Pages

Tuesday, July 7, 2015

150 ஆண்டுகால பழமை வாய்ந்த பள்ளியின் கட்டுமான பணிக்கு உதவ வேண்டுகோள் !

 
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் ( தஞ்சை - புதுக்கோட்டை செல்லும் பிரதான சாலையில் ) அமைந்துள்ளது ஜாமியா மஸ்ஜீத். இந்த பகுதியில் சுமார் 800 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஊரின் ஒரே பள்ளியாக காட்சியளிக்கும் இந்த பள்ளி சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த பள்ளியில் திருச்சி விமான நிலையத்திற்கு செல்லும் பெரும்பாலான பயணிகள் தொழுகைக்கு பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த சாலை வழியே செல்லும் வெளி மாநில சுற்றுலா பயணிகளும் தொழுது வருவதாகவும், இடப் பற்றாக்குறையின் காரணமாக பள்ளியை விரிவு படுத்தி புதிதாக கட்டி முடிப்பது என நிர்வாகம் மற்றும் ஜமாத்தார்கள் சார்பில் தீர்மானிக்கப்பட்டது என்றும், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியின் கட்டுமான பணியை துவக்கினோம். தொடர்ந்து நடைபெற்று வந்த கட்டுமான பணி, நிதி பற்றாக்குறையால் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய சில பணிகள் மீதம் இருப்பதாகவும், இவற்றை முடிப்பதற்கு நிதி சுமார் ரூபாய் 25 லட்சம் வரை தேவைப்படுவதாக பள்ளி நிர்வாகிகள் நம்மிடம் தெரிவித்தனர்.

பள்ளியின் மீதமுள்ள கட்டுமான பணிக்காக நம்மின் உதவியை எதிர்பார்க்கின்றனர். உள்ளூர் மற்றும் வெளிநாடு வாழ் சகோதரர்கள் தாராளமாய் நிதி உதவி அளித்து பள்ளியின் கட்டுமான பணி தொடர்ந்து நடந்திட உதவுமாறு பள்ளி நிர்வாகிகள் சார்பில் அன்புடன் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

பரிந்துரை: அதிரை பேரூராட்சி கவுன்சிலர் ஹெச். அப்துல் காதர்

நமக்களித்த பள்ளிக்கு சொந்தமான வங்கி கணக்கின் விவரங்கள்:
A/c Name : JAMIA MASJID
Bank Name : State Bank of India
Branch Name : Gandarvakottai
A/c No. 32537631825
Bank IFS code : 0012799

தொடர்புக்கு: 
0091 9865641441 ( முகைதீன் பாட்ஷா ) 
0091 9842365926 ( சாகுல் ஹமீது ) 

இதுதொடர்பாக பள்ளி நிர்வாகிகள் நமக்கு வழங்கி இருக்கும் கடிதம்:
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...