Pages

Sunday, June 28, 2015

ஆம்பூரில் பதற்றம் !

வேலூர் மாவட்டம், ஆம்பூரைச் சேர்ந்தவர் ஷமீல் அஹமது (26). இவரை ஒரு வழக்கு தொடர்பாக அப்போது பள்ளிகொண்டா காவல் ஆய்வாளராக இருந்த மார்ட்டீன் பிரேம்ராஜ் கடந்த இரு வாரங்களுக்கு முன் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ரகசிய இடத்தில் வைத்து விசாரணை என்ற பெயரில் இளைஞர் சித்ரவதை செய்யப்பட்டதால் காயமடைந்த ஷமீல் அஹமது ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர், வெள்ளிக்கிழமை மாலை இறந்தார். சித்திரவதை எதிர்ப்பு தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்ட அன்று இந்த துயர சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

காவல்நிலையத்தில் வைத்து சித்ரவதை செய்யப்பட்டதால் தான் அவன் இறந்தார். அதனால் கொலை வழக்காக இந்த வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும், இன்ஸ்பெக்டரை கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிபந்தனையின்றி போதுமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இஸ்லாமிய இயக்கங்கள் எழுப்பின.

இந்நிலையில், நேற்று மாலை, 4 மணிக்கு சில அமைப்பினர், பள்ளிகொண்டா போலீஸ் ஸ்டேஷனை, முற்றுகையிட்டனர். இதையடுத்து ஆம்பூரில் 5 டி.எஸ்.பிகள் தலைமையில் ஐநூறுக்கும் அதிகமான போலிஸார் குவிக்கப்பட்டனர். வேலூர் சரக காவல்துறை தலைவர் தமிழ்ச்சந்திரன், எஸ்.பி செந்தில்குமாரி ஆம்பூர்க்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இருப்பினும் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இஸ்லாமிய இயக்கங்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து 1000 த்திற்கும் மேற்பட்டோர் சென்னை பெங்களுரு தங்க நாற்கர சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் விடுத்த கோரிக்கையை ஏற்கவில்லை. இதனால் போலீசாருக்கும் மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில் எஸ்.பி. செந்தில்குமாரி உள்பட 4 போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. இரண்டு பத்திரிக்கையாளர்கள் கல்வீச்சில் காயம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் நந்தகோபால், ஆம்பூருக்கு விரைந்தார். நிலைமையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
 

1 comment:

  1. போலீசார் கைதியை அடித்ததே தவறு. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் தான் தோன்றி தனமாக நடந்து கொண்டால் மிருகத்திற்கும் மனிதனுக்கும் வித்தியாசம் இல்லை. மாஜிஸ்த்ரெட் முன்னிலையில் விசாரணை செய்யாமல் ஐந்து நாள் போலீஸ் விசாரணை என்பது ஏற்றுகொள்ளகூடியது இல்லை. போலீஸ் அடித்தால் மக்களும் திரும்பி அடிக்க வேண்டும் எனபதை ஆம்பூர் மக்கள் நிருப்பித்துள்ளார்கள். அப்பொழுது தான் இதற்க்கு ஒரு விடை கிடைக்கும்.

    ஒரு சில காவல் நிலையங்களில் கட்டப் பஞ்சாயத்து வைத்து காசு பார்ப்பது தான் நடக்குது, அப்பாவி மக்களை கீழ்த்தனமாக நடத்துவது, அவர்கள் மீது பொய் காசு போட்டு உள்ளே தள்ளுவதும் சமீபத்தில் நமதூரில் நடந்தது அதனை வெளிப்படுத்தியும் யாரும் போராடுபவர்களுக்கு துணை போகவில்லை, ஆம்பூர் மக்கள் நம் சமுதாய மக்களுக்கு எடுத்துக் காட்டு, ஒற்றுமை என்றால் இப்படி தான் இருக்கணும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...