Pages

Monday, February 16, 2015

ஒரத்தநாட்டில் வருகிற 28–ந்தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்: கலெக்டர் தகவல் !

தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் தஞ்சை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்து கலெக்டர் சுப்பையன் நிருபர்களிடம் கூறியதாவது:–
வருகிற 28–ந்தேதி தஞ்சை அருகே உள்ள ஒரத்தநாடு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மிகப்பெரிய அளவில் தனியார்துறைக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

முகாமை வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை நடத்துகிறது. இதில் 100–க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆயிரத்திற்கும் மேற்பட்ட தகுதியானவர்களை தேர்தெடுக்க உள்ளனர்.

முகாமில் தஞ்சை மட்டுமல்லாது பக்கத்து மாவட்டங்களை சேர்ந்தவர்களும் கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்பவர்களுக்கு சிரமம் இல்லாமல் இருப்பதற்கு இணையதளம் வழியாக பதிவு செய்து கொள்ளலாம்.

இதில் ஆட்களை தேர்வு செய்யும் நிறுவனங்களும் பதிவு செய்ய வேண்டும். தஞ்சையில் உள்ள 589 பஞ்சாயத்துகளில் உள்ளவர்களுக்கு உதவிகரமாக இந்த முகாம் இருக்கும்.

இதன் மூலம் வேலை இல்லாதவர்கள் மற்றும் சிறந்த வேலை தேடுபவர்கள் பயன் பெறுவார்கள். இந்த முகாம் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

இதற்காக சிறப்பு பஸ்கள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாமில் முக்கிய நிறுவனமான டி.வி.எஸ். இன்சூரன்ஸ், ஓட்டல்கள், எம்.ஆர்.எப். அயல் நாட்டு வேலைக்கு அனுப்பும் நிறுவனம் ஆகியவை உள்பட பல்வேறு நிறுவனங்கள் பங்கு பெற்று ஆட்களை தேர்வு செய்கிறார்கள்.

இதற்கான கல்வி தகுதி 5 முதல் பட்டப்படிப்பு வரை ஆகும். பதிவு கட்டணம் முற்றிலும் இலவசம். இந்த முகாமில் கருத்துரைகள், எந்தந்த துறைகளில் வேலை வாய்ப்பு உள்ளது என்பது குறித்த ஆலோசனையும் வழங்கப்பட உள்ளது.

இதனை இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி:மாலை மலர்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...