Pages

Saturday, March 21, 2015

அதிரை அருகே ரெட் கிராஸ் நடத்திய இலவச பொதுநல மருத்துவ முகாம் !

அதிரை அடுத்துள்ள ஏரிபுறக்கரை கிராமத்தில் தஞ்சை ரெட் கிராஸ் சார்பில் இலவசம் பொதுநல மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தஞ்சை ரெட் கிராஸ் சொசைட்டி செயலாளர் முனைவர் திருமதி வசந்தா தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார். முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் மாலா முத்துக்கிருஷ்ணன், ஏரிபுறக்கரை கிராம மீனவர் சங்க தலைவர் முருகேஷ் மற்றும் அதிரை மற்றும் ஏரிபுறக்கரை ரெட் கிராஸ் பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.

தஞ்சை ரெட் கிராஸ் சொசைட்டியின் மருத்துவ அலுவலர் மருத்துவர் சந்திரா அவர்களின் தலைமையில் மருத்துவ குழுவினர் முகாமில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனை, பரிசோதனை, மருந்து மாத்திரைகளை வழங்கினார்கள். இதில் அதிரை மற்றும் ஏரிபுறக்கரை ரெட் கிராஸ் உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...