Pages

Monday, June 15, 2015

அதிரை பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்: நேரடி ரிப்போர்ட் !

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 17 மற்றும் 19 வது வார்டுகளின் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்து வருவதாக கூறி அதிரை பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் இன்று [ 15-06-2015 ] மாலை 5 மணியளவில் அதிரை பேரூராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் முற்றுகை போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததை தொடர்ந்து ஆர்ப்பாட்ட போராட்டமாக மாற்றப்பட்டது.

ஆர்பாட்ட போராட்டத்திற்கு மதுக்கூர் பேரூராட்சி கவுன்சிலர் கஃபார் தலைமை வகித்து கண்டன உரையாற்றினார். மதுக்கூர் ஃபவாஸ், அதிரை சாகுல், நாச்சிகுளம் தாஜுதீன் ஆகியோர் கண்டன கோஷமிட்டு உரை நிகழ்த்தினார்கள். இதன் பின்னர் பேச வந்த அதிரை அஹமது ஹாஜா 17 மற்றும் 19 வது வார்டுகளின் கோரிக்கைகள் அதிரை  பேரூராட்சி நிர்வாகத்தால் தொடர்ந்து புறக்கணிக்கபடுவதாக குற்றம் சாட்டி பேசினார். மேலும் கோரிக்கைகள் நிறைவேற்றி தராவிட்டால் ஜனநாயக முறையில் அடுத்தகட்ட போராட்டம் நடத்தப்படும் எனக் கூறினார்.

போராட்டத்தில் 10 வது வார்டு கவுன்சிலர் சகோதரி ஜபுரன் ஜெமீலா அவர்களும் இணைந்து கொண்டார். தனது வார்டும் அதிரை பேரூராட்சி நிர்வாகத்தால் புறக்கணிக்கப்படுவதாக குற்றம் சாற்றினார்.

'கத்தினால் கத்திட்டு போகட்டும்' என்று அதிரை பேரூராட்சி தலைவர் மன்ற கூட்டத்தின் போது கூறியதாக ஆர்பாட்டத்தில் கொளுத்தி போட்ட செய்தியால் சிறிது நேரம் அங்கு சலசலப்பு நிலவியது.

ஆர்ப்பாட்ட முடிவில் அதிரை நகர மனிதநேய மக்கள் கட்சி பொருளாளர் செய்யது முஹம்மது புஹாரி நன்றி கூறினார்.

ஆர்பாட்டத்தில் பட்டுக்கோட்டை டிஎஸ்பி பிச்சை தலைமையில், அதிரை காவல்துறை ஆய்வாளர் கண்ணையன் மேற்பார்வையில் 40 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

1 comment:

  1. பேரூராட்சியின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்று எண்ணிய சேர்மன் அவர்கள் உண்ணாவிரதம்/ போராட்டம் நடத்தலாமா? என்று ஆலோசித்தார் என்பதை ஊடகவாயளாக நாம் அறிந்தோம். அவருடைய வேலையை அவரு செய்கிறார் ஆனால் முட்டுக்கட்டையாக இருப்பது நிர்வாகமே, துப்பரவு தொழிலாளர் குறைவு, அதிகாரிகள் அலட்சியம் போன்றவையே காரணம். எந்த வார்டு சுத்தமாக, தன்னிறைவு பெற்றிக்கு? வீட்டு வரி . தண்ணீர் கட்டணம் செலுத்தும் மக்களுக்கு, அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? இரவு நேர மருத்துவர் இல்லாததை கண்டித்து மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் அலுவலக முன்பு தர்ணா போராட்டம் இவர்கள் நடத்துவார்களா?

    அமைப்புகளுக்கிடையே தங்களுடைய காழ்புணர்ச்சி வளர்க்காமல் மக்கள் நலன் கருதி போராடினால் அதனை மக்கள் வரவேற்ப்பார்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...