Pages

Saturday, July 4, 2015

ஐ.ஏ.எஸ் - ஐ.பி.எஸ் தேர்வு முடிவு: 34 இடங்கள் பெற்று இஸ்லாமிய மாணவர்கள் சாதனை !

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கான மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் சர்வீசஸ் ( UPSC ) தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகின. தமிழகத்தை சேர்ந்த சாருஸ்ரீ என்ற பெண் 6வது இடத்தை பிடித்துள்ளார்.

1,364 பதவிகளுக்கான போட்டித் தேர்வு கடந்தாண்டு முதல் 3 பிரிவுகளாக நடத்தப்பட்டது. கடந்தாண்டு ஆகஸ்டில் நடைபெற்ற முதல்நிலைத் தேர்வில் 4 லட்சத்து 51 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து டிசம்பரில் நடைபெற்ற முதன்மை தேர்வில் 16,286 பேர் பங்கேற்றனர். இதில் தேர்வான 3,303 பேருக்கு கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது.

நேர்முகத் தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு முடிவில், 1236 பேர் வெற்றி பெற்றுள்ளனர். முதல் ரேங் இரா சிங்கால், 2வது ரேங்க் ரேணுராஜ், 3வது ரேங்க் நிதி குப்தா, 4வது ரேங்க் வந்தனாராவ் என முதல் நான்கு இடங்களையும் பெண்களே பிடித்து சாதித்துள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த மாணவி சாருஸ்ரீக்கு 6வது இடம் கிடைத்துள்ளது. சுகர்சா பகத் என்பவர் 5 வது இடத்தை பிடித்துள்ளார். தேர்வு முடிவுகளை upsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இன்று வெளியான தேர்வு முடிவில் 34 இடங்கள் பெற்று இஸ்லாமிய மாணவர்கள் சாதனை நிகழ்த்தியுள்ளனர். இம்முறை முதல் நூறு இடத்தில் 4 இடங்களில் வந்துள்ளனர். மேலும் கடந்த ஆண்டுகளை வீட கூடுதல் இடங்களை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. சென்ற 2010 ஆம் ஆண்டு வெளியான தேர்வு முடிவில் 21 பேரும், 2011 ஆம் ஆண்டு வெளியான தேர்வு முடிவில் 31 பேரும், 2012 ஆம் ஆண்டு வெளியான தேர்வு முடிவில் 30 பேரும், 2013 ஆம் ஆண்டு வெளியான தேர்வு முடிவில் 30 பேரும் தேர்வாகியது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் சர்வீசஸ் ( UPSC 2014  ) தேர்வில் வெற்றிபெற்ற இஸ்லாமிய மாணவர்கள்:
31 - B FOUZIA TARANUM
35 - MUHAMMED ABDAAL AKHTAR
44 - MOHAMMAD ROSHAN
46 - BASEER UL HAQ
107 - ZAINAB SAYEED
112 - SAFEER KARIM
135 - K ARIF HAFEEZ
165 - MOHD IMRAN RAZA
211 - MOHAMMAD SANA AKHTAR
226 - NABEEL AHMAD SAAD
314 - THAMEEM ANSARIYA A
412 - PATHAN ADEEB DAULATKHAN
420 - MODASSAR SHAFI
428 - FARAH ZACHARIAH
429 - SAJU VAHEED A
457 - AFAQ AHMAD GIRI
459 - CH MOHD YASIN
494 - SHEIK ABDUL RAHAMAN S
553 - DEEBA FARHAT
560 - ATHAR AAMIR UL SHAFI KHAN
564 - MOHD SAMEER ISLAM
576 - EHTESHAM WAQUARIB
625 - NOORUL HASAN
675 - SHEIKH SAMI UR RAHMAN
741 - MOHAMMED IKRAMULLA SHARIFF
744 - AZHAR KABIR
878 - RUVEDA SALAM
894 - WAZIM MUSTAFA
914 - MASROOR AHMAD
935 - ANSARI SHAKEEL AHMED
944 - MAQSOOD AHMED
967 - UMAR FAROOQUE
1005 - RAUNAQ JAMIL ANSARI
1149 - MOHAMED ASHRAF J S
1183 - IRFAN HAFIZ
1214 - RIZWAN BASHA SHAIK

தொகுப்பு: அதிரை நியூஸ்
Sources:
http://www.ummid.com/
விகடன்.காம்

1 comment:

  1. 24 முறை பணி இட மாறுதல் ,கிரனைட் ஊழலில் தமிழக அரசையே மிரளவைத்த மன்னன்; முன்னால் மதுரை கலெக்டர் ,என்றும் மதுரை மக்களின் கலெக்டர் சகாயத்தை ரோல் மாடல் ஆக எடுத்து கொள்வீர்களா?

    இந்த இளைய வயதில் சிறந்த IAS அதிகாரியாக இந்திய துணைக்கண்டத்துக்கு சேவை செய்ய தங்களை அர்ப்பணித்து கொள்ள வேண்டி கேட்டுகொள்கிறேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...