Pages

Friday, July 3, 2015

ஜித்தாவில் தஃபாரெஜ் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி !

ஜித்தா, சவூதி அரேபியாவில் வருடந்தோறும் தஃபாரெஜ்-ஜித்தா சார்பில் 'இஃப்தார்' என்னும் 'நோன்பு திறக்கும் நிகழ்ச்சி' நடைபெறுவது வழக்கம்.

அதுபோல் இந்த வருடம்  ஜூன் 28-ஆம் தேதி ஞாயிற்றுகிழமையன்று தஃபாரெஜ்-ஜித்தா சார்பில் ஒன்பதாவது வருட 'இஃப்தார்' நிகழ்ச்சி ஹோட்டல் இம்பாலாவில் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் பல சமுதாயத்தை சேர்ந்த மக்கள் கலந்துக்கொண்டனர்.  குறிப்பாக ஜித்தாவில் இயங்கும் அனைத்து தமிழ் அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகளும், தமிழ் அமைப்புகளின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

வந்திருந்த அனைவருக்கும் நோன்பு திறப்பதற்காக நோன்பு கஞ்சி, பேரித்தம் பழம்,  சமோசா, பக்கோடா, பழ வகைகள், பழச்சாறு, மற்றும் மினரல் வாட்டர் வழங்கப்பட்டது.

மாணவர்கள் ஹசீப் மற்றும் அர்ஷத் கிராஅத்துக்குப்பின், ஷாஹுல் ஹமீது வரவேற்புரை நிகழ்த்தினார்.

இதனை தொடர்ந்து அப்துல் பத்தாஹ் பிரபல பேச்சாளர் “ஷேக் வஜ்டி அக்காரி”-ஐ அறிமுகம் செய்து வைத்தார்.  பின்னர் ஷேக் வஜ்டி அக்காரி பேசும்போது, "இஸ்லாத்தின் நெறிமுறைப்படி வாழ்ந்தால்; எந்தப் பிரச்சனையானாலும் எப்படி எளிதாக வெற்றிப் பெறலாம்" என்று ஆங்கிலத்தில் உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து மேஜர் ராமசாமி, அன்புமணி, கமாலுதீன், அருண்குமார், ஜாகிர் ஹுசைன் ஆகியோர் ரமலான் மாதத்தின் சிறப்புகளையும், நோன்பின் அவசியத்தைப் பற்றியும் பேசியதோடு, இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த  தஃபாரெஜ்-ஜித்தா-வின் சமூக சேவையை பாராட்டினர்.

மீரான் மூஸா தஃபாரெஜ்-ஜித்தா பற்றியும், அது செய்து வரும் சமூக சேவைகளை பற்றியும் பட்டியலிட்டார்.

நிகழ்ச்சியின் முடிவில் வந்திருந்த அனைவருக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டார்களால் அறுசுவை (இரவு) விருந்து பரிமாறப்பட்டது.

ஜமீல் தாவூத், நைனா முஹம்மது, இபுறாஹீம் மரைக்கார் மற்றும் தஃபாரெஜ்-ஜித்தா தலைவர் முஹையதீன் சீனி அலி உள்பட அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் இந்த நிகழ்ச்சிக்கு  ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக பீர் முஹம்மது நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, ஷாஜஹான் நன்றியுரை கூறினார்.

செய்தி மற்றும் படங்கள்:
முதுவை ஹிதாயத்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...