இதையடுத்து தஞ்சை மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர். மீனாட்சி, பட்டுக்கோட்டை வாட்டாசியர் சேதுராமன், மருத்துவர் எட்வின் ஆகியோர் உண்ணாவிரத பந்தலுக்கு நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அரசின் சார்பில் கூடுதல் மருத்துவர் நியமனம் செய்யப்படும் என்ற உறுதியை தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது.
இதைதொடர்ந்து கடந்த 19-05-2015 அன்று முதல் இரவு நேர மருத்துவராக இராமசாமி மருத்துவ பணியை தற்காலிகமாக தொடர்ந்தார். இந்நிலையில் அதிரையின் பிரபல குழந்தைகள் நல மருத்துவர் ஹாஜா முகைதீன் கூடுதல் பொறுப்பாக அரசு மருத்துவமனையில் இரவு நேர மருத்தவ சேவையை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் கீழத்தெருவை சேர்ந்த ரியாஸ் வயிற்று வலியால் துடிக்கும் தனது 1-1/2 வயது குழந்தையை அவசர சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு மருத்துவர் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் அவர்களிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். உடனே ரியாசை உடன் அழைத்துக்கொண்டு அரசு மருத்துவனையில் பணியில் இருக்கும் செவிலியரிடம் இதுகுறித்து விவரம் கேட்டார். அப்போது பணியில் மருத்துவர் இல்லாதது குறித்தும், விடுப்பில் சென்றது குறித்தும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதிர்ச்சியடைந்த அதிரை சேர்மன் அவசர சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் விவரம் குறித்து பணியில் இருக்கும் மருத்துவர்களிடம் உடனடி தகவல் தெரிவிக்க செவிலியர்களிடம் கண்டிப்புடன் கூறினார். மேலும் இதுபோன்ற தவறுகள் தொடரும் பட்சத்தில் மீண்டும் ஊர் மக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை செய்தார்.
நேற்று இரவு வண்டிப்பேட்டை அருகே இருசக்கர வாகனம் காலில் மோதியதில் பலத்த காயமடைந்த சசி குமார் என்ற வாலிபருக்கு மருத்துவமனையில் வழங்கி வரும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
தனியார் மருத்துவ மனையில் சொல்லுவது போல் செவிலியர் சொல்லியுள்ளார் , மாற்று மருத்துவர் இருக்க வேண்டுமே! மக்கள் வரிபனத்தில் சம்பளம் வாங்கிகொண்டு , மக்களுக்கு சேவை செய்யாமல், சாவை தரும் , வெள்ளை உடை அணிந்த எமன்கள் , இவர்கள் மத்தியில் ஒரு சில நல் உள்ளங்கள் இருக்கதான் செய்கிறார்கள். ஆம் ஆத்மி போல் போராட்டம் நடத்த வேண்டும் போல் தெரிகிறது.
ReplyDelete