Pages

Thursday, December 25, 2014

மல்லிபட்டினம் மனோராவில் சலங்கை நாதம் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு !

தென்னகப் பண்பாட்டு மையம் சார்பில் சலங்கைநாதம் 2014 தேசிய நாட்டுப்புற கலைவிழா மற்றும் கைவினைப் பொருட்காட்சி கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது.
             
அண்மையில் நிகழ்ச்சியை ஆளுநர் தஞ்சையில் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் மனோரா, கல்லணை, அணைக்கரை, கும்பகோணம் உள்ளிட்ட இடங்களில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
               
புதன்கிழமை மாலை மல்லிபட்டினத்தை அடுத்த மனோராவில் சலங்கை நாதம் 2014 கலைநிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் என்.சுப்பையன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கடற்படை துணை கமாண்டர் ஆர்.டி.திரிவேதி, பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அரங்கநாதன், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் பாஸ்கரன், பேராவூரணி வட்டாட்சியர் மாணிக்கவள்ளி, சேதுபாவாசத்திரம் ஒன்றியப்பெருந்தலைவர் குழ. சுந்தர்ராஜன், பேராவூரணி அதிமுக ஒன்றியச் செயலாளர் உ. துரைமாணிக்கம், ஒன்றிய துணைப்பெருந்தலைவர் இளங்கோ, ஒன்றியக் கவுன்சிலர்கள் எஸ்.அப்துல் வஹாப், பூமாலை ராஜேந்திரன், ஊராட்சி மன்றத் தலைவர் மருதமுத்து, நாடியம் மதிவாணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
               
விழாவில் அசாம் குழுவினரின் லவட்னா நடனம், கர்நாடக குழுவினரின் நகரி, ஆந்திரா துசாடி உள்ளிட்ட பல்வேறு மாநில குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாவட்ட ஆட்சியர் பொதுமக்களோடு அமர்ந்து கலைநிகழ்ச்சிகளை ரசித்து பார்த்தார். சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் கோவி.ராஜேந்திரன் நன்றி கூறினார். சுற்றுலா அலுவலர் ராஜசேகரன்விழா ஏற்பாடுகளை செய்திருந்தார். வரும் டிசம்பர் 26 வெள்ளிக்கிழமை வரை மாலையில் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

செய்தி மற்றும் படம்: 
எஸ். ஜகுபர் அலி, பேராவூரணி.

1 comment:

  1. மனோராவில் சலங்கை நாதம் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட VIP மற்றநாட்களில் அவ்விடம் எப்படி உள்ளது என்பதை கவனிக்க வேண்டும். சுற்றலா தளம் என்று சொல்லும் அளவுக்கு இப்போ இல்லை. காலகாலமாக இந்த ஒரு இடம் தான் பொழுது போக்கு, சுற்றலா இடம் என்று அறிவித்து யாரும் வருவதில்லை, காண என்ன இருக்குன்னு நமக்கு தெரியாதா? ஆட்சியாளர் இதில் கவனம் செலுத்தி தரத்தை உயர்த்த வேண்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...