Pages

Sunday, June 21, 2015

கிணற்றில் விழுந்த ஆட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள் ! [ படங்கள் இணைப்பு ]

முத்துப்பேட்டை கிட்டங்கி தெரு பகுதியை சேர்ந்தவர் ஹபீப் முஹம்மது. இவரது வீட்டின் கொல்லைப்புறத்தின் வழியாக அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ஆடு ஒன்று நுழைந்தது அங்குள்ள கிணற்றின் மீது ஏறி மரத்தில் உள்ள இழையை பறித்து தின்றபோது எதிர்பாரதவிதமாக கிணற்றின் உள்ளே தவறி விழுந்தது. உடனே சப்தம் கேட்ட வீட்டில் உள்ளவர்கள் கிணற்றில் உயிருக்கு போராடி வரும் ஆட்டை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே ஆட்டை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கினர்.

சம்பவ இடத்திற்கு வந்த முத்துப்பேட்டை 'சமூக ஆர்வலர்' சுனா ஈனா சுல்தான் இப்ராஹீம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த தீயணைப்பு வீர்கள் கிணற்றில் உயிருக்கு போராடிவரும் ஆட்டை பத்திரமாக மீட்டனர். உடனே அருகில் நின்றவர்கள் தீயணைப்பு வீரர்களின் துரித செயலுக்கு நன்றி தெரிவித்து பாராட்டினர். மேலும் மிகச்சரியான நேரத்தில் தீயணைப்பு நிலையத்தின் கவனத்திற்கு எடுத்துச்சென்ற சுனா ஈனா சுல்தான் இப்ராஹீம் அவர்களுக்கும் நன்றி தெரிவித்து பாராட்டினர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...