Pages

Friday, July 3, 2015

அதிரையில் ADT நடத்தும் புனித ரமலான் மாத தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி !

அதிரை தாருத் தவ்ஹீத் சார்பில் கடந்த வருடத்தை போல் இந்த வருடமும் நமதூர் நடுத்தெரு ஈபிஎம்எஸ் பள்ளி அருகில் புனித ரமலான் மாத இஸ்லாமிய மார்க்க சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

ரமலான் மாதத்தில் இரவு தொழுகைக்கு பிறகு 10 மணி முதல் 11 வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் நேற்று முதல் நாச்சியார்கோவில் மவ்லவி ரஹ்மத்துல்லாஹ் கலந்துகொண்டு சொற்பொழிவு ஆற்றி வருகிறார். முன்னதாக இலங்கை மார்க்க அறிஞர் மவ்லவி அர்ஹம் அவர்களின் சொற்பொழிவு நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்து வருகின்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பினர் செய்து வருகின்றனர்.

நேற்று இரவு நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சியின் போது ( 02-07-2015 ) எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:
 

2 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்,

    தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் அற்ஹம் மௌலவி விஷயத்தில் வரம்பு மீறி செயல்பட்டுள்ளனர். மேலப்பாளையம் பள்ளிவாசலில் காவல் துறையின் அத்துமீறலை எதிர்த்து போராட்டம் நடத்தி காவல் துறையை காவித்துறை என்று பெயர் வைத்துவிட்டு அந்த காவித்துறைடமே முறையிடுவது எந்த வகையில் நியாயம். அவர்களுக்கு பாதகம் என்றால் துரோகி, சாதகம் என்றால் நண்பரா? இதன்மூலன் என்ன விளங்குகிறது, ஒரு முஸ்லிமை பழி வாங்க இவர்கள் காவிகளின் உதவியை கூட கோருபவர்கள்.

    இரண்டாவதாக, இந்த அற்ஹம் மௌலவி இலங்கையிலிருந்து விசிட் விசாவில் வந்து மார்க்க சொற்பொழிவு நடத்துகிறார் அதனால் அவர் இந்தியாவில் சட்டத்திற்கு புறம்பாக தங்கியுள்ளார் என்று புகார் அளித்துள்ளனர். அப்படியானால் த.த.ஜ வினரின் தாயிகள் என்று சொல்லப்படுபவர்கள் வளைகுடா நாடுகளுக்கு மார்க்க சொர்பொழிவாற்றுவதற்கு எந்த விசாவில் செல்கிறார்கள் என்பது ஐய்யப்பாடு.

    மூன்றாவதாக, மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது என்று புகார் அளித்தவர்கள் ஆங்காங்கு தெரு முனை பிரச்சாரம் செய்யும்பொழுது அங்கு வசிக்கக்கூடிய மக்களுக்கு தொந்தரவை கொடுத்ததினால் ஒரு தெரு ஜமாஅத்தே அவர்களை அந்த தெருவிற்குள் பிரச்சாரம் செய்வதற்கு தடை விதித்ததை அனைவரும் அறிவீர்கள். அதேவேளை அந்த தெரு ஜமாஅத்தினர் இவர்களை போல (த.த.ஜ வினரால் சொல்லப்படும் காவித்த்துறையிடம்) காவல் துறையிடம் புகார் அளிக்கவில்லை.

    இதை த.த.ஜ வில் உள்ள பல நடுநிலையாளர்கள் புரிந்து கொண்டு நண்பர் அப்பாஸ் அலி போன்றோரை போல சுயமாக முடிவு எடுக்க வேண்டும் என்பது பல நல்லுள்ளங்களின் ஆவலாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. உண்மையை உரக்கச் சொன்ன சகோதரருக்கு அல்லாஹ் அருள் செய்வானாக!

      Delete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...