Pages

Wednesday, July 15, 2015

அதிரையில் லயன்ஸ் நடத்திய மாபெரும் மதநல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி !

அதிரை லயன்ஸ் சங்கம் மற்றும் சாரா - லாவண்யா திருமண மஹால்களின் உரிமையாளரும், லயன்ஸ் சங்க மாவட்ட தலைவருமாகிய எம். அஹமது அவர்களின் ஏற்பாட்டில் வருடந்தோறும் நடத்தி வரும் புனித ரமலான் பிறை 27 ல் நடத்திவரும் மத நல்லிணக்க இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று [ 15-07-2015 ] மாலை பட்டுக்கோட்டை ரோட்டில் அமைந்துள்ள லாவண்யா திருமண மஹாலில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு லயன்ஸ் இஃப்தார் நிகழ்ச்சி மாவட்ட தலைவர் எம். அஹமது தலைமை வகித்தார். லயன்ஸ் சங்க உடனடி முன்னாள் ஆளுநர் எம் பிரேம்,
எம். முஹம்மது ரஃபி, பி.வெங்கட்ராமன், வீரபாண்டியன், ஜனார்த்தனன், அண்ணாமலை, வேதமூர்த்தி, அடைக்கலச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

லயன்ஸ் சங்க மாவட்ட ஆளுநர் எஸ். வேதநாயகம் இஃப்தார் நிகழ்ச்சியை துவக்கி வைத்து வாழ்த்தி பேசினார். இதை தொடர்ந்து ஜப்பான் நாட்டில் நடைபெற்ற சர்வதேச லயன்ஸ் மாநாட்டில் வழங்கிய சிறப்பு பதக்கத்தை இப்தார் நிகழ்ச்சி மாவட்ட தலைவர் எம். அஹமது அவர்களுக்கு வழங்கி கெளரவித்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக பட்டுக்கோட்டை நகர் மன்றத்தலைவர் ஆர். ஜவகர்பாபு, புனவாசல் சர்ச் பாதிரியார் அருளானந்த், அரசியல் பிரமுகர் சின்னச்சாமி, ஒரத்தநாடு டிஎஸ்பி எஸ். செங்கமலக்கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு இஃப்தார் வாழ்த்துரை வழங்கினார்கள்.

முன்னதாக லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் பேராசிரியர் கே. செய்யது அஹமது கபீர் வரவேற்புரை ஆற்றினார். 'நோன்பின் மாண்பு' குறித்து காதிர் முகைதீன் கல்லூரி அரபி பேராசிரியர் இத்ரீஸ் சிறப்புரை ஆற்றினார். இதை தொடர்ந்து பேராசிரியர் பர்கத் அவர்களின் சிறப்பு துஆவுடன் இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு செய்யப்பட்டது. நிகழ்ச்சி முடிவில் லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் முனைவர் மேஜர் கணபதி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்க நிர்வாகிகள், மருத்துவர்கள், பேராசிரியர்கள், வங்கி மேலாளர்கள், பத்திரிகையாளர்கள், ஊர் பிரமுகர்கள், அனைத்து மத பிரமுகர்கள் உள்ளிட்ட 800 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை லயன்ஸ் சங்க ஒருங்கிணைப்பு குழுவினர்கள் எஸ்எம் அக்பர் ஹாஜியார், பேராசிரியர் எம் ஏ முஹம்மது அப்துல் காதர், எஸ்.எம் முஹம்மது மொய்தீன், அப்துல் ஹமீது, எம். நெய்னா முஹம்மது, என்யூ. ராமமூர்த்தி, செல்வராஜ், சார்லஸ், டிபிகே ராஜேந்திரன், எம். சாகுல் ஹமீது. எம் ஆறுமுகச்சாமி, எம். முஜிபுர் ரஹ்மான், எஸ்.ஏ.சி இர்ஃபான் சேக், வி.முத்துகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.

1 comment:

  1. Masha Allah.... & May Allah blessing his mercy on you & our brothers....

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...