Pages

Wednesday, June 17, 2015

அதிரை பேரூர் திமுக சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் - அறுசுவை உணவு !

திமுக தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளையொட்டி அதிரை பேரூர் திமுக சார்பில் அதிரை அருகே உள்ள ராஜாமடம் ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு அறுசுவை உணவு, பள்ளி நோட்டு புக்குகள், பேனா உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

இன்று மதியம் அதிரை பேரூர் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அதிரை பேரூர் திமுக செயலாளர் இராம. குணசேகரன் தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை மேற்கு பகுதி ஒன்றிய செயலாளர் ஏனாதி பா. இராமநாதன் முன்னிலை வகித்தார்.

காப்பகத்தில் உள்ள மொத்தம் 30 பள்ளி குழந்தைகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டன. அதிரையின் பிரபல தொழில் அதிபரும், திமுக முன்னோடியுமான பழஞ்சூர் செல்வம் அவர்கள் வழங்கிய நோட்டு புத்தகங்கள், பேனா உள்ளிட்டவை பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. இவற்றை திமுக நிர்வாகிகள் வழங்கினார்கள்.

நிகழ்ச்சி முடிவில் காப்பக பொறுப்பாளர் ஆர்.எஸ்.மணிவண்ணன் நன்றி கூறினார். இதில் திமுக பட்டுக்கோட்டை ஒன்றிய அவைத்தலைவர் கோவிந்தராஜ், திமுக அதிரை பேரூர் அவைத்தலைவர் அப்துல் காதர், துணை செயலாளர் அன்சர்கான், மாவட்ட பிரதிநிதி இன்பநாதன், ஒன்றிய பிரதிநிதி முல்லை மதி, ராஜாமடம் மற்றும் மகிழங்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் திமுக வார்டு பொறுப்பாளர்கள் - உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
 
 
 

 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...