Pages

Sunday, December 21, 2014

ஐக்கிய தேசிய மக்கள் கட்சியின் மாநில தலைவர் அதிரை முஹம்மது காசிம் திடீர் நீக்கம் !

'ஐக்கிய தேசிய மக்கள் கட்சி' என்ற பெயரில் புதிய கட்சியொன்று கடந்த சில வாரங்களுக்கு முன்பு உதயமானது. இதன் நிறுவன தலைவராக முஹம்மது இப்ராஹீம் அவர்களும், மாநில தலைவராக முஹம்மது காசிம் உள்ளிட்ட ஏனைய பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். இதன் தலைமையகம் அதிரை பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் கட்சியின் மாநில தலைவராக பொறுப்பு வகித்து வந்த அதிரை முஹம்மது காசிம் என்பவர் கட்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிப்பு செய்யப்பட்டது.

இது குறித்து ஐக்கிய தேசிய மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அதிரை முஹம்மது இப்ராஹீம் நம்மிடம் கூறுகையில்...
'கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டதால் ஐக்கிய தேசிய மக்கள் கட்சியின் மாநில தலைவராக பொறுப்பு வகித்த முஹம்மது காசிம் நீக்கப்பட்டுள்ளார். விரைவில் கட்சியின் பொதுக்குழு கூடி புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும்' என்றார்.

4 comments:

  1. எப்படி தான் உங்களாள இப்படி காமெடி பன்ன முடியுதே தெறியள.
    ஆனா நல்லா பண்ணூறீங்க.,

    ReplyDelete
  2. Is this important news of Adirai?

    ReplyDelete
  3. போட்டாவை பார்த்தால் மானில தலைவர் ஈரானில்லிருந்து வந்தவர் போல் தெறிகின்றது தேசியத்திற்க்கு ஐக்கிய கட்சி மானில அளவில் தலைவர்கள் ஊர்ரளவில் ஒன்றும் தெறியவில்லையே?

    ReplyDelete
  4. இன்னும் எத்தனை கட்சிகள் வரப்போவோதோ தெரியவில்லை, ‎வானவில்லில் மொத்தம் ஏழு வண்ணங்கள் உள்ளன. (V=violet, I=indigo, B=blue, ‎G=green, O=orange, Y=yellow, R=red) இந்த வண்ணங்கள் வரிசைப்படி இருக்கும், ஏழு ‎கலர்களையும் வைத்து ஒரு கட்சி வந்தாலும் ஆச்சரியப்பட தேவை ‎இல்லை.‎

    ஆனா, இந்த ..........................!!!!!!!!!!!!!!!?????????????????‎

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...