Pages

Thursday, July 2, 2015

புதுமனைத்தெரு பகுதியில் ₹ 10 லட்சம் செலவில் வடிகால் அமைக்கும் பணி தீவிரம் !

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 21 வது வார்டு பகுதி சிஎம்பி லேன், புதுமனைத்தெரு குடியிருப்பு பகுதியிலிருந்து வெளியேறும் கழிவு நீரை சீராக கொண்டு செல்ல பேரூராட்சி பொது நிதி ₹ 10 லட்சம் மதிப்பில், 300 மீட்டர் நீளத்தில் கழிவு நீர் வடிகால் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக ஜேசிபி இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கட்டுமான ஊழியர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

இதுகுறித்து அதிரை பேரூராட்சியின் 21வது வார்டு கவுன்சிலர் முஹம்மது இப்ராஹீம் நம்மிடம் கூறுகையில்...
'இந்த பகுதின் குடியிருப்பு பகுதியிலிருந்து வெளியேறும் கழிவு நீரை சீராக கொண்டு செல்வதற்காக பேரூராட்சி பொதுநிதி ₹ 10 லட்சம் மதிப்பில் 300 மீட்டர் நீளத்தில் சிஎம்பி லேன் பகுதியிலிருந்து புதுமனைத்தெரு வழியாக வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதைதொடர்ந்து எனது வார்டு பகுதிகளில் முக்கிய சில பணிகளை மேற்கொள்ள கவனம் செலுத்தி வருகிறேன். இதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறேன். விரைவில் இதுதொடர்பாக அறிவிப்பு செய்வேன்' என்றார்.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...