Pages

Wednesday, June 17, 2015

புண்ணிய மாதத்தை வரவேற்போம்!

என் அன்பிற்குரிய சொந்தங்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்.

இதோ, வந்துவிட்டது இவ்வாண்டிற்கான        رمضان  المبارك    எனும் மாதம். இம்மாதத்தில் அளவற்ற அருளாளன் அல்லாஹ் அமைத்து வைத்துள்ள நற்செயல்களுக்கான கூலிகள் – அவரவர் உளத்தூய்மைக்கு ஒப்ப – அளவற்றவை;  அருமையானவை!

கடந்த மாதங்களில் அறிந்தோ அறியாமலோ சிந்தித்த, செய்த, செய்யத் தூண்டிய, பிறர் செய்ததைப் பாராட்டிய மாற்றமானவற்றை விட்டுத் ‘தவ்பா’ செய்வோம்!

இன்ஷா அல்லாஹ், இந்த ரமழானில், அவற்றை விட்டு ஒதுங்கி, நல்ல சிந்தனைகளில், நற்செயல்களில், அவற்றைச் செய்யத் தூண்டுவதில், பிறர் செய்வதைப் பாராட்டுவதில் முனைந்து பாடுபடுவோம்!

உள்ளங்களைத் திறந்து வைத்துக்கொள்ளுங்கள்!  அவற்றில் தூய்மையை நிரப்புங்கள்!  அருளாளன் அல்லாஹ் அளவற்ற நன்மைகளை அள்ளித் தரக் காத்திருக்கின்றான்.

முறித்த உறவுகளை, முயன்று சேர்த்துக் கொள்ளுங்கள்.  அப்படிச் சேர்க்காவிட்டால், சுவனத்துச் சுகந்தம் நம் பக்கம் வீசாது!  ‘ரஹ்ம்’ எனும் இரத்த உறவுகள் – அவர்களை நாம் சேர்த்துக்கொள்ளாத வரை -  சுவனத்தில் தொங்கிக்கொண்டே இருக்கும்.

நின்றுவிடும் உலக வாழ்க்கையைவிட, நிலையான சுவன வாழ்க்கை மேலல்லவா?  அந்த அருள் பேற்றை அல்லாஹ் நம் அனைவருக்கும் வழங்கி அருள்வானாக!

அன்புடன்,
அதிரை அஹமது
ADT / அமீர்

பரிந்துரை: அதிரை அமீன்

2 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்.

    நல்ல அறிவுடையோடு ரமழானை வரவேற்க்கும் விதம் அருமை அவ்வாரே உல்லங்களை திறந்து தூய்மையுடன் வரவேற்ப்போம்.

    ReplyDelete
  2. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொல்கிறார்கள். ரமலான் மாதம் வந்துவிட்டால் வானங்களின் கதவுகளும், சொர்க்கத்தின் கதவுகளும் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்களுக்கெல்லாம் விலங்கிடப்படுகின்றன. சொர்க்கத்தில் எட்டு வாசல்கள் உள்ளன. அதில் ஒன்று ரய்யான். அந்த வாசல் வழியாக நோன்பாளிகளைத் தவிர வேறு யாரும் நுழைய மாட்டார்கள். நோன்பு வைத்து நன்மையடைவோம்.

    அனைவருக்கும் ரமதான் கரீம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...