Pages

Monday, July 13, 2015

குவைத்தில் ₹ 10 கோடி வைத்திருந்த பிச்சைக்காரர் கைது !

வளைகுடா நாடான குவைத்தில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது பிச்சைக்காரர் ஒருவர் அங்குள்ள மசூதி முன்பு நின்று கொண்டு பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்.

அங்கு வருவோரிடம் தன்னிடம் பணமோ, வீடோ எதுவும் இல்லை. எனவே பணம் தாருங்கள் என கேட்டு கொண்டிருந்தார்.

வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் இடம் பெற்றுள்ள குவைத் பக்ரைன் ஓமன், சுத்தார் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரசு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் பிச்சை எடுக்க அனுமதி இல்லை. குறிப்பாக புனித மாதமான ரமலானில் அதற்கு முற்றிலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

எனவே, அந்த பிச்சைக்காரரை போலீசார் கைது செய்தனர். அவரை அல் அக்மதி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் வங்கியில் 5 லட்சம் பணம் போட்டு வைத்திருப்பது தெரியவந்தது.

அது இந்திய பணத்தில் ₹ 10 கோடி ஆகும். எனவே பொதுமக்களை ஏமாற்றியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.

பொதுவாக குவைத்தில் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள்தான் பெருமளவில் பிச்சை எடுக்கிறார்கள். அவர்கள் கைது செய்யப்பட்டு உடனே அங்கிருந்து வெளியேற்றப்படுகின்றனர். கடந்த ஏப்ரலில் அதுபோன்று 22 பிச்சைக்காரர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...