Pages

Tuesday, February 17, 2015

வெயிலை சமாளிக்க அதிரையில் பரபரப்பான விற்பனையில் சர்பத்!

அதிரை சுற்றுவட்டார பகுதியில் இரவில் குளிரும், பகலில் வெயிலுமாக மாறி மாறி சீஷன் இருந்து வருகிறது. பகலில் சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க அதிரையில் சர்பத் வியாபாரம் களை கட்டியுள்ளது. முக்கிய பகுதிகளில் சர்பத் கடைகள் தொடங்கப்பட்டுள்ளது. இங்கே எலுமிச்சை சர்பத், ரோஸ் மில்க் சர்பத், நன்னாரி சர்பத், லெசி, புரூட் மிக்ஸர், மோர், சோடா உள்ளிட்ட குளிர் பானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. பரப்பரப்பாக விற்பனையாகும் சர்பத்தின் விலை ₹ 10

அதிரையில் கடந்த 20 ஆண்டுகளாக சர்பத் வியாபாரத்தை தனது தொழிலாக செய்து வரும் அதிரை அஜீஸ் நம்மிடம் கூறுகையில்... 
'சர்பத்' என்பது அரபுச் சொல்லான சர்பா என்பதில் இருந்தே உருவானது. அதன் பொருள் குடிப்பதற்கானது என்பதாகும். முதன் முதலாக இந்தியாவில் மொகலாய மன்னர்களே சர்பத்தை அறிமுகம் செய்திருக்கிறார்கள். அதிரை சுற்று வட்டாரப்பகுதியில் பகல் நேரத்தில் வெயில் தாக்கம் சற்று கூடுதலாக இருக்கிறது. இதனால் சர்பத் வியாபாரத்தை முன்கூட்டியே துவக்கியுள்ளோம்' என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...