Pages

Saturday, June 27, 2015

உலக மலேரியா எதிர்ப்பு மாத விழிப்புணர்வு முகாம் !

தஞ்சாவூர் மாவட்டஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவுப்படியும், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் டாக்டர். ஆ. சுப்பிரமணி அவர்களின் வழிகாட்டுதல்படியும் உலக மலேரியா எதிர்ப்பு மாத விழிப்புணர்வு முகாம் பட்டுக்கோட்டை வட்டார பொதுசுகாதார துறை மற்றும் ஜே.சி.ஐ பட்டுக்கோட்டை விங்ஸ் சார்பில் ஏனாதி அரசினர் உயர்நிலைப்பள்ளியில் 26.06.2015 வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

முகாமிற்கு பட்டுக்கோட்டை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.கு, அறிவழகன் தலைமை வகித்தார். ஏனாதி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் எம். ரேவதி, தலைமைஆசிரியர் கா. தம்பிதுரை முன்னிலைவகித்தனர்.உதவி தலைமை ஆசிரியர் ஜே.சுந்தர் அனைவரையும் வரவேற்றார்.

வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். கு. அறிவழகன் பேசும்போது:
மலேரியா காய்ச்சல் பிளாஸ்மோடியம் என்னும் ஒட்டுண்ணி மூலம் பரவுகிறது. பிளாஸ் மோடியம் வைவாக்ஸ் வகைமலேரியா மீண்டும், மீண்டும் மனிதனை தாக்கும் தன்மையுடையது.பிளாஸ்மோடியம் பால்சிபாரம்வகை மூளையில் பாதிப்பைஉண்டாக்குவதுடன் நினைவு இழப்பு மற்றும் மரணத்தை ஏற்படுத்தும்.மலேரியா ஒட்டுண்ணிகள், பெண் அனோபிலிஸ்வகை கொசுக்கள் கடிப்பதன் மூலம் பரவுகிறது.

மலேரியா கொசுக்கள் சுத்தமான நீர் நிலைகளான திறந்தவெளி நீர் ஓடைகள், ஆற்றுப்படுகைகள், வயல்வெளி, குளம், குட்டை, வாய்க்கால், மேல்நிலை நீர்த்தொட்டிகள், கீழ்நிலை நீர்த்தொட்டிகள், நீர் சேமித்து வைக்கும் பாத்திங்கள், நீர் ஊற்றுகளில் உற்பத்தியாகின்றன.

மலேரியா காய்ச்சல் முதலில் 5 முதல் 7 நாட்கள்வரை இருக்கும். குளிருடன் கூடியநடுக்கம், உடல், வலி, தலைவலி, ஆகியவைமலேரியாவின் அறிகுறிகளாகும். தீவிரமலேரியாவின் அறிகுறிகளாக அதிகமானகாய்ச்சல், நினைவு இழத்தல், மயக்கம், வாந்தி, சிறு நீர்பிரியாமை, வயிற்றுப்போக்கு, இரத்தசோகை, கடுமையான நீர் இழப்பு ஆகியனகாணப்படும்.

காய்ச்சல் மற்றும் மேற்கண்டஅறிகுறிகள்காணப்பட்டால் பொது மக்கள்அரசு மருத்துவமனைமற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுக வேண்டும். மலேரியா நோய்க்கானசிகிச்சை, பரிசோதனைஇங்கு இலவசமாகவழங்கப்படுகின்றன.

கொசுக்கள் கடிக்காமல் இருக்க, கொசு வலைகளை பயன்படுத்த வேண்டும்.வசிப்பிடங்களை சுற்றி நீர்தேங்காமலும், கொசுக்கள் வளராமலும் பராமரிக்க வேண்டும்.பொது சுகாதார துறை களப்பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார்.

போட்டிகளில் வெற்றி பெற்றமாணவமாணவிகளுக்கு ஜே.சி.ஐ பட்டுக்கோட்டை விங்ஸ் தலைவர் கே.வெங்கடேஷ் பரிசுகளை வழங்கினார். சுகாதார ஆய்வாளர்கள் கே.பாஸ்கரன், வி.ரவிச்சந்திரன், எஸ்.வி.முத்துசாமி, கே. காசிநாதன், எஸ். சந்திரசேகரன், எஸ்.வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டு நலக்கல்வி வழங்கினர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர். வ.விவேகானந்தம் நன்றி கூறினார்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...