Pages

Friday, March 20, 2015

காமுகனை இழுத்துச் சென்று காவலரிடம் ஒப்படைத்த வீராங்கனை.


மும்பை நகரில் பரபரப்பான கண்டிவ்லி ரயில் நிலையத்தில் பலர் முன்னிலையில் தன்னை மானபங்கம் செய்த காமுகன் ஒருவனை, முடியைப் பிடித்துத் தரதரவென இழுத்துச் சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் பதிந்துள்ளார் கல்லூரி மாணவி இருபது வயது பிரன்யா.


தன்னை சுற்றிலும் நூற்றுக் கணக்கானோர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாலும் யாருடைய உதவியுமின்றி அந்தக் கயவனை இழுத்துச் சென்றிருக்கிறார் பிரன்யா. சம்பவ நாளன்று கல்லூரி முடிந்து மதியம் இரண்டரை மணிக்கு ரயிலில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

கண்டிவ்லி ரயில் நிலையத்தில் இறங்கி அடுத்த பிளாட்பாரத்தில் ரயிலுக்கு காத்திருந்தார். அப்போது அங்கு போதையில் வந்த ஒருவன் தகாத முறையில் அவரின் உடலைத் தொட்டிருக்கிறார். சில நிமிடங்களில் அதிர்ச்சியான பிரன்யா, கையில் வைத்திருந்த பையை வைத்து அவனை அடித்து உதைத்து கிழே தள்ளி அவனது முடியைப் பிடித்துத் தரதரவென காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்று ஒப்படைத்து இருக்கிறார் இந்த வீரப் பெண்மணி பிரன்யா.

இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. (மர்ஹூம்) கோ.முஹம்மது அலியார்.
Human Rights and Consumer Rights Included.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.


1 comment:

  1. மேற்கு வங்காள மாநிலம் கங்னாப்பூர் கிராமத்தில் கிறிஸ்தவ கான்வென்ட் பள்ளிக்கூட71 வயது கன்னியாஸ்திரி கற்பழிப்பு சம்பவம் மிக கொடுமையானது. இத்தகைய குற்றங்கள் தொடர்ந்து - பச்சிளம் சிறார்கள் முதல் வயதானவர்கள் வரை - வயது வித்தியாசம் இல்லாமல் பாதிக்கபடுவது இந்தியாவில் வழக்கமாகி விட்டது. இதற்கு முக்கிய காரணம் - தெரிந்தே குற்றம் புரிந்தவர்கள் உடனடியாக தண்டிக்கபடுவதில்லை. வழக்கு ஆண்டு கணக்கில் நீடித்து மக்கள் மறந்து போய்விட்ட நேரத்தில் சாதாரண தண்டனை உள்ள தீர்ப்புகள் அறிவிக்கபடுகின்றன . எந்த ஒரு குற்றத்திற்கும் ஆறு மாத காலத்தில் தீர்ப்பு வந்து குற்றவாளிகள் கடுமையாக - அதிகபட்ச தண்டனைகளை அளிக்கும்படியாக நமது குற்றவியல் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும். இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று கூடி பாராளுமன்றத்தில் போராட வேண்டும்.செய்வார்களா - எதிர்பார்க்கலாமா?

    பழைய சட்டங்களை திருத்தப் போறாங்களாம் பார்க்கலாம் பொருத்திருங்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...