Pages

Thursday, March 19, 2015

மாணவர்களே.. இவை வெறும் தேர்வுகளே.. இயல்பாக எதிர்கொள்ளுங்கள்!


புழுதிவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஒருவர் கணக்குப் பரீட்சைக்குப் பயந்து தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக இன்று செய்தி.

படிக்கும் ஒவ்வொரு பெற்றோரையும் பதற வைக்கும் செய்தி இது. முன்பெல்லாம் தேர்வு முடிவுகள் வெளியாகும் தருணத்தில்தான் இந்த மாதிரி தற்கொலைச் செய்திகள் இடம்பெறும். இன்று தேர்வு நடக்கும்போதே இம்மாதிரி தற்கொலைகள் நடப்பது, மாணவர்கள் மீது அதிகரித்து வரும் நெருக்கடிகளையே காட்டுகிறது. 'பனிரெண்டாம், பத்தாம் வகுப்புகளுக்கு நடக்கும் அரசுத் தேர்வு மற்றுமொரு தேர்வுதான். பயம் கொள்ள வேண்டாம்' என அவர்களைத் தயார்ப்படுத்துவது, பாடம் சொல்லிக் கொடுப்பதற்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்தது. அதைவிட்டுவிட்டு, 'இந்த எக்ஸாம்ல கோட்டை விட்ட, வாழ்க்கையே போச்சு' என்கிற ரீதியில் பயமுறுத்துவது மாணவர்களுக்கு எந்த வகையிலும் நன்மை தராது. பள்ளியில், வீட்டில், ட்யூஷனில் எந்நேரமும் படித்துக் கொண்டே இருக்கும் மாணவ மாணவிகள், அதை எப்படி தேர்வில் பதட்டமில்லாமல் வெளிப்படுத்த வேண்டும் என்பதை ஆசிரியர்கள் கற்றுத் தரத் தவறிவிடுகிறார்கள். முன்புதான் மார்ச் தேர்வில் கோட்டை விட்டால், குறைந்த மதிப்பெண்கள் பெற்றால் அக்டோபர் வரை காத்திருக்க வேண்டும். இப்போது அந்த கஷ்டம் கூட இல்லை. அடுத்த இரு மாதங்களில் மீண்டும் தேர்வெழுதிக் கொள்ளலாம். தேர்ச்சி பெறத் தவறியவர்கள் தேறலாம்.. குறைந்த மதிப்பெண் வாங்கியவர்கள் அதிக மதிப்பெண் பெற்றுக் கொள்ளலாம். இத்தனை வாய்ப்புகள் இருப்பதால், வாழ்க்கையை முடித்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை... தேர்வுகளையும் மதிப்பெண்களையும்விட உயிர் வாழ்வது மிக முக்கியமானது என்பதை, தேர்வுக்குப் போகும் ஒவ்வொரு மாணவரையும் உணர வைப்பது ஆசிரியர்கள், பெற்றோரின் இன்றியமையாத கடமை. மாணவர்களே... இவை வெறும் தேர்வுகள்தான். வாழ்க்கை இதைவிடப் பெரிது.
நன்றி. தமிழ்கேரீர் இந்தியா  டாட் காம்.இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. (மர்ஹூம்) கோ.முஹம்மது அலியார்.
Human Rights and Consumer Rights Included.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
kmajamalmohamed@gmail.com

5 comments:

 1. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 2. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்ல வேண்டிய நல்ல செய்தி

  ReplyDelete
 5. இத்தேர்வை எதிர்கொள்ளும் அனைத்து மாணாக்களுக்கும் எனது நமமுவந்த வாழ்த்துக்களும் துவாவும்.!


  பரீட்சை எழுதிக் கொண்டு இருக்கும் மாணவ மாணவியர்கள் படித்து உணர வேண்டிய நல்லதொரு விழிப்புணர்வு பதிவு. மாணாக்களே வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு என்கிற தாரகை மந்திரத்தை மனதினில் தக்கவைத்துக் கொண்டு பரீட்சை முடியும் வரை விளையாட்டைத் தவிர்த்து விடா முயற்சியுடன் படித்து மனனம் செய்து கொண்டு பதஸ்டப்படாமல் பரீட்சை எழுதுங்கள்
  நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். அதுதான் நமது முன்னேற்றப் பாதைக்கு முதற்ப்படியாகும். எதையும் எதிர்கொள்ள பழகிக் கொள்ளுங்கள் அதுவே நமக்கு ஏணியாய் உதவும்.

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...