Pages

Tuesday, June 16, 2015

கட்டாயம் ஹெல்மெட் அணிய வலியுறுத்தி அதிரை காவல்துறையினர் தீவிர பிரச்சாரம் !

தமிழகத்தில் ஜூலை 1 முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிவது கட்டாயம் ஆக்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு அணியாவிட்டால் மோட்டார் வாகனச் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அதிரை காவல்துறை சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி அதிரையின் பிரதான பகுதியில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

மேலும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அதிரையின் முக்கிய பகுதியில் 'காவல்துறையின் அறிவிப்பும்' வைக்கப்பட்டுள்ளது.
 

1 comment:

  1. ஜூலை, 1ம் தேதி முதல், ஹெல்மெட் போடுவது கட்டாயமாகிறது. மேலும், ஐ.எஸ்.ஐ., முத்திரை கொண்ட, ஹெல்மெட்டே போட வேண்டும் என்றும் ஹெல்மெட் இல்லாமல் பிடிபட்டால், அவர்களின் லைசென்ஸை பறிமுதல் செய்ய வேண்டும். ஹெல்மெட் வாங்கி வந்து, அதற்கான ரசீதை காண்பித்த பின்னரே, அவர்களிடம் டூ வீலரை ஒப்படைக்க வேண்டும் இது தான் நீதிபதி சொன்ன தீர்ப்பு. போடாவிட்டால் என்னவாகும்; ஹெல்மெட் அணியாமல் சென்றால் 100 ரூபாய் அபராதம். இதே தவறை 2வது, 3வது முறை செய்தால் தலா 300 அபராதம் என்று சட்டம் சொல்லுதுஆனால் அப்படி வாங்க மாட்டார்கள் பொதுமக்களிடம் கறந்து விடுவார்கள்.

    தலைகவசம் என்பது உயிர்கவசம் எனவே ஹெல்மெட் போடுங்க உயிரை காத்திடுங்க, ஹெல்மெட் அணிவதை நிரந்தர சட்டமாக்கி போலீசார் கண்காணிக்க வேண்டும். விழிப்புணர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...