Pages

Tuesday, June 16, 2015

அதிரையில் லயன்ஸ் சங்கம் நடத்திய மாதாந்திரக்கூட்டம் !

அதிரை லயன்ஸ் சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் இன்று இரவு சாரா திருமண மஹாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு லயன்ஸ் சங்கத்தலைவர் சாகுல் ஹமீது தலைமை வகித்து வரவேற்புரை நிகழ்த்தினார்.

கூட்டத்தில் லயன்ஸ் சங்க சேவை திட்டங்கள் குறித்து லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் முனைவர் மேஜர் எஸ்.பி கணபதி அவர்கள் பேசினார். லயன்ஸ் சங்கத்தின் சார்பில் நடப்பாண்ட்டில் ஆற்றிய சேவை மற்றும் எதிர்வரும் ஆண்டில் நிகழ்த்த இருக்கும் சேவைகள் குறித்து லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர் எடுத்துரைத்தார். இதன் பின்னர் பேச வந்த லயன்ஸ் சங்க மண்டல ஒருங்கிணைப்பாளர் டி. ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினார்.

முன்னதாக நடப்பாண்டின் செயல் திட்டங்கள் குறித்து லயன்ஸ் சங்க செயலாளர் பேராசிரியர் அல் ஹாஜி எடுத்துரைத்தார். லயன்ஸ் சங்க நிதி நிலை அறிக்கையை பொருளாளர் ஆறுமுகச்சாமி வாசித்தார்.

இதில் லயன்ஸ் சங்க தலைவராக பொறுப்பில் இருக்கும் சாகுல் ஹமீது நடத்தும் கடைசி கூட்டம் என்பதால் கூட்டத்தில் இவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டது. நடப்பாண்டில் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். இதில் லயன்ஸ் சங்கத் தலைவராக ஆறுமுகச்சாமி, செயலாளராக முஜீப், பொருளாளராக இர்ஃபான் சேக் ஆகியோர் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

கூட்ட முடிவில் லயன்ஸ் சங்க பொருளாளர் ஆறுமுகச்சாமி நன்றி கூறினார். இதில்  லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர்கள் எஸ்.எம். முஹம்மது மொய்தீன், சாரா அஹமது, பி. ராமமூர்த்தி, அக்பர் ஹாஜியார், எஸ். ஏ அப்துல் ஹமீது, உடற்கல்வி இயக்குனர் முருகானந்தம் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...