Pages

Wednesday, July 1, 2015

துபாயில் உலகில் முதல் முறையாக 3டி தொழில்நுட்பத்தில் கட்டிடம் !

துபாயில் உலகின் முதல் முறையாக முழுமையாக செயல்படும் முப்பரிமாண (3D) முறையில் அச்சிடப்பட்ட கட்டிடம் உருவாக்கபட உள்ளதாக யுஏஇ நேஷனல் இன்னொவேசன் குழு தெரிவித்துள்ளது. இதன் மூலமாக உலக அளவில் கட்டிடக்கலை கட்டுமான மற்றும் வடிவமைப்பு தொழில்நுட்ப மையமாக  ஐக்கிய அரபு எமிரேட்ஸை உருவாக்க திட்டமிட்டுள்ளது. முன்னணி கட்டிடக்கலை நிறுவனங்களான கிலென்சர், தொர்ண்டன் தொமசெட்டி மற்றும் சிஸ்கா ஹென்னெசே ஆகிய நிறுவனங்களூடன் இணைந்து துபாய் மற்றும் வின்சன் குலோபல் நிறுவனம் செயல் படுத்தவுள்ளது.

சுமார் 2,000 சதுர பரப்பளவுடன் அமையவிருக்கும் இந்த அலுவலகம். இந்த தொழில் நுட்பத்தில் வலுவான கான்க்ரீட் (SRC) கண்ணாடி இழை ஜிப்சம் (GRG) மற்றும் ஃபைபர் நெகிழி (FRP) போன்ற அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டப்படவுள்ளது.

இந்த 3D அச்சிடும் தொழில்நுட்பம் மூலம் 70 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை கட்டிடங்கள் கட்டும் நேரம் குறையும்,  80 சதவீதம் முதல் 50 சதவீதம் தொழிலாளர் செலவுகளை குறைக்க முடியும், மற்றும் கட்டுமான கழிவுகள் 30 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை சேமிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

யுஏஇ துணைத் தலைவர் மற்றும் துபாய் பிரதமர்  ஷேக் முகமது பின் ரஷீத் ஆலோசனையின்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மக்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கமாக இந்த முயற்சிகள் செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தொழில்நுட்பத்துடன் துபாயின் முக்கிய பகுதியில் அமயவுள்ள இந்த கட்டிடம் அனைத்து தரப்பு மக்களும் பயன் படுத்தும் வகயில் அமைக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

நன்றி:தினகரன்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...