Pages

Thursday, June 18, 2015

மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு நகரும் சிகிச்சை வாகனம் !

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு கொடுக்கப்பட்ட நகரும் சிகிச்சை பிரிவு வாகனத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் இன்று மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் பார்வையிட்டு தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி மூலம் மாற்றத்திறனாளி குழந்தைகளுக்கான ரூ.4 கோடியே 41 இலட்சம் மதிப்பீட்டில் 31 நகரும் சிகிச்சை பிரிவு வாகன சேவையினை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தொடங்கி வைத்தார்.  தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ஒரு வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாகனத்தின் மூலம் 6 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளுக்கு ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றது. இம்மையங்களில் மனவளர்ச்சி குன்றிய சிறார்கள், காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத சிறார்கள் மற்றும் பல்வகை மாற்றுத்திறனாளிகள் சிறார்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.   இம்மையங்களுக்கு வந்து பயிற்சி பெற இயலாத சிறார்களுக்கு அவர் தம் இல்லத்திற்கே மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் பணியாற்றும் முடநீக்கி வல்லுநர், பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர், செவித்திறன் பரிசோதகர் மற்றும் பேச்சு பயிற்சியாளர்கள் தேவைக்கேற்ப சிறந்த பயிற்சிகளை நேரில் சென்று அளிக்கப்படும்.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் தொடர்பாகவும் விபரம் அளிக்கப்படும்.  மாற்றுத்திறனாளிகளுக்கு தேவைப்படும் உபகரணங்களும் மதிப்பீடு செய்யப்படும்.  அரசு வழங்கும் இவ்வசதிகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சித் தலைவருடன் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் திரு.கு.சீனிவாசன், மாற்றுத்திறனாளி நல அலுவலர் திரு.இரா.ரவிசந்திரன் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...