Pages

Monday, June 15, 2015

பட்டுக்கோட்டையில் மமக உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரம் !

மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் புதிய உறுப்பினர் சேர்ப்பு திட்டம்-2015 என்ற செயல் திட்டம் தமிழகமெங்கும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய 2 மாநிலங்களிலும் மனிதநேய மக்கள் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகபடுத்த வேண்டும் என்ற நோக்கில் ஜூன் மாதம் முதல் ஜூலை மாதம் வரை புதிய உறுப்பினர் சேர்க்கை பணி நடைபெறுகிறது.

இதில் தஞ்சை தெற்கு மாவட்டம் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் எம். அஹமது கபீர் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் மதுக்கூர் எம். கபார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஐ.எம் பாதுஷா, அதிரை அஹமது ஹாஜா, பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் கங்காதுரை ஆகியோர் முன்னிலை வகித்தார்.

முகாமை மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர்கள் மன்னை செல்லச்சாமி, மதுக்கூர் ராவுதர்ஷா ஆகியோர் துவக்கி வைத்தனர்.

முன்னதாக பட்டுக்கோட்டை நகர துணை செயலாளர் ஜி. வீரமணிகண்டன் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சி முடிவில் பட்டுக்கோட்டை நகர செயலாளர் ஜலாலுதீன் நன்றி கூறினார். இதில் ஏராளமானோர் மனிதநேய மக்கள் கட்சியில் இணைந்து கொண்டனர்.
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...