Pages

Tuesday, June 16, 2015

WCC அணியின் அபார ஆட்டத்தால் இறுதி போட்டிக்கு தகுதி !

அதிரை வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் ( WCC ) சார்பாக கடந்த 18 ஆண்டுகளாக நடத்தி வந்த மாநில அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டியின் 19 ஆம் ஆண்டு தொடர் போட்டி மேலத்தெரு மருதநாயகம் திடலில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் அதிரை WCC அணியினரும் , பட்டுக்கோட்டை PCC அணியினரும் மோதினார்கள்.

முன்னதாக டாஸ் வென்ற பட்டுக்கோட்டை PCC அணியினர் பீல்டிங் தேர்வு செய்து ஆடினார்.  பேட் செய்த அதிரை WCC அணியினர் 18 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 105 ரன்கள் எடுத்து இருந்தனர்.

இதைதொடர்ந்து விளையாட வந்த பட்டுக்கோட்டை PCC அணியினர் 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடினர். அதிரை WCC அணியினரின் அபார பந்து வீச்சால் 86 ரன்களுடன் பட்டுக்கோட்டை PCC அணி சுருண்டது. 16.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 86 ரன்கள் மட்டுமே எடுத்தது. 20 ரன்கள் வித்தியாசத்தில் அதிரை WCC அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து நாளை பகல் நடைபெறும் இறுதி போட்டியில் பங்கு பெரும் வாய்ப்பை பெற்றுள்ளது.

வெற்றி பெற்ற அதிரை WCC அணியை அணியின் முன்னாள் மேலாளர் -ஆலோசகர் சிக்கந்தர், நிர்வாகிகள், பயிற்சியாளர், விளையாட்டு வீரர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

செய்தி மற்றும் படங்கள்:
கே. அப்துல் வஹாப் ( உஜாலா )

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...