்பார்த்தும் அது சரியாக பலனளிக்காமல் போகவே மக்களின் சிரமத்தை போக்கும்நோக்கில் தானே முன்வந்து தன் சொந்த செலவில் இப்பணியினை மேற்கொள்ளும் அன்சாரி காகாவின் சேவை அளப்பறியது. தொடரட்டும் உமது பணி

  ReplyDelete
 3. Namkku naame thittam enpathu arasin pangu irukkum . Aanaal ithu sontha selavil sari panniyathu. Arasukkum itukkum sambantham illai enparhai ariyavum

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...