Pages

Thursday, June 18, 2015

ஹைதர் அலி, சைஃபுதீன் ஆகியோரின் அபார ஆட்டத்தால் WFC அணி வெற்றி !

அதிரை வெஸ்டர்ன் ஃபுட் பால் கிளப் [ WFC ] நடத்தும் 8 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி நமதூர் மேலத்தெரு மருதநாயகம் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது .

நேற்று இரண்டு செமி ஃபைனல் ஆட்டங்கள் நடைபெற்றது. முதல் ஆட்டத்தில் மேலநத்தம் MFC அணியினரும், பட்டுக்கோட்டை விவேகானந்தா அணியினரும் மோதினார்கள். இரு அணிகளும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்லர் என்பது போல் ஆட்டம் இருந்தது. ஆட்ட முடிவில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தனர். இதன்பின்னர் ட்ரை பிரேக்கர் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் 3-2 என்ற கணக்கில் கோல் அடித்து பட்டுக்கோட்டை விவேகானந்தா அணியினர் வெற்றி பெற்றனர்.

இரண்டாவது ஆட்டமாக அதிரை WFC அணியினரும், பொதக்குடி அணியினரும் மோதினார்கள். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் 3-0 என்ற கணக்கில் கோல் அடித்து அதிரை அணியினர் வெற்றிபெற்றனர். இதில் அதிரை அணியின் நட்சித்திர வீரர்கள் ஹைதர் அலி, சைஃபுதீன் ஆகியோரின் அபார ஆட்டத்தால் அதிரை WFC அணி இலகுவாக வெற்றி பெற்றது. முதல் கோலை ஹைதர் அலியும், அடுத்த இரண்டு கோல்களை சைஃபுதீனும் அடித்தனர். இன்றைய வெற்றிய தொடர்ந்து இறுதி போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளது.

நிகழ்ச்சிகள் அனைத்தையும் சுலைமான், சேக்தாவூது ஆகியோர் தொகுத்து வழங்கினார். ஆட்ட அம்பயர்களாக வாசு தேவன் மற்றும் ஹாஜா நசுருதீன், லைன் அம்பயர்களாக சுலைமான், அப்ஸர் ஆகியோர் சிறப்பாக பணிபுரிந்தனர்.

இன்றைய ஆட்டங்களை காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மைதானத்திற்கு திரளாக வருகை தந்து ரசித்தனர்.

இன்று இறுதி ஆட்டம் நடைபெற இருக்கிறது. இதில் அதிரை WFC அணியும், பட்டுக்கோட்டை VFC அணியும் மோத இருக்கின்றனர். இன்று சரியாக மாலை 4 மணிக்கு துவங்கும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இன்றைய இறுதி போட்டியின் பரிசளிப்பு நிகழ்ச்சியில், இந்த தொடரில் சாதனை நிகழ்த்திய சிறந்த கால்பந்தாட்ட வீரர்களுக்கு சிறப்பு பரிசுகளை பல்வேறு நிறுவனங்கள் வழங்க காத்திருக்கின்றன.

செய்தி மற்றும் படங்கள்:
கே. அப்துல் வஹாப் ( உஜாலா )
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...